Thursday , March 28 2024
Home / செய்திகள் / இந்தியா செய்திகள் / காவிரி வாரியம் இல்லை

காவிரி வாரியம் இல்லை

காவிரி நீர் விவகாரத்தில் அமைக்கப்பட்டது குழுதான் எனவும், அது காவிரி மேலாண்மை வாரியத்திற்கு நிகரானது எனவும் மத்திய நீர் வளத்துறை செயலாளர் யு.பி.சிங் தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் சட்டசபை தேர்தல் முடிந்து விட்ட நிலையில், காவிரி நீர் வழக்கு இன்று உச்ச நீதிமன்றதில் இன்று மீண்டும் தொடங்கியது. அப்போது, காவிரி நீருக்கான வரைவு திட்டத்தை மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது.

சீலிடப்பட்ட உறையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அந்த வரைவுக்கு என்னென்ன அதிகாரங்கள் உள்ளது என்பது தெரியவில்லை. ஆனால், இது மேலாண்மை வாரியம் இல்லை. 10 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளோம். இதில், கர்நாடகா, தமிழகம், பாண்டிச்சேரி உள்ளிட்ட அனைத்து மாநிலங்களை சேர்ந்தவர்களும் இருப்பார்கள். மத்திய அரசு அதிகாரிகளும் இடம் பெறுவார்கள்.

இந்த அமைப்பு காவிரி மேலாண்மை வாரியத்திற்கு நிகரானது என யு.பி.சிங் தெரிவித்துள்ளார். மேலும், காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை இந்த அமைப்பு செயல்படுத்தும். அமைப்பின் தலைவர் பதவிக்காலம் 5 ஆண்டுகளாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதிலிருந்து, உச்ச நீதிமன்றம் கூறிய காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கவில்லை என்பது தெளிவாகிறது. இந்த வழக்கு வருகிற 16ம் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அன்று, உச்ச நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்புக்கு பின்னரே அனைத்தும் தெரியவரும்.

அதேபோல், வரைவு திட்டத்தில் நிறை, குறைகளை ஆராய்ந்த பின்னர் 16ம் தேதி உச்சநீதிமன்றத்தில் கருத்து தெரிவிப்போம் என தமிழக அரசு சார்பில் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv