Friday , March 29 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / ரணிலுக்கு அழுத்தம் கொடுக்கும் கூட்டமைப்பு!

ரணிலுக்கு அழுத்தம் கொடுக்கும் கூட்டமைப்பு!

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு புலம்பெயர்ந்துள்ள விடுதலைப் புலிகள் மற்றும் சர்வதேச ஏகாதிபத்திய நாடுகளுடனும் அமைப்புகளுடனும் இணைந்து செயற்பட்டு வருவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புலம்பெயர்ந்த விடுதலைப் புலிகளுடன் இணைந்து செயற்படுகிறது. அத்துடன் சர்வதேச ஏகாதிபத்திய நாடுகள் மற்றும் அமைப்புகளுடன் இணைந்து செயற்பட்டு வருகிறது.

நாட்டை பிரித்து சமஷ்டி ஊடாக வடக்கு கிழக்கை இணைத்து தனி நாட்டை உருவாகும் நிகழ்ச்சி நிரலில் இருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்பட்டு வருகிறது. இவற்றை செய்யுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ரணில் விக்ரமசிங்கவுக்கு அழுத்தங்களை கொடுத்து வருகிறது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஏனைய கட்சிகளில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர்களை தன்பக்கம் இழுத்து பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க முயற்சித்து வருகிறார். அப்படி நாடாளுமன்ற உறுப்பினர்களை இணைத்துக்கொண்டாலும் அமைச்சரவையின் எண்ணிக்கை 30 ஆக இருக்க வேண்டும் என்று ஜனாதிபதி கருதினால், அதனை எவரும் சவாலுக்கு உட்படுத்த முடியாது.

இதனால், அரசாங்கம் பெரிய நெருக்கடியில் இருப்பதை காண முடிகிறது. அதனை நாங்கள் பார்த்துக்கொண்டிருக்கின்றோம். அவசரப்பட்ட அரசாங்கத்தை கவிழ்க்க வேண்டிய தேவை எமக்கு இப்போது இல்லை.

பெரும்மையை நிரூபிப்பதும் எமக்கு தற்போது பெரிய கஷ்டமான காரியமல்ல. இதனால், நாங்கள் தொடர்ந்தும் கோரி வருவது போல் பொதுத் தேர்தலுக்கு செல்வது தொடர்பான யோசனைக்கு ஐக்கிய தேசியக் கட்சி இணங்கும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம் எனவும் எஸ்.பி.திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv