Monday , April 23 2018
Home / சினிமா செய்திகள் / விஸ்வாசம் படத்தில் இணையும் புதிய பிரபலம் யார் தெரியுமா?

விஸ்வாசம் படத்தில் இணையும் புதிய பிரபலம் யார் தெரியுமா?

சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கவிருக்கும் விஸ்வாசம் படத்தில் நடிகர் போஸ் வெங்கட் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அஜித் – சிவா கூட்டணியில் நான்காவது முறையாக உருவாக இருக்கும் படம் ‘விஸ்வாசம்’. நயன்தாரா ஹீரோயினாக நடிக்கும் இந்தப் படத்தில், தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகிபாபு ஆகியோர் காமெடியன்களாக நடிக்கின்றனர். டி.இமான் இசையமைக்கிறார். ‘விவேகம்’ படத்தைத் தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ், இந்தப் படத்தையும் தயாரிக்கிறது.

வருகிற தீபாவளிக்கு இந்தப் படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டது.ஆனால், போகிறபோக்கைப் பார்த்தால் அதற்கு வாய்ப்பிருக்காது என்கிறார்கள். காரணம், ‘விஸ்வாசம்’ படத்தின் ஷூட்டிங் கடந்த மாதம் ஹைதராபாத்தில் தொடங்குவதாக இருந்தது ஆனால், படப்பிடிப்பு நடத்த தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்திருப்பதால், ஷூட்டிங் எப்போது தொடங்கும் என்பதே தெரியவில்லை.

இந்நிலையில், இந்த திரைப்படத்தில் முக்கயமான கதாபாத்திரல் நடிகர் போஸ் வெங்கட் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Check Also

இன்றைய ராசிபலன் 21.03.2018

இன்றைய ராசிபலன் 23.04.2018

மேஷம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மோதல்கள் வந்து நீங்கும். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டாகும்.  …

error: Content is protected!