Thursday , January 18 2018
Home / சினிமா செய்திகள் / அக்கட பூமியிலும் அசத்தும் அமலா பால்

அக்கட பூமியிலும் அசத்தும் அமலா பால்

விவாகரத்து பெற்றபிறகு, நான்கு தென்னிந்திய மொழிகளிலும் பிஸியாக நடித்து வருகிறார் அமலா பால்.

இயக்குநர் விஜய்யிடம் இருந்து விவாகரத்து பெற்றபிறகு, தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் அதிகமாக நடித்து வருகிறார் அமலா பால். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘திருட்டுப்பயலே 2’, ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றது. அடுத்ததாக, அரவிந்த் சாமி ஜோடியாக நடித்த ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படம் பொங்கலுக்கு ரிலீஸாக இருக்கிறது.

இந்நிலையில், ‘ஆயுஷ்மான் பவ’ என்ற தெலுங்குப் படத்தில் நடித்து வருகிறார் அமலா பால். இந்தப் படத்தில், இஸ்லாமியப் பெண்ணாக நடிக்கிறார். அறிமுக இயக்குநர் சரந்தேஜ் இயக்கும் இந்தப் படத்தில், இன்னொரு ஹீரோயினாக சினேகா உல்லல் நடிக்கிறார்.

Check Also

சசிகுமாரின் அடுத்த படத்தின் நாயகியாகும் அதுல்யா

கடந்த ஆண்டு வெளியான ‘காதல் கண் கட்டுதே’ படத்தின் நாயகியும், தற்போது உருவாகி வரும் சமுத்திரக்கனியின் ‘ஏமாலி’ படத்தின் நாயகியுமான …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected!