Thursday , April 18 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / பொன்சேகா உட்பட ஒருவருக்கு ரணில் விடுத்துள்ள அதிரடி உத்தரவு

பொன்சேகா உட்பட ஒருவருக்கு ரணில் விடுத்துள்ள அதிரடி உத்தரவு

ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான சரத்பொன்சேகா மற்றும் பாலித தெவரபெரும ஆகியோருக்கு பிரதமர் ரணில்விக்கிரமசிங்க அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.

சரத்பொன்சேகா மற்றும் பாலித தெரபெரும ஆகிய இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி ஊடகங்கள் முன் பிரசாரம் செய்வதை தவிர்க்க வேண்டும் என பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.

மிக நெருங்கிய நண்பர்களாக இருந்த பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா மற்றும் பாலித தெவரபெரும ஆகியோருக்கு இடையில் அண்மைக்காலமாக உச்சக்கட்ட கருத்து மோதல்கள் இடம்பெற்று வருகின்றன.

காகம் தலையில் எச்சமிட்டது என்பதற்காக காகங்களை சுட்டுக் கொல்லச் சொன்ன பொன்சேகா, அப்பத்தை ஒழுங்காக சுடவில்லையென சிப்பாய்களை முழந்தாளிடச் செய்த பொன்சேகா, வெள்ளைக்கொடி விவகாரத்தில் காட்டிக்கொடுத்த பொன்சேகா என்னை இழிவாக பேசுவதா? என பாலித தெவரபெரும கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், மூளை இல்லாவிடில் உடம்பை பெரிதாக வைப்பதில் அர்த்தமில்லை, கடற்படையில் சாரதியாக இருந்து தப்பியோடியவர் தெவரபெரும. இப்படியானவர்களை அரசியலுக்கு வரவிடக் கூடாது. இனி இவருக்கு வேட்புமனு கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் இவரை நாடாளுமன்றத்திற்கு வர விடமாட்டேன். கசிப்பு காய்ச்சியவரே இந்த தெவரபெரும என சரத் பொன்சேகா தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு இருவரும் மாறிமாறி பரஸ்பர குற்றச் சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர். இவ்வாறான நிலையிலேயே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஊடகங்கள் முன் இருவரும் இவ்வாறு கருத்துக்களை தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv