Friday , March 29 2024
Home / முக்கிய செய்திகள் / வன்முறைகளில் 24 பள்ளிவாசல்கள், 445 வீடுகள் மற்றும் வாணிபங்கள் சேதம்

வன்முறைகளில் 24 பள்ளிவாசல்கள், 445 வீடுகள் மற்றும் வாணிபங்கள் சேதம்

சிறிலங்காவில் கடந்தவாரம் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளில்இ 24 பள்ளிவாசல்கள்இ 445 வீடுகள் மற்றும் வாணிபங்கள் தாக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.

கடந்த 4ஆம் நாள் கண்டி மாவட்டத்தில் உள்ள தெல்தெனிய மற்றும் திகண பகுதிகளில் தொடங்கிய வன்முறைகளில் முஸ்லிம்களின் பெருமளவு சொத்துக்கள் நாசமாக்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக நேற்று தகவல் வெளியிட்ட சிறிலங்கா காவல்துறைப் பேச்சாளர் ருவான் குணசேகர,

”வன்முறைகளின் போதுஇ 445 வீடுகள், வாணிப நிலையங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளன. இதில், கண்டி காவல்துறை பிரிவில் மாத்திரம் 423 தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

24 பள்ளிவாசல்களும் தாக்குதலுக்கு உள்ளாகி சேதப்படுத்தப்பட்டன. கண்டியில் மாத்திரம் 19 பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டன. ஏனைய பகுதிகளில் 5 பள்ளிவாசல்கள் மீது தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.

65 வாகனங்கள் சேதமாக்கப்பட்டுள்ளன. இதில் கண்டியில் மாத்திரம் 60 வாகனங்கள் சேதமாக்கப்பட்டுள்ளன.

கண்டியில் 22 பேரும், ஏனைய பகுதிகளில் 6 பேருமாக மொத்தம் 28 பேர் இந்த வன்முறைகளில் காயமடைந்தனர்.

இந்த வன்முறைகள் தொடர்பாக அவசரகாலச்சட்டத்தின் கீழும், ஏனைய சட்டங்களின் கீழும், 280 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv