Thursday , March 28 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / தாக்குதல் இடம் பெற்ற ஆலயத்தில் வட மாகாண ஆளுநர்

தாக்குதல் இடம் பெற்ற ஆலயத்தில் வட மாகாண ஆளுநர்

நீர்கொழும்பு, கட்டுவபிட்டிய புனித செபஸ்டியான் ஆலயத்திற்கு வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் இன்று முற்பகல் விஜயம் மேற்கொண்டார்.

ஆலயத்திற்கு விஜயம் செய்த ஆளுநர் ஆலயத்தின் பங்குத்தந்தை வணக்கத்துக்குரிய ஸ்ரீலால் பொன்சேகாவை சந்தித்து அண்மையில் உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் மரணித்த மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனது சார்பிலும் வடமாகாண மக்கள் சார்பிலும் அனுதாபங்களை தெரிவித்துக் கொண்டார்.

இதன்போது பயங்கரவாத தாக்குதலினால் சேதமடைந்து மீள் சீரமைக்கப்படுவரும் ஆலயத்தையும் பார்வையிட்டார்.

அத்துடன் பாதிப்படைந்த அப்பிரதேசத்தின் சில இல்லங்களுக்கும் விஜயம் செய்த ஆளுநர் அவர்கள் அவர்களின் சுக துக்கங்களை கேட்டறிந்து கொண்டார்.

Check Also

வீடு தேடி வருகிறது..

தமிழகம் முழுவதும் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுபவரை CCTV கேமரா மூலம் கண்காணித்து அபராதம் விதிக்கப்பட்டு செல்போனுக்கு தகவல் அனுப்பப்படுகிறது. இத்திட்டத்தின் …