Friday , March 29 2024
Home / சமையல் குறிப்புகள் / மாதுளை எலுமிச்சை சாதம்

மாதுளை எலுமிச்சை சாதம்

தேவையான பொருட்கள் :

உதிரியாக வடித்த சாதம் – ஒரு கப்,
மாதுளை பழம் – 1,
எலுமிச்சைச் சாறு – 2 டீஸ்பூன்,
இஞ்சி – சிறிய துண்டு,
[பாட்டி மசாலா] மஞ்சள்தூள் – சிறிதளவு,
கொத்தமல்லி – சிறிதளவு,
கறிவேப்பிலை, உப்பு – தேவையான அளவு.


தாளிக்க :

கடலைப்பருப்பு – அரை டீஸ்பூன்,
கடுகு – கால் டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு – அரை டீஸ்பூன்,
பெருங்காயம் – அரை டீஸ்பூன்,
எண்ணெய் – தாளிக்க தேவையான அளவு.


செய்முறை :

மாதுளை முத்துக்களை தனியாக உதிர்த்து வைக்கவும்.

கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

இஞ்சியை தோல் நீக்கி துருவிக்கொள்ளவும்.

எலுமிச்சைச் சாறுடன் உப்பு கலந்து வைக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு கடலைப்பருப்பு, கடுகு, உளுத்தம்பருப்பு. பெருங்காயம் போட்டு தாளித்த பின்னர் [பாட்டி மசாலா] மஞ்சள்தூள், கறிவேப்பிலை, இஞ்சித் துருவல் சேர்த்து வதக்கி இறக்கவும்.

இதனுடன் மாதுளை முத்துக்கள், வடித்த சாதம், எலுமிச்சைச் சாறு, கொத்தமல்லி தழை சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்.

சுவையான மாதுளை எலுமிச்சை சாதம் ரெடி

Check Also

பட்டர் ரைஸ் செய்யும் முறை

தேவையான பொருட்கள்: பாஸ்மதி அரிசி – 1 கப், வெண்ணெய் – 4 டேபிள்ஸ்பூன், வெங்காயம் – 1, பச்சைமிளகாய் …