Friday , March 29 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / யாழில் தொடரும் குழப்பம்!! விசேட அதிரடிப்படையினர் களமிறங்கும் சாத்தியம்

யாழில் தொடரும் குழப்பம்!! விசேட அதிரடிப்படையினர் களமிறங்கும் சாத்தியம்

வடமராட்சி பருத்தித்துறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தென்னிலங்கை மீனவர்களை தம்மிடம் ஒப்படைக்க வேண்டுமென காவல்துறையினர் கோரிக்கை விடுத்துள்ள போதிலும் மீனவர்களை ஒப்படைக்க முடியாதென்றும் தமது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென்றும் மக்கள் தெரிவித்திருந்தனர்

இந் நிலையில் அங்கு வந்த காங்கேசன்துறை துறை காவல்துறை அத்தியட்சகர் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்காவிட்டால் விசேட அதிரடிப்படையின் களமிறக்கப் போவதாக எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இதனால் அங்கு பெரும் குழப்பம் ஏற்பட்டிருந்த நிலையில் திடீரென தடுத்து வைக்கப்பட்டிருந்த மீனவர்களை காவல்துறையினர் அழைத்துச்சென்றுள்ளனர்.

இதனால் மேலும் குழப்பம் அதிகரித்ததுடன் காவல்துறை மற்றும் அப் பகுதி மீனவர்களுக்கிடையே முரண்பாடுகளும் ஏற்பட்டு பதற்றமானதொரு சூழல் நிலவியது.

இதேவேளை தடுத்து வைக்கப்பட்டிருந்த எட்டு பேர்களில் ஆறு பேரை மட்டுமே பலவந்தமாக.

காவல்துறையினர் மீட்டுச் சென்றுன்னர் எனவும் ஏனைய இரண்டு பேரையும் காவல்துறையினரால் மீட்க முடியவில்லை.

எனவும் இதனையடுத்து அங்குள்ள அருட்தந்தை ஒருவர் மூலமாக ஏனைய இரண்டு பேரும் ஒப்படைக்கப்பட்டனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை அங்கு நின்ற அப் பகுதி மீனவர்களை அச்சுறுத்தும் வகையில் காவல்துறையினரும் வேறு சிலரும் புகைப்படங்களையும் வீடியோக்களையும் எடுத்துள்ளனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv