Friday , March 29 2024
Home / சமையல் குறிப்புகள் / கோதுமை ரவை பொங்கல் செய்யும் முறை

கோதுமை ரவை பொங்கல் செய்யும் முறை

தேவையான பொருட்கள்:

சம்பா கோதுமை ரவை – 500 கிராம்
நெய் – 3 தேக்கரண்டி
பச்சை மிளகாய் – 5
கடுகு – 1 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 2 தேக்கரண்டி
பெரிய வெங்காயம் – 1
தேங்காய் பால் – 3 டம்ளர்
கருவேப்பிலை – சிறிதளவு


எப்படிச் செய்வது?

அடுப்பில் வாணலியை வைத்து 2தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி சம்பா கோதுமை ரவையை வறுக்க வேண்டும். ஒரு தேங்காயை துருவி 3 டம்ளர் தேங்காய் பாலை எடுத்து வைத்திருக்க வேண்டும். பின்னர் வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகை தாளிக்க வேண்டும். பின் அதில் வெங்காயம், பச்சை மிளகாயை போட்டு நன்றாக வதக்க வேண்டும்.

அதன் பின் தேங்காய் பாலை ஊற்றி உப்பு சேர்த்து கொதிக்க விடவும். கொதித்து வந்ததும், வறுத்த சம்பா ரவையை போட்டு கரண்டி கம்பால் நன்றாக கிளறி விடவும். பின் நெய் ஊற்றி கிளறி இறக்கினால் சுவையான சம்பா கோதுமை ரவை பொங்கல் ரெடி.

Check Also

பங்குனி வெயில் பட்டையை கிளப்புதா?

TREDY FOODS உடன் சேர்ந்து கோடையை கொண்டாடுவோம் பங்குனி வெயில் பட்டையை கிளப்புதா? வெயில் காலத்தில உப்பு, புளி, காரம் …