Thursday , November 15 2018
Home / சினிமா செய்திகள் / சர்கார் படத்தை வெளியிட தடை : உயர்நீதிமன்றம் அடுத்த அதிரடி

சர்கார் படத்தை வெளியிட தடை : உயர்நீதிமன்றம் அடுத்த அதிரடி

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

இணையதளங்களில் டி.டி.எச், கேபிள் டிவி, குறுந்தகடு போன்றவற்றில் இப்படத்தை வெளியிட தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

காப்புரிமை சட்டத்துக்கு எதிராக, 37 இணையதள சேவை நிறுவனங்களில் படத்தை திருட்டுத்தனமாக வெளியிட வாய்ப்புள்ளதாக இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தார் மனுதாரர் ஜோதி.

காப்புரிமை

மேலும் காப்புரிமை சட்டத்துக்கு முரணாக 3710 இணையதளங்களில் இப்படத்தை வெளியிட வாய்ப்பு உள்ளதாகவும் மனுதாரர் தெரிவித்திருந்தார்.

மேலும் சென்னையில் உள்ள 5 கேபிள் டிவி ஆப்ரேட்டர்களும் வெளியிட வாய்ப்புள்ளதாக வழக்கு தாக்கல் செய்துள்ள நிலையில் இன்று சென்னை உயர் நீதிமன்றம் இணைதளங்களில் இப்படத்தை வெளியிட தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது.

இதனையடுத்து சர்கார் படம் இம்மாதம் 6 ஆம் தேதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியிடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Check Also

கரையை நெருங்கும் கஜா புயல்…

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!இரவு 8 மணிமுதல் இரவு 11 மணிக்குள் கஜா புயல் கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு …

error: Content is protected!