Monday , April 23 2018
Home / சினிமா செய்திகள் / ரஜினிக்கு ஜோடியாகக் போகும் த்ரிஷா?

ரஜினிக்கு ஜோடியாகக் போகும் த்ரிஷா?

ரஜினியை வைத்து இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ள திரைப்படத்தில் நடிகை த்ரிஷா ரஜினிக்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

தமிழ் திரையுலகிற்கு இறைவி, பீட்சா, ஜிகர்தண்டா போன்ற வெற்றிப் படங்களை அளித்த கார்த்திக் சுப்புராஜ் சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து படம் எடுக்க இருக்கிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க இருக்கிறார்.

‘மெளனம் பேசியதே’ மூலம் 2002ஆம் ஆண்டு ஹீரோயினாக அறிமுகமானவர் த்ரிஷா. அதன்பிறகு பல படங்களில் நடித்துள்ள த்ரிஷா, 10 வருடங்களுக்கும் மேலாக ஹீரோயினாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ள திரைப்படத்தில், நடிகை த்ரிஷா ரஜினிக்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. எனினும் இந்த செய்தி படக்குழுவினரால் உறுதி செய்யப்படவில்லை.

Check Also

இன்றைய ராசிபலன் 21.03.2018

இன்றைய ராசிபலன் 23.04.2018

மேஷம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மோதல்கள் வந்து நீங்கும். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டாகும்.  …

error: Content is protected!