Thursday , March 28 2024
Home / ராசிபலன் / இன்றைய ராசிபலன் 26.02.2018

இன்றைய ராசிபலன் 26.02.2018

மேஷம்: சிறிய வேலைக்கும் விடா முயற்சி தேவைப்படலாம். தொழில், வியாபாரத்தில் மந்தநிலை உருவாகும். லாபம் சுமாராக இருக்கும். விருந்தினர் வருகையால் வீட்டுச் செலவு அதிகரிக்கும். தாயின் ஆறுதல் வார்த்தை நம்பிக்கையளிக்கும்.

ரிஷபம்: மனதில் இனம்புரியாத குழப்பம் ஏற்படலாம். தொழில், வியாபாரத்தில் லாபம் சராசரி அளவில் இருக்கும். பணியாளர்கள் பணிச்சுமையைச் சமாளிக்க முடியாமல் திணறுவர். பெண்கள் கணவரின் அன்பை பெறுவர்.வாகனப் பயணத்தில் மித வேகம் நல்லது.

மிதுனம்: முக்கிய செயல் நிறைவேற தாமதமாகலாம்.தொழில் வியாபாரத்தில் லாபம் மிதமாக இருக்கும். பணியாளர்கள் சக ஊழியர்களுடன் கருத்துவேறுபாடு கொள்வர். பெணகள் குடும்பச் செலவுக்காக கடன் வாங்குவர். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

கடகம்: வாழ்வில் இனிய அனுபவம் காண்பீர்கள். தொழில், வியாபாரத்தில் ஆதாயம் அதிகரிக்கும். பணியாளர்கள் பணிவிஷயமாக வெளியூர் செல்வர். பெண்கள் பிள்ளைகளின் நலனில் அக்கறை கொள்வர். அரசு வகையில் நன்மை உண்டாகும்.

சிம்மம்: அனைவரிடமும் அன்பு காட்டி மகிழ்வீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சிக்கான வாய்ப்பு உண்டாகும். சேமிக்கும் விதத்தில் ஆதாயம் கிடைக்கும். பிள்ளைகளின் விருப்பம் அறிந்து நிறைவேற்றுவீர்கள். சுபநிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைப்பு வரும்.

கன்னி: உங்களின் நற்செயலை சிலர் பரிகாசம் செய்வர். தொழில், வியாபாரத்தில் சராசரி அளவில் வருமானம் கிடைக்கும். பணியாளர்கள் பணிச்சுமைக்கு ஆளாகலாம். பெண்கள் பணம், நகை இரவல் கொடுப்பது கூடாது. நண்பரால் உதவி உண்டு.

துலாம்: பேச்சில் இனிமை நிறைந்திருக்கும். தொழில் வியாபாரத்தில் வங்கிநிதியுதவியுடன் விரிவாக்கப்பணியில் ஈடுபடுவீர்கள். பெண்கள் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர். விருந்து விழாவில் பங்கேற்பீர்கள். வீடு, வாகனம் வாங்க வாய்ப்புண்டு

விருச்சிகம்: இஷ்டதெய்வ வழிபாட்டில் ஈடுபடுவீர்கள். தொழில் வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி உண்டாகும். பணவரவும் நன்மையும் அதிகரிக்கும். புத்திரர் விரும்பிய பொருள் வாங்கித்தருவீர்கள். பெண்கள் தாய்வீட்டுப் பெருமையை நிலைநாட்டுவர்.

தனுசு: சிலரது பேச்சு உங்கள் மனதை பாதிக்கலாம். தொழில், வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் பணிச்சுமையால் சிரமப்படுவர். பெண்கள் குடும்ப நலனுக்காகப் பாடுபடுவர். உடல்நிலையில் கவனம் தேவை.

மகரம்: எதிர்கால வளர்ச்சி குறித்து ஆலோசிப்பீர்கள். குடும்பத்தினர் உதவிகரமாக செயல்படுவர். தொழில், வியாபார வளர்ச்சியால் லாபம் அதிகரிக்கும். பணியாளர்கள் சலுகை கிடைக்கப் பெறுவர். அரசியல்வாதிகளுக்கு பதவி கிடைக்க வாய்ப்புண்டு

கும்பம்: எதிர்பார்ப்பு நிறைவேறுவதில் தாமதம் உண்டாகும். நண்பரின் உதவி ஓரளவு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் லாபம் மிதமாக இருக்கும். பணியாளர்கள் பணிச்சுமையைச் சந்திப்பர். இஷ்ட தெய்வ வழிபாடு நிம்மதிக்கு வழிவகுக்கும்.

மீனம்: மனதில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். பணியாளர்கள் நிர்வாகத்தினரின் பாராட்டைப் பெறுவர். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்குவர். பெற்றோர் நலனில் அக்கறை கொள்வீர்கள்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv