Friday , March 29 2024
Home / செய்திகள் / உலக செய்திகள் / திரையிசைப் படமான “லா லா லாண்ட்”, பிரிட்டன் அக்காடெமி விருதுகளில் சிறந்த திரைப்படத்திற்கான விருதை வென்றது

திரையிசைப் படமான “லா லா லாண்ட்”, பிரிட்டன் அக்காடெமி விருதுகளில் சிறந்த திரைப்படத்திற்கான விருதை வென்றது

திரையிசைப் படமான “லா லா லாண்ட்”, பிரிட்டன் அக்காடெமி விருதுகளில் சிறந்த திரைப்படத்திற்கான விருதை வென்றது

அமெரிக்காவின் திரையிசைப் படமான “லா லா லாண்ட்”, பிரிட்டன் அக்காடெமி விருதுகளில் சிறந்த திரைப்படத்திற்கான விருதை வென்றுள்ளது.

இந்த மாதத்தின் இறுதியில் நடைபெறவுள்ள ஆஸ்கார் விருதுகளுக்கு முன்னால், நடைபெறும் கடைசி முக்கிய விருது வழங்கும் நிகழ்வான பிரிட்டன் அக்காடெமி விருதுகளில், சிறந்த இயக்குநர் டாமியன் சாஸெல்லி மற்றும் சிறந்த நடிகை இம்மா ஸ்டோன் உள்பட 5 விருதுகளை “லா லா லாண்ட்” திரைப்படம் வென்றுள்ளது.

சிறந்த நடிகர் பிரிவில் “மான்செஸ்டர் பை த சி” என்ற திரைப்படத்திலுள்ள கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் காசெ அஃப்லீக், சிறந்த நடிகர் பரிசை வென்றதால், லா லா லேண்ட் படத்தில் ஸ்டோனின் ஜோடியாக நடித்த நடிகர் ரெயன் கோஸ்லிங்க்குக்கு விருது கைநழுவிப்போனது.

சிறந்த துணை நடிகர் விருது “லயன்” படத்தில் சிறந்த பங்களிப்பை வழங்கிய தேவ் பட்டேலுக்கு வழங்கப்பட்டுள்ளது.

“பென்சஸ்” திரைப்பட கதாபாத்திரத்திற்காக சிறந்த துணை நடிகை விருதை வியோலா டாவிஸ் வென்றுள்ளார்.

 

Tamil News

 

 

 

 

Tamil Technology News

 

Tamilnadu News

 

 

 

 

World Tamil News

 

 

 

 

World Newspapers And sites

Check Also

கொரோனாவால் லண்டனில் மற்றுமொரு இலங்கையர் பலி

கொரோனாவால் லண்டனில் மற்றுமொரு இலங்கையர் பலி

கொரோனாவால் லண்டனில் மற்றுமொரு இலங்கையர் பலி கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில், லண்டனில் சிகிச்சை பெற்றுவந்த மற்றுமொரு இலங்கையர் …