Friday , October 19 2018
Breaking News
Home / அரசியல்

அரசியல்

அரசியல்

நல்ல நேரம் தொடங்கியது – ஒரே இரவில் அரைமணி நேரம் முன்னோக்கிச் சென்ற வடகொரியா

வட, தென்கொரிய நாடுகள் இடையே நிலவி வந்த 65 ஆண்டு கால பகை சமீபத்தில் முடிவுக்கு வந்தது. வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், தென்கொரிய அதிபர் மூன் ஜேஇன் ஆகியோர் சந்தித்து நடத்திய பேச்சுவார்த்தை அனைத்து தரப்பினராலும் பாராட்டப்பட்டது.  வெகு விரைவில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பையும் கிம் ஜாங் உன் சந்தித்து பேச இருக்கிறார். கிம் – மூன் சந்திப்பின் போது பல்வேறு முக்கிய விஷயங்கள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. …

Read More »

மூன்று நாடுகளுக்கு பயணம் செய்கிறார் வெங்கையா

புதுடில்லி: துணை ஜனாதிபதியாக வெங்கையா நாயுடு பதவியேற்ற பின்னர் முதல்முறையாக 5 நாள் பயணமாக 3 நாடுகளுக்கு செல்கிறார். இது குறித்து துணை ஜனாதிபதி அலுவலக வட்டாரங்கள் தெரிவித்திருப்பதாவது, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வரும் 6-ம் தேதி கவுதமாலா சென்று அங்கு அந்நாட்டு அதிபர் ஜிம்மி மொரலெஸ், துணை ஜனாதிபதி ஜாபத் கேப்ரெரா ஆகியோரை சந்திக்கிறார். 7-ம் தேதி பனாமா செல்கிறார். அங்கு பனாமா அந்நாட்டு அதிபர் ஜுவான் …

Read More »

தமிழகம் வந்தார் ஜனாதிபதி: சென்னை விமான நிலையத்தில் ஆளுநர்-முதல்வர் வரவேற்பு

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தமிழகத்தில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வேலூர் மற்றும் சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள உள்ளார். இதற்காக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் இன்று காலை 10.45 மணியளவில் சென்னை வந்து சேர்ந்தார். சென்னை விமான நிலையத்தை வந்தடைந்த அவரை ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் உயர் அதிகாரிகள் வரவேற்றனர். இந்த வரவேற்பைத் தொடர்ந்து ராணுவ …

Read More »

ஏழைத் தமிழ் மாணவர்களை நீட் எழுத அலைக்கழிப்பது அநீதி – கமல்ஹாசன்

மருத்துவ மாணவர் சேர்க்கைக்காக மே 6-ந்தேதி நடக்க உள்ள ‘நீட்’ தேர்வில், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களுக்கு கேரளாவிலும், ராஜஸ்தானிலும் தேர்வு மையங்களை ஒதுக்கி உள்ளனர். தேர்வு மையங்கள் ஒதுக்கீடு கணினி மூலமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதால், இதில் மாற்றம் செய்ய முடியாது என்று சி.பி.எஸ்.இ. நிர்வாகம் அறிவித்தது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட், ‘அண்டை மாநிலங்களில் நீட் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டால், மாணவர்களுக்கு மனதளவில் …

Read More »

கர்நாடகாவில் ஜெயாநகர் தொகுதி பா.ஜ., வேட்பாளர் காலமானார்

பெங்களூரு: கர்நாடகா சட்டசபை தேர்தல் மே 12ம் தேதி நடைபெற உள்ளது. ஜெயா நகர் தொகுதியில் தற்போதைய எம்எல்ஏ பிஎன் விஜயகுமாரை பா.ஜ., மீண்டும் களமிறக்கியுள்ளது. தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த அவர், மாரடைப்பால் காலமானார். இவர், ஜெயா நகர் தொகுதியில் தொடர்ச்சியாக இரண்டு முறை எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டவர் ஆவார்.

Read More »

பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களுக்கு கூடுதல் சுமை – மத்திய அரசு மீது ப.சிதம்பரம் பாய்ச்சல்

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகம் கண்டு வந்தது. இதன் காரணமாக கடந்த 55 மாதங்களில் இல்லாத அளவுக்கு அவற்றின் விலை உயர்ந்து விட்டது. ஆசிய நாடுகளில் இந்தியாவில்தான், பெட்ரோல், டீசல் விலை மிக அதிகமாக உள்ளது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.77.43, ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.69.56 என்று உள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு …

Read More »

மத்திய மந்திரி பியூஷ் கோயல் மீது ஊழல் குற்றச்சாட்டு – ராஜினாமா செய்ய ராகுல் காந்தி வற்புறுத்தல்

ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல், முன்பு மத்திய மின்துறை மந்திரியாக இருந்தார். அப்போது, அவர் ஊழல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறி இருப்பதாவது:- மத்திய மின்துறை மந்திரியாக இருந்தபோது, பியூஷ் கோயல் தனது ‘பிளாஷ்நெட் இன்போ சொல்யூஷன்ஸ்’ நிறுவன பங்குகளை மின்துறையில் ஈடுபட்டுள்ள ‘பிரமல் குழுமத்துக்கு’ விற்றுள்ளார். பங்குகளின் முகமதிப்பை விட ஆயிரம் மடங்கு விலை வைத்து அவர் …

Read More »

பா.ஜ.,வுடன் கைகோர்த்த காங்.,: மிசோரம் மாநிலத்தில் திருப்பம்

எதிரும், புதிருமாக உள்ள, காங்., – பா.ஜ., கட்சிகள், மிசோரம் மாநிலத்தில், சக்மா தன்னாட்சி மாவட்ட கவுன்சில் அதிகாரத்தை கைப்பற்ற, ஒரே அணியில் கைகோர்த்துள்ளது, அக்கட்சிகளின் மேலிட தலைவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வட கிழக்கு மாநிலமான, மிசோரமில், முதல்வர், லால்தன்வாலா தலைமையிலான, காங்., ஆட்சி நடக்கிறது. மிசோரம் மாநிலத்தில், சக்மா மாவட்ட மக்களுக்காக, சக்மா தன்னாட்சி மாவட்ட கவுன்சில், 1972ல் துவங்கப்பட்டது. இந்த கவுன்சிலுக்கான தேர்தல், ஐந்தாண்டுக்கு ஒருமுறை நடப்பது …

Read More »

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வட, தென்கொரிய தலைவர்கள் உச்சி மாநாடு

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வட, தென்கொரிய தலைவர்கள் உச்சி மாநாடு, பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. கொரியப்போர் 1953-ம் ஆண்டு முடிந்த பின்னர் வட, தென்கொரியாக்கள் இடையே இணக்கமான சூழல் கிடையாது. கொரியப்போர் முடிவுக்கு வந்தபோதும், இரு நாடுகள் இடையே பனிப்போர் பல்லாண்டு காலமாக நீடித்து வந்தது. இந்த நிலையில் சமீபத்தில் தென்கொரியாவில் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள், ஒரு அதிரடி மாற்றத்தை ஏற்படுத்தியது. அணு ஆயுத …

Read More »

சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி பெண் கேபினட் மந்திரி ஆனார்

சிங்கப்பூரில் பிரதமர் லீ சியன் லூங், தனது மந்திரிசபையை நேற்று மாற்றி அமைத்தார். இளைய தலைமுறையினருக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் இந்த நடவடிக்கையை எடுத்தார். இதில் இந்திய-சீன வம்சாவளியை சேர்ந்த பெண் தலைவர் இந்திராணி ராஜா (வயது 55) கேபினட் மந்திரியாக நியமிக்கப்பட்டார். இவர் 2006-11 காலகட்டத்தில் நாடாளுமன்ற துணை சபாநாயகராக இருந்து உள்ளார். இந்தியரான இவரது தந்தை ராஜா, மூத்த போலீஸ் அதிகாரியாக பணி ஆற்றியவர். இவரது தாயார் …

Read More »
error: Content is protected!