Wednesday , February 21 2018
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / புதுக்­கு­டி­யி­ருப்­பில் அரச தலை­வ­ரின் கட்­ட­வுட் தீக்­கிரை!!

புதுக்­கு­டி­யி­ருப்­பில் அரச தலை­வ­ரின் கட்­ட­வுட் தீக்­கிரை!!

புதுக்­கு­டி­யி­ருப்பு பிர­தே­சத்­தில் சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்சி வேட்­பா­ளர் அலு­வ­ல­கம் ஒன்­றில் காட்சிப் படுத்தப்பட்டிருந்த அர­ச­த­லை­வ­ரின் படம் பொறிக்­கப்­பட்ட விளம்­பரப் பதாகை இனந்­தெ­ரி­யாத நபர்­க­ளி­னால் தீயிட்டு எரிக்­கப்­பட்­டுள்­ளது. சம்­ப­வ­வம் குறித்து தெரி­ய­வ­ரு­வ­தா­வது:

புதுக்­கு­டி­யி­ருப்பு பிர­தே­ச­சபை தேர்­த­லில் மல்­லி­கைத்­தீவு, மந்­து­வில், சிவ­ந­கர் மற்­றும் ஆனந்­த­பு­ரம் போன்ற கிரா­மங்­களை ஒன்­றி­ணைத்த புனி­த­வ­ள­ந­கர் 6ஆம் வட்­டா­ராம் தேர்­தல் தொகு­தி­யில் சுதந்­தி­ர­க் கட்­சி­யின் வேட்­பா­ள­ராக அ.பர­ம­தாஸ் என்­ப­வர் போட்­டி­யி­டு­கின்­றார்.

இவர் தனது தேர்­தல் பரப்­பு­ரைக்­காக கட்சி அலு­வ­ல­கம் ஒன்றை கடந்த 5ஆம் திகதி மல்­லி­கைத்­தீவு 9ஆம் வட்­டா­ரப்­ப­கு­தி­யில் திறந்­து­வைத்­துள்­ளார். கட்சி பரப்­பு­ரைக்­கூட்­டங்­கள் தொடர்ச்­சி­யாக இடம்­பெற்று வரு­கின்­றன.

அலு­வ­ல­கம் அமைந்­துள்ள வளா­கத்­தில் சாலை­யைப் பார்த்­த­வாறு அர­ச­த­லை­வ­ரின் ஆறடி நீளம்­கொண்­ட­தும், மூன்று அடி அக­லம் கொண்­ட­து­மான கட்­ட­வுட் ஒன்று வைக்­கப்­பட்­டுள்­ளது. இந்­நி­லை­யில் நேற்­று­முன்­தி­னம் இரவு இனந்­தெ­ரி­யாத சிலர் அதற்கு தீவைத்­து­விட்­டுச் சென்­றுள்­ளார்­கள்.

சம்­ப­வம் தொடர்­பில் புதுக்­கு­டி­யி­ருப்பு பொலி­ஸா­ரி­டம் முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது. சம்­பவ இடத்துக்கு விரைந்த பொலி­ஸார் விசா­ர­ணை­களை மேற்­கொண்­டுள்­ள­னர். கிளி­நொச்சி, முல்­லைத்­தீவு மாவட்ட பிராந்­திய பொலிஸ் அதி­கா­ரி­யும் சம்­பவ வருகை தந்து பார்­வை­யிட்டு விசா­ர­ணை­களை துரி­தப்­ப­டுத்­து­மாறு உத்­த­ர­விட்­டுள்­ளார்.

Check Also

ஆபத்தில் சிக்கியுள்ள மைத்திரி! காப்பாற்றும் தீவிர முயற்சியில் ஐக்கிய தேசிய கட்சி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சுற்றி சதிவலைகள் பின்னப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஆபத்தான கட்டத்திலிருக்கும் ஜனாதிபதியை பாதுகாக்க நடவடிக்கை …

error: Content is protected!