Friday , March 29 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / சுதந்திரக் கட்சியின் பலர் சஜித்திற்கு ஆதரவு !

சுதந்திரக் கட்சியின் பலர் சஜித்திற்கு ஆதரவு !

சுதந்திரக் கட்சியின் பலர் சஜித்திற்கு ஆதரவு !

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் அங்கம் வகித்த, உள்ளூராட்சி மன்றங்களில் பல்வேறான பதவிநிலைகளில் இருந்த பலர், ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவளிப்பதற்கு தீர்மானித்துள்ளனர்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சின் கண்டி மாவட்ட உடுநுவர பிரதேச சபையின் முன்னாள் தலைவர் பந்துல செனவிரத்ன உள்ளிட்ட குழுவினரே, சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளனர்.

கீழ் மட்டத் தலைவர்களின் கருத்துகளுக்கு செவிசாய்க்காது, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்தமையால், பல்வேறான நெருக்கடிகளுக்கு சுதந்திரக் கட்சி முகம் கொடுக்கிறதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன் சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்கள் பொதுஜன பெரமுனவின் மேடையில் ஏறியபோது, ஹு சத்தமிட்ட கேலிசெய்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அவற்றை பொறுத்துக்கொள்ள முடியாமலே தாம் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

சஜித்திற்கு ஆதரவளிப்பதற்கு தீர்மானித்துள்ள சுதந்திரக் கட்சியின் குழுவில், அக்குறனை பிரதேச சபையின் உறு்பினர் எஸ்.எம். அஸ்வர், உடுநுவர பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் கெமுனு பண்டார என்போரும் அடங்குகின்றனர்.

மேலு , கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் போது, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி, தேர்தலில் போட்டியிட்டவர்களும் சஜித்திற்கு ஆதரவு வழங்கவுள்ள குழுவில் அடங்குகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

 

Tamil News

 

 

 

 

Tamil Technology News

 

Tamilnadu News

 

 

 

 

World Tamil News

 

 

 

 

World Newspapers And sites

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv