Thursday , July 19 2018
Home / செய்திகள் / உலக செய்திகள் (page 5)

உலக செய்திகள்

World News in Tamil, International News, Latest Updates in Tamil, Daily Tamil News. உலகில் நிகழும் முக்‌கிய நிகழ்‌வுகளை நீங்கள் அமர்‌ந்‌திருக்கும் இடத்‌திலேயே படிக்க உலகச் செய்‌திகள்

ஈரான் அணுத்திட்டம் குறித்து புதிய ஒப்பந்தம்: அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் பேச்சுவார்த்தை

2015 ஆம் ஆண்டு ஒபாமாவின் ஆட்சிக் காலத்தில், ஈரான் மற்றும் உலகின் சக்திவாய்ந்த நாடுகளாக கருதப்படும் நாடுகளுக்கு இடையில் புதிய ஒப்பந்தம் போடப்பட்டது.அவை, பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் மத்திய கிழக்கில் அதன் பங்கு ஆகியவை அடங்கிய புதிய ஒப்பந்தமாகும். இந்த ஒப்பந்தத்தை நீட்டிக்க முடியாது என அதிபர் டிரம்ப் அச்சுறுத்தி வருகிறார். அதற்கான காலக்கெடு மே 12 எனவும் அவர் தெரிவித்துள்ளார். 2015ஆம் அண்டு போடப்பட்ட அந்த ஒப்பந்தம் ஏமன், …

Read More »

கச்சா எண்ணெய் விலை 20% வரை உயரும்: உலக வங்கி

வாஷிங்டன்: கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் விலை 20 சதவீதம் வரை உயரும் என உலக வங்கி தெரிவித்துள்ளது. பெட்ரோலியப் பொருட்களுக்கான தேவை அதிகரிப்பு மற்றும் எண்ணெய் வழங்கலில் எண்ணெய் நிறுவனங்கள் கடைபிடிக்கும் கட்டுப்பாடு காரணமாக, இந்த ஆண்டில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 65 டாலர் வரை உயரும் எனவும் உலக வங்கி தெரிவித்துள்ளது.

Read More »

சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி பெண் கேபினட் மந்திரி ஆனார்

சிங்கப்பூரில் பிரதமர் லீ சியன் லூங், தனது மந்திரிசபையை நேற்று மாற்றி அமைத்தார். இளைய தலைமுறையினருக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் இந்த நடவடிக்கையை எடுத்தார். இதில் இந்திய-சீன வம்சாவளியை சேர்ந்த பெண் தலைவர் இந்திராணி ராஜா (வயது 55) கேபினட் மந்திரியாக நியமிக்கப்பட்டார். இவர் 2006-11 காலகட்டத்தில் நாடாளுமன்ற துணை சபாநாயகராக இருந்து உள்ளார். இந்தியரான இவரது தந்தை ராஜா, மூத்த போலீஸ் அதிகாரியாக பணி ஆற்றியவர். இவரது தாயார் …

Read More »

இந்தியர்களை பாதிக்கும் ‘எச்-4’ விசா ரத்து

அமெரிக்காவில் தகவல் தொழில்நுட்பம் (ஐ.டி.) உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஆயிரக்கணக்கான வெளிநாட்டினர் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு ‘எச்-1பி’ விசா வழங்கப்படுகிறது. இவ்வாறு பணியாற்றுவோரின் வாழ்க்கை துணைகளுக்கும் (ஆண் என்றால் மனைவிக்கும், பெண் என்றால் கணவருக்கும்) அங்கேயே பணியாற்றுவதற்கு வசதியாக எச்-4 விசா, கடந்த ஒபாமா ஆட்சிக்காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது அமெரிக்காவில் தொழில்நுட்ப துறையில் பணியாற்றி வந்த வெளிநாட்டினருக்கு மிகவும் உபயோகமாக இருந்தது. அதுவும் இந்தியர்களுக்கு இது பெரும் வரப்பிரசாதமாக …

Read More »

இந்தோனேசியா பெட்ரோல் கிணற்றில் தீ விபத்து: 15 பேர் பலி

இந்தோனேசியாவில் உள்ள ஒரு பெட்ரோல் கிணற்றில் ஏற்பட்ட தீ விபத்தால் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தோனேசியா நாட்டின் உள்ள சுமத்ரா தீவின் அருகில் உள்ள பகுதிகளில் பெட்ரோல் ஊற்றுகள் அதிகமாக உள்ளன. அங்குள்ள மக்கள் பெட்ரோல் கிணறுகளை திருட்டுத்தனமாக பயன்படுத்தி பெட்ரோல் எடுத்து வருகின்றனர். அந்த பகுதியில் உள்ள பசி புட்டி என்ற கிராமத்தில் பெட்ரோல் கிணறு ஒன்று சுமார் 250 …

Read More »

இங்கிலாந்து இளவரசருக்கு 3வது குழந்தை: மகிழ்ச்சியில் மன்னர் பரம்பரை

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்–டயானா தம்பதியரின் மூத்த மகனும் இளவரசருமான வில்லியம்ஸ் அவர்களுக்கு ஏற்கனவே 4 வயது ஜார்ஜ் மற்றும் 3 வயது சார்லோட் ஆகிய 2 குழந்தைகள் உள்ள நிலையில், இன்று அவருக்கு 3வது குழந்தை பிறந்துள்ளது. வில்லியம்ஸ் அவர்களின் மனைவி கேதே மிடில்டன் இன்று அழகான ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்துள்ளார். வில்லியம்ஸ்-கேதே தம்பதிக்கு 3வது குழந்தை பிறந்த இந்த தகவலை இங்கிலாந்து அரண்மனை அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. மேலும் …

Read More »

புதரில் சிக்கிய குழந்தையை இரவு முழுவதும் பாதுகாத்த நாய்!

ஆஸ்திரேலியாவில் காட்டுப்பகுதியில் இருக்கும் புதரில் சிக்கிய 3 வயது குழந்தையை இரவு முழுவதும் நாய் பாதுகாத்த சம்பவம் பெரும் வியப்பை வைத்துள்ளது. ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தை சேர்ந்த ஆரோரா என்ற 3வயது குழந்தை வீட்டை விட்டு வெளியேறி சுமார் 2 கி.மீ தூரம் வரை சென்றுள்ளார். அப்போது காட்டுப்பகுதியில் உள்ள புதரில் சிக்கிக்கொண்டார். அவரது வீட்டில் வளரும் மாக்ஸ் என்ற நாய் குழந்தையுடன் உடன்சென்றுள்ளது. குழந்தையை காணாமல் போனதை கண்டு …

Read More »

வேற்றுகிரகவாசி போல் மாறிய வாலிபர்

அமெரிக்காவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பல அபாய நடைமுறைகளை பின்பற்றி வேற்றுக்கிரகவாசிகளைப் போல் தன்னை மாற்றிகொண்டு வாழ்ந்து வருகிறார். அமெரிக்காவைச் சேர்ந்த வின்னி ஒ (22) 110 பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைகளை செய்து தன்னை வேற்றுக்கிரகவாசியை போல் மாற்றிக்கொள்ள முயன்றுள்ளார். அதுமட்டுமில்லாமல் முழுமையான வேற்றுக்கிரகவாசியாக மாற அசைப்பட்டு அவரது பிறப்புறுப்பையும் நீக்கியுள்ளார். இந்த சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. தன்னுடைய 17 வயதில் இருந்தே இந்த முயற்சியை துவங்கிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். ஆரம்பத்தில் …

Read More »

ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டி இந்தியா 10 தங்க பதக்கங்களை வென்றது

தெற்காசிய ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டிகள்; 10 தங்க பதக்கங்களை வென்றது இந்தியா நேபாள நாட்டில் தெற்காசிய ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டிகள் கடந்த 21ந்தேதி தொடங்கின. இதில், இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்காளதேசம், பூடான் மற்றும் நேபாளம் உள்ளிட்ட நாடுகள் விளையாடின. இந்த நிலையில், இந்திய வீரர், வீராங்கனைகள் மொத்தம் 10 தங்க பதக்கங்களை கைப்பற்றி உள்ளனர். அவற்றில் மகளிர் ஒற்றையர் பிரிவில் 7 தங்கம் மற்றும் ஆடவர் ஒற்றையர் பிரிவில் …

Read More »

நிகரகுவாவில் போராட்டத்தின்போது பத்திரிகையாளர் சுட்டுக்கொலை

மத்திய அமெரிக்க நாடான நிகரகுவாவில், ஓய்வூதிய சீர்திருத்தம் காரணமாக அரசாங்கத்துக்கு எதிராக கடந்த சில தினங்களாக போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த போராட்டங்களில் வன்முறை மூண்டது. போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே நடந்த மோதல்களில் பலர் பலியாகி உள்ளனர். சுமார் 25 பேர் பலியாகி உள்ளதாக உள்ளூர் மனித உரிமை அமைப்புகள் கூறுகின்றன. இந்த நிலையில், அங்கு தெற்கு கரீப்பியன் கடற்கரை பகுதியில் ஏஞ்சல் கஹோனா என்ற பத்திரிகையாளர் செய்தி சேகரிப்பில் …

Read More »
error: Content is protected!