Thursday , January 17 2019
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / கதிர்காம பக்தர்களிற்கு மகிழ்ச்சியான செய்தி!

கதிர்காம பக்தர்களிற்கு மகிழ்ச்சியான செய்தி!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மாத்தறை – பெலியத்த ரெயில் பாதையின் வெள்ளோட்ட தொடருந்து சேவை இன்று இடம்பெறவுள்ளது.

பரீட்சார்த்தமட்டத்தில் இந்த சேவை மேற்கொள்ளப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

போக்குவரத்து அமைச்சர் அர்ஜூன ரணதுங்கவின் மேற்பார்வையின் கீழ் இது தொடர்பான நிகழ்வு இடம்பெறவுள்ளது.

மாத்தறையில் இருந்து கதிர்காமம் வரை அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள இந்த தொடருந்து பாதையின் நிர்மாணப்பணிகள் மூன்று கட்டங்களின் இடம்பெறவுள்ளது. இதன் முதற்கட்டத்தின் கீழ் இந்த பாதை நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக 26 கிலோ மீற்றர் தூரத்தைக் கொண்ட பாதை, மாத்தறையில் இருந்து பெலியத்த வரையில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த அமைப்பு பணிகளுக்காக 278 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளன.

சீன எக்ஸின் வங்கி இதற்கான நிதியினை வழங்கியுள்ளது. இரண்டாம் கட்டமாக பெலியத்தயிலிருந்து ஹம்பாந்தோட்டை வரை 48 கிலோமீற்றர் தூரமும் மூன்றாம் கட்டமாக ஹம்பாந்தோட்டையிலிருந்து கதிர்காமம் வரையிலான 39 கிலோமீற்றர் தூரமும் ரயில் பாதை அமைக்கப்படவுள்ளது.

இலங்கையில் மிக நீளமான சுரங்க ரயில் பாதை மாத்தறை – பெலியத்த பாதையிலேயே அமைக்கப்பட்டுள்ளது.

சுமார் 615 மீற்றர் நீளமான சுரங்கப்பாதையும் 268 நீளமான இரண்டு சுரங்கப் பாதைகளும் இங்கு அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பல உப ரயில் நிலையங்களும் இதில் அமைக்கப்படடுள்ளன. மாத்தறைக்கும் கெக்னதுறவுக்கும் இடையில் ஒரு கிலோமீற்றர் தூரம் மேம்பாலமும் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

மாத்தறையிலிருந்து கதிர்காமம் வரை நிர்மாணிக்கப்படும் இந்த தொடருந்து சேவையின்மூலம் கதிர்காமத்துக்கான போக்குவரத்து இலகுவாக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

Check Also

இன்றைய ராசிபலன் 01.11.2018

இன்றைய ராசிபலன் 17.01.2019

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!மேஷம்: சோர்ந்துக் கிடந்த நீங்கள் சுறுசுறுப்படைவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும்.வர வேண்டிய பணம் கைக்குவரும். தோற்றப் பொலிவுக் …

error: Content is protected!