Friday , March 29 2024
Home / அரசியல் / வாயை திறக்காதீங்க!: பிரதமர் மோடி உத்தரவு

வாயை திறக்காதீங்க!: பிரதமர் மோடி உத்தரவு

புதுடில்லி: ”தேவை இல்லாத விஷயங்களை பேச வேண்டாம்,” என, பா.ஜ.,வை சேர்ந்த சர்ச்சைக்குரிய தலைவர்களுக்கு, பிரதமர், நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார்.

சர்ச்சையாக பேசுவதால், ஊடகங்களுக்கு தேவை யான, மசாலாக்களை நாம் அள்ளித் தருகிறோம். சிறந்த சமூக விஞ்ஞானிகள்,நிபுணர்களாக நினைத்து, கேமராக்கள் முன், நீங்கள் பேசும் வார்த்தைகள், கடும் விமர்சனத்துக்கு ஆளாகின்றன. இதனால், கட்சியின் புகழுக்கு பாதிப்புஏற்படுகிறது.

இத்தகைய பேச்சுக்களை, பா.ஜ., – எம்.பி.,க்கள், தலைவர்கள் தவிர்க்க வேண்டும். ஊடகங்களில், அங்கீகாரம் அளிக்கப்பட்டோர் மட்டும் தக்க கருத்துகளை கூறினால் போதும். இவ்வாறு மோடிபேசினார்

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv