Friday , March 29 2024
Home / செய்திகள் / தமிழ்நாடு செய்திகள் / மு.க. ஸ்டாலின் தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுடன் இணைந்து மெரினாவில் உண்ணாவிரத போராட்டம்

மு.க. ஸ்டாலின் தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுடன் இணைந்து மெரினாவில் உண்ணாவிரத போராட்டம்

மு.க. ஸ்டாலின் தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுடன் இணைந்து மெரினாவில் உண்ணாவிரத போராட்டம்

மு.க. ஸ்டாலின் தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுடன் இணைந்து மெரினா காந்தி சிலை முன்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழக சட்டசபையில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. எதிர்க்கட்சிகள் அனைத்தும் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது. ஆனால் சபாநாயகர் அதை நிராகரித்துவிட்டார். இதனால் சபையில் அமளி ஏற்பட்டது.

இதனால் சபையை 3 மணி வரை ஒத்திவைத்தார் சபாநாயகர். அப்போது திமுக எம்.எல்.ஏ.க்கள் சட்டசபைக்குள் தர்ணா போராட்டம் நடத்தினார்கள். இதனால் அவர்கள் வலுக்கட்டாயமாக அவைக்காவலர்களால் வெளியேற்றப்பட்டனர். மு.க. ஸ்டாலின் உள்பட தி.மு.க.வில் பலர் தாக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்ட ஸ்டாலின், ஆளுநர் வித்யாசாகர் ராவைச் சந்தித்து, தாங்கள் தாக்கப்பட்டது குறித்து முறையிட்டார். பின்னர் ஆளுநர் மாளிகையில் இருந்து புறப்பட்டு நேராக மெரினாவில் உள்ள காந்தி சிலை அருகில் வந்தார்.

அங்கு காந்தி சிலை முன்பு திடீரென எம்.எல்.ஏ.க்களுடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார் ஸ்டாலின். அவருடன் தி.மு.க. எம்.பி.க்களும் பங்கேற்றுள்ளனர். இதனால் மெரினாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

Tamil News

 

 

 

 

Tamil Technology News

 

Tamilnadu News

 

 

 

 

World Tamil News

 

 

 

 

World Newspapers And sites

Check Also

திருமணம் முடிந்த அன்றே மனைவியை கல்லால் அடித்து கொன்று கணவன் தானும் தற்கொலை

திருமணம் முடிந்த அன்றே மனைவியை கல்லால் அடித்து கொன்று கணவன் தானும் தற்கொலை

திருமணம் முடிந்த அன்றே மனைவியை கல்லால் அடித்து கொன்று கணவன் தானும் தற்கொலை முதலிரவில் புது பொண்டாட்டியை கடப்பாறையாலேயே அடித்து …