Sunday , April 14 2024
Home / முக்கிய செய்திகள் / பாஜகவுடன் கூட்டணி இல்லை – குமாரசாமி திட்டவட்டம்

பாஜகவுடன் கூட்டணி இல்லை – குமாரசாமி திட்டவட்டம்

கர்நாடகாவில் ஆட்சி அமைப்பது தொடர்பான விவகாரத்தில், பாஜகவுடன் கூட்டணி அமைக்க மாட்டோம் என மதசார்பற்ற ஜனதா தளம் முதலமைச்சர் வேட்பாளர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் எந்த கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் அளவுக்கு மெஜாரிட்டி கிடைக்காததால், கர்நாடகாவில் ஆட்சி அமைப்பதில் குழப்பம் நீடிக்கிறது. திடீர் திருப்பமாக, மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு கொடுக்க முன்வந்துள்ளது. அதேசமயம், 104 தொகுதிகளை பெற்றுள்ள பாஜக ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு ஆளுநரிடம் கடிதம் கொடுத்துள்ளது.

எனவே, மஜத கட்சியிலிருந்தோ, அல்லது காங்கிரஸ் கட்சியிலிருந்தோ சில எம்.எல்.ஏக்களை தங்கள் பக்கம் இழுத்து பாஜக ஆட்சி அமைக்க முயலும் எனக் கூறப்பட்டது. அல்லது, மஜதவுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களோடு கூட்டணி அமைத்து பாஜக ஆட்சியை அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கான முயற்சிகளும் எடுக்கப்பட்டது. பாஜக மேலிட தலைவர்கள் குமாரசாமியிடம் தொடர்பு கொண்டு பேசியதாக தெரிகிறது.

இந்நிலையில், இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய குமாரசாமி “பாஜகவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை. ஏற்கனவே முடிவு எடுத்தது போல் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கப்படும்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv