Wednesday , August 21 2019
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / எனது வெற்றிக்கு தமிழ் மக்கள் தேவை : கோத்தபாய
கோத்தபாய
கோட்டாபய ராஜபக்ஷ

எனது வெற்றிக்கு தமிழ் மக்கள் தேவை : கோத்தபாய

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

எனது வெற்றிக்கு தமிழ் மக்களது வாக்கு அவசியம் இல்லை என்று தாம் கூறியதாக வெளியான செய்தியில் உண்மையில்லை என்று முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சில அரசியல்வாதிகளுடன் சேர்ந்து போலியான செய்திகளை பரப்பும் ஊடகங்களை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், கோத்தபாய ராஜபக்ஷவின் அழைப்பின் பேரில் அவரை சந்தித்திருந்தார்.

இதன்போது தமிழ் மக்களின் வாக்குகள் இன்றி தம்மால் வெல்ல முடியும் என்று கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்ததாக, ஊடகங்களில் செய்தி வெளியாகி இருந்தன.

இதனை மறுத்துள்ள முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, தமது வெற்றிக்கு இலங்கை வாழ் அனைத்து தமிழர்கள், சிங்களவர்களின் வாக்குகளையும் எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

Check Also

யாழ். பல்கலை

திரும்புகிறது வழமைக்கு யாழ். பல்கலை

பக்கத்தை பகிர்ந்து கொள்ள! வகுப்புப் பகிஷ்கரிப்பைக் கைவிட்டு இன்று(18) முதல் வழமைபோன்று கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக யாழ். பல்கலைக்கழக மாணவர் …

error: Content is protected!