Thursday , March 28 2024
Home / முக்கிய செய்திகள் / இந்தியாவுடனான உறவுகளை பலப்படுத்த நேபாள அதிபர் பித்யா தேவி பண்டாரி அரசு முறைப்பயணமாக டெல்லி வந்தார்

இந்தியாவுடனான உறவுகளை பலப்படுத்த நேபாள அதிபர் பித்யா தேவி பண்டாரி அரசு முறைப்பயணமாக டெல்லி வந்தார்

இந்தியாவுடனான உறவுகளை பலப்படுத்தும் நோக்கத்தில் நேபாள அதிபர் பித்யா தேவி பண்டாரி அரசு முறைப்பயணமாக இன்று டெல்லி வந்தடைந்தார்.

நேபாள நாட்டின் புதிய அதிபராக கடந்த ஆண்டு பதவியேற்ற பித்யா தேவி பண்டாரி, கடந்த ஆண்டு மே மாதம் இந்தியா வருவதாக இருந்தது. ஆனால், அந்நாட்டு மந்திரிசபையின் ஒப்புதல் கிடைக்காததாக் அவரது வருகை ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், பின்னர் செய்யப்பட்ட ஏற்பாடுகளின்படி நேபாள அதிபர் பித்யா தேவி பண்டாரி அரசு முறைப்பயணமாக இன்று டெல்லி வந்தடைந்தார்.

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, துணை ஜானாதிபதி ஹமித் அன்சாரி, பிரதமர் நரேந்திர மோடி, நிதி மந்திரி அருண் ஜெட்லி, வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் ஆகியோரை சந்தித்து இருநாடுகளுக்கு இடையிலான நல்லுறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தவுள்ள நேபாள அதிபருடன் அந்நாட்டின் மந்திரிகள் மற்றும் முக்கிய துறைகளை சேர்ந்த உயரதிகாரிகளும் வந்துள்ளனர்.

நேபாளத்தில் தங்கியுள்ள மாதேசி இன மக்களுக்கு எதிராக கடந்த ஆண்டு நடைபெற்ற கலவரம் மற்றும் வன்முறைக்கு பின்னர் நேபாள அதிபர் டெல்லி வந்துள்ளதால் இந்த சந்திப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv