Tuesday , August 14 2018
Home / சினிமா செய்திகள் / சிவகார்த்திகேயன் படத்தில் பிரபல காமெடியன்

சிவகார்த்திகேயன் படத்தில் பிரபல காமெடியன்

ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் அடுத்ததாக நடிக்கவிருக்கும் புதிய படத்தில் கருணாகரனை தொடர்ந்து நடிகர் யோகி பாபுவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இன்று நேற்று நாளை’ படத்தை இயக்கிய ரவிக்குமார் அடுத்ததாக சிவகார்த்திகேயனை வைத்து விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட கதையை இயக்க இருக்கிறார்.

24ஏ.எம்.ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ரகுல் ப்ரீத்தி சிங் நடிக்கிறார். ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் கருணாகரன் நடிக்கிறார். இந்நிலையில், இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க காமெடி நடிகர் யோகி பாபு ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. யோகி பாபு இதற்கு முன்னதாக சிவகார்த்திகேயனுடன் மான் கராத்தே, ரெமோ உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இந்த படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு பணிகளையும், முத்துராஜ் கலை பணிகளையும் மேற்கொள்ள இருக்கின்றனர்.

படஅதிபர்கள் போராட்டம் முடிந்த பிறகு வருகிற மே மாதம் படப்பிடிப்பை துவங்க படக்குழு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. சிவகார்த்திகேயன் தற்போது பொன்ராஜ் இயக்கத்தில் `சீமராஜா’ படத்தில் நடித்து வருகிறார்.

Check Also

நீ என்ன பெரிய **** ஆஹ் பிக் பாஸ் வீட்டில் ஆரம்பித்த இன்னுமொரு யுத்தம்..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நாரதர் என்று அழைக்கப்படும் வைஷ்ணவிவை மற்றும் ஏமாற்றுக்காரன் டானியலை வைத்து தான் இந்த வாரம் ஓடப்போகிறது …

error: Content is protected!