Sunday , March 25 2018
Home / செய்திகள் / உலக செய்திகள் (page 53)

உலக செய்திகள்

World News in Tamil, International News, Latest Updates in Tamil, Daily Tamil News. உலகில் நிகழும் முக்‌கிய நிகழ்‌வுகளை நீங்கள் அமர்‌ந்‌திருக்கும் இடத்‌திலேயே படிக்க உலகச் செய்‌திகள்

இரண்டாம் உலகப்போரின்போது, அடோல்ஃப் ஹிட்லர் பயன்படுத்திய தொலைபேசி ஒன்று, 2 லட்சத்து 43 ஆயிரம் டாலருக்கு ஏலம்

அமெரிக்காவில் நடைபெற்றுள்ள ஒரு ஏலத்தில் இரண்டாம் உலகப்போரின்போது, அடோல்ஃப் ஹிட்லர் பயன்படுத்திய தொலைபேசி ஒன்று, 2 லட்சத்து 43 ஆயிரம் டாலருக்கு விலைக்கு ஏலம் போயிருக்கிறது. இந்த தொலைபேசியை வாங்கியவரின் அடையாளம் எதுவும் வெளியிடப்படவில்லை. ஹிட்லர் இரகசியங்களை பரிமாற பயன்படுத்திய இயந்திர பாகம் கண்டெடுப்பு நாஜிக்களின் தலைவரான அடோல்ஃப் ஹிட்லரின் பெயர், ஒரு ஸ்வஸ்திகை அடையாளம் மற்றும் நாஜிக்களின் அடையாளமான பருந்து ஆகியவை பொறிக்கப்பட்டுள்ள சிவப்பு நிற தொலைபேசி 1945 …

Read More »

சர்வதேச ஆயுத விற்பனை 8 சதவீதம் அதிகரிப்பு – ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆய்வு நிறுவனம்

பனிப்போர் காலம் முடிவுற்ற பின்னர் நடைபெற்றிருக்கும் சர்வதேச ஆயுத விற்பனையில், எப்போதும் இல்லாததை விட இப்போது ஆயுத விற்பனை அதிகரித்து காணப்படுவதாக புதியதொரு அறிக்கை தெரிவிக்கிறது. 2012 முதல் 2016 வரையான முக்கிய ஆயுதங்களின் உலக அளவிலான மொத்த இறக்குமதியை, இந்த காலத்திற்கு முந்தைய 5 ஆண்டு காலத்தோடு ஒப்பிடுகையில் 8 சதவீதம் அதிகரித்திருப்பதாக ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆய்வு நிறுவனம் கூறியிருக்கிறது. இந்த ஒட்டு மொத்த ஆயுத கொள்முதலில் …

Read More »

பாகிஸ்தான் தர்காவில் தற்கொலைப்படை தீவிரவாதி நடத்திய தாக்குதலின் எதிரொலி – 24 தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர்

பாகிஸ்தான் உள்ள ஒரு தர்காவில் தற்கொலைப்படை தீவிரவாதி நடத்திய தாக்குதலின் எதிரொலியாக பாதுகாப்பு படையினரின் தேடுதல் வேட்டையில் 24 தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். தெற்கு பாகிஸ்தானின் ஒரு பகுதியான சிந்து மாகாணத்தில் உள்ளது செவான் நகரில் லால் ஷபாஸ் குவாலண்டர் தர்கா உள்ளது. இதில் மதகுரு சுபி சமாதி உள்ளது. கடந்த புதன்கிழமை மாலை இங்கு ஏராளமானவர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக கூடியிருந்தனர். அப்போது திடீரென ஒருவர், தனது உடலில் கட்டியிருந்த …

Read More »

தென் கொரியாவில் ஊழல் வழக்கில் சாம்சங் நிறுவன தலைவர் கைது

தென் கொரியாவில் ஊழல் வழக்கில் சாம்சங் நிறுவன தலைவர் கைது செய்யப்பட்டார். அவருக்கு ஜாமீன் பெற ஏற்பாடு நடைபெறுகிறது. தென் கொரியாவில் அதிபராக இருந்த பார்க் ஜியுள்-ஹை ஊழல் வழக்கில் பதவி இழந்தார். அவருக்கு ரூ.250 கோடி லஞ்சம் கொடுத்ததாக சாம்சங் நிறுவன துணை தலைவர் ஜே லீ (48) மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதை எதிர்த்து அவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். எனவே அவரை கைது செய்ய …

Read More »

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் நடத்தப்பட்ட கார் வெடிகுண்டு தாக்குதலில் 52 பேர் பலி

ஈராக் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஐ.எஸ். தீவிரவாதிகள் தொடர்ச்சியாக வெடிகுண்டு தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். குறிப்பாக தலைநகர் பாக்தாத்தை குறி வைத்து பல்வேறு தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், பாக்தாத் நகரின் தெற்கு பகுதியில் மார்க்கெட் பகுதியில் கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஷியா பிரிவு மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் நடத்தப்பட்ட இந்த வெடிகுண்டு தாக்குதலில் சுமார் 52 …

Read More »

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது நிர்வாகத்தை அமைக்கும் முயற்சியில் பின்னடைவு

தேசிய ஆலோசகராக தான் தேர்வு செய்தவர் அந்தப் பதவியை ஏற்க மறுத்ததன் மூலம், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது நிர்வாகத்தை அமைக்கும் முயற்சியில் மேலும் ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்பு, அவரது தேசிய ஆலோசகர் மைக்கேல் ஃபிளின் நீக்கப்பட்டார். ரஷ்ய தூதருடன் நடந்த உரையாடல் தொடர்பாக, துணை அதிபர் மைக் பென்ஸை அவர் தவறாக வழிநடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது. இதற்கிடையில், ஓய்வு பெற்ற வைஸ் அட்மிரல் …

Read More »

வடகொரிய அதிபரின் அண்ணன் படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பெண்களில் ஒருவர் தங்கள் நாட்டைச் சேர்ந்தவர்தான் – இந்தோனேசியா உறுதி

வடகொரிய அதிபரின் அண்ணன் படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பெண்களில் ஒருவர் தங்கள் நாட்டைச் சேர்ந்தவர்தான் என இந்தோனேசியா உறுதி செய்துள்ளது. வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் அண்ணன் கிம் ஜாங் நம், சமீபத்தில் மக்காவ் நாட்டில் இருந்து மலேசியாவுக்குச் சென்றிருந்தார். அங்குள்ள சர்வதேச விமான நிலையத்தில் காத்திருந்தபோது, 2 பெண்கள் அவருக்கு விஷ ஊசி செலுத்திவிட்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நம் உயிரிழந்தார். இதுதொடர்பாக நேற்று …

Read More »

ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப்படை அமைப்புக்கு புதிய தலைவராக பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த் ஜீன் -பியர் லாக்ரோயிக்ஸ் நியமனம்

ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப்படை அமைப்புக்கு புதிய தலைவராக பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த் ஜீன் -பியர் லாக்ரோயிசை ஐ.நா பொதுச் செயலர் அன்டோனியோ குட்டரெஸ் நியமித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் சபையில் உள்ள அமைதிப்படை அமைப்பானது, அமைதியற்ற சூழ்நிலை நிலவும் நாடுகளில் அமைதி நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. இதற்காக பல்வேறு நாடுகளில் ஐ.நா. அமைதிப்படை முகாமிட்டுள்ளது. ஐ.நா பொதுச் செயலருக்கு அடுத்தபடியாக, ஐ.நா. அமைதிப்படைத் தலைவர் பதவி மற்றும் ஐ.நா. அரசியல் விவகாரத் …

Read More »

அமெரிக்காவில் பதவி விலகிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பிளினின் ரஷிய தொடர்பு பற்றி விசாரணை நடத்த குடியரசு கட்சி வலியுறுத்தல்

அமெரிக்காவில் பதவி விலகிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பிளினின் ரஷிய தொடர்பு பற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று குடியரசு கட்சியின் மூத்த உறுப்பினர்கள் வலியுறுத்தி உள்ளனர். அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் நெருங்கிய கூட்டாளி, மைக்கேல் பிளின். இவர் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவியில் நியமிக்கப்பட்டபோதே ஜனநாயக கட்சி கடும் ஆட்சேபம் தெரிவித்தது. இருப்பினும் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டு, பதவி ஏற்று 3 வாரங்களான நிலையில், அவர் ரஷியாவுடன் …

Read More »

ஈராக் நாட்டில் லாரியை கொண்டு நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதல்: 15 பேர் பலி

ஈராக் நாட்டில் லாரியை கொண்டு நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர். ஈராக் தலைநகர் பாக்தாத் அருகே லாரியை கொண்டு தற்கொலைப் படை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஷியாத் பிரிவு மக்கள் அதிகம் வாழும் சத்ர் நகரில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர். 50-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்ததாக பாதுகாப்பு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாக்தாத் நகரில் இந்த வருடத்தில் நடத்தப்பட்ட மிகவும் …

Read More »
error: Content is protected!