Thursday , January 18 2018
Home / செய்திகள் / உலக செய்திகள் (page 30)

உலக செய்திகள்

World News in Tamil, International News, Latest Updates in Tamil, Daily Tamil News. உலகில் நிகழும் முக்‌கிய நிகழ்‌வுகளை நீங்கள் அமர்‌ந்‌திருக்கும் இடத்‌திலேயே படிக்க உலகச் செய்‌திகள்

அணுஆயுதம், ஏவுகணை சோதனைகளை நிறுத்தினால் வடகொரியாவுடன் பேச தயார்

அணுஆயுத சோதனை மற்றும் ஏவுகணை சோதனைகளை நிறுத்தினால் வடகொரியாவுடன் பேச அமெரிக்கா தயாராக இருப்பதாக ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே தெரிவித்தார். அமெரிக்கா, தென்கொரியா உள்ளிட்ட நாடுகளின் எதிர்ப்பையும் மீறி வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. வடகொரியாவின் இத்தகைய செயலுக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ கட்ரஸ் கண்டனம் தெரிவித்திருந்தார். மேலும் நேற்று கூடிய ஐ.நா.சபை கூட்டத்திலும் வட்கொரியாவுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. வடகொரியா மீது அமெரிக்கா …

Read More »

இந்தியா – பாக். இடையேயான பதற்றத்தை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் – ஐ.நா செய்தித் தொடர்பாளர்

இந்தியா – பாகிஸ்தான் இடையே தற்போது நிலவும் பதற்றமான சூழ்நிலையை உன்னிப்பாக கவனித்து வருவதாக ஐ.நா பொதுச் செயலாளரின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே தற்போது குல்புதீன் ஜாதவ் மரண தண்டனை, எல்லை தாண்டிய தாக்குதல், ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக சாலை அமைத்தல் போன்ற விவகாரங்களில் பனிப்போர் நிலவி வருகிறது. சர்வதேச அரங்கில் மாறி மாறி இரு நாடுகளும் ஒருவர் மீது மற்றொருவர் …

Read More »

சர்ச்சைக்குரிய தென் சீனக்கடல் பகுதியில் ராக்கெட் லாஞ்சர்களை நிலை நிறுத்தும் சீனா

சர்ச்சைக்குரிய தென் சீனக்கடல் பகுதியில் செயற்கை தீவுகளை அமைத்து ராணுவத்தளங்களை உருவாக்கி வரும் சீனா தற்போது ராக்கெட் லாஞ்சர்களை அப்பகுதியில் நிலை நிறுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தென்சீனக் கடல் பகுதியில் உள்ள சில தீவுகளை சொந்தம் கொண்டாடுவதில் பிலிப்பைன்ஸ், வியட்நாம், சீனா ஆகிய நாடுகளுக்கிடையே பிரச்சனைகள் தொடர்ந்து வருகின்றன. இப்பிரச்சனை தொடர்பாக சர்வதேச தீர்ப்பாயத்தில் சில வழக்குகளும் நிலுவையில் உள்ளது. இந்தக் கடல் பரப்பில் அவ்வப்போது ராணுவப் பயிற்சிகளை …

Read More »

வடகொரியாவை மிரட்டுவதை விடுத்து, பேச்சுவார்த்தை நடத்துங்கள்: புதின் அறிவுரை

உலக நாடுகள் வடகொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும், மிரட்டக் கூடாது என்று ரஷ்ய அதிபர் புதின் வலியுறுத்தியுள்ளார். உலக நாடுகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் வடகொரியா நேற்று மீண்டும் ஒரு அணு குண்டு சோதனையை நடத்தியது. இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளும், ஐரோப்பிய யூனியனும் கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உலக நாடுகளுக்கு அழைப்பும் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உலக நாடுகள் வடகொரியா …

Read More »

உணவு சாப்பிட துரித உணவகம் முன்பு அவசரமாக ஹெலிகாப்டரை தரை இறக்கிய விமானி

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள மிகப்பிரபலமான மெக்டொனால்ட்ஸ் உணவக வளாகத்தில் திடீரென ஹெலிகாப்டரை தரை இறக்கிய விமானியால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. ‘பசிவந்தால் பத்தும்பறந்து போகும்’ என்ற பழமொழி உண்டு. அதற்கு ஏற்ப ஒரு சம்பவம் ஆஸ்திரேலியாவில் நடந்துள்ளது. பசியால் வாடிய விமானி ஒருவர் நடுவானில் பறந்து கொண்டிருந்த ஹெலிகாப்டரை துரித உணவகம் முன்பு இறக்கி உணவு பொருட்களை வாங்கி சென்றார். இச்சம்பவம் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள …

Read More »

ஏவுகணை விவகாரம்: வடகொரியாவுக்கு ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கடும் கண்டனம்

சர்வதேச நாடுகளை அச்சுறுத்தும் விதமாக சமீபத்தில் வடகொரியா நடத்தியுள்ள ஏவுகணை சோதனைக்கு ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. வடகொரியா தொடர்ந்து அணு குண்டு சோதனை, ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. தென்கொரியா, அமெரிக்கா மற்றும் ஐ.நா.சபை கடும் எச்சரிக்கை மற்றும் பொருளாதார தடை விதித்தும் கண்டு கொள்ளவில்லை. இதனால் கொரிய தீப கற்பகத்தில் போர் பதட்டம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே தென் கொரியாவில் அதிபர் தேர்தல் நடந்தது. புதிய …

Read More »

இந்தியா உள்ளிட்ட சுமார் 100 நாடுகளை அச்சுறுத்திய சைபர் தாக்குதல்: மூல காரணம் என்ன?

இந்தியா உள்ளிட்ட சுமார் 100 நாடுகளின் கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தை முடக்கிய சைபர் தாக்குதல்களினால், பல்வேறு துறைகளின் பணிகள் பாதிக்கப்பட்டன. தொழில்நுட்ப வசதிகள் எந்த அளவுக்கு நமக்கு விரைவான சேவையை வழங்கி, நமது பணிச்சுமையை குறைக்கிறதோ, அதே அளவுக்கு ஆபத்துகளும் அதிகரிக்கின்றன. சைபர் தாக்குதல்களால் தொழில்நுட்பங்கள் முடக்கப்படும்போது மிகப்பெரிய பாதிப்புகள் ஏற்படுகின்றன. உலக சமுதாயத்திற்கு இந்த சைபர் தாக்குதல் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. இந்நிலையில், நேற்று உலகம் முழுவதும் உள்ள பல்வேறு …

Read More »

இந்தியாவில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சதி

இந்தியாவில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சதித்திட்டம் தீட்டி உள்ளதாக அமெரிக்க உளவுத்துறை திடுக்கிடும் தகவல் வெளியிட்டுள்ளது. போர் நிறுத்த உடன்படிக்கையை மீறி எல்லை கட்டுப்பாட்டுக்கோடு பகுதியில் பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல்கள் நடத்தி வருகிறது. இந்திய ராணுவ வீரர்களை மட்டுமல்லாது அப்பாவி மக்களையும் குறிவைத்து பாகிஸ்தான் துருப்புகள் தாக்குதல்கள் நடத்துகின்றன. இந்த மாத தொடக்கத்தின்போதுகூட காஷ்மீரில் பூஞ்ச் மாவட்டத்தின் கிருஷ்ணகாதி பகுதியில் பாதுகாப்பு மற்றும் ரோந்து பணிகளில் ஈடுபட்டிருந்த …

Read More »

ஹபீஸ் சயீத் அமைப்புக்கு எதிராக பொருளாதார தடை: அமெரிக்கா அதிரடி

மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத் அமைப்புக்கு எதிராக பொருளாதார தடை விதித்து அமெரிக்க அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. உலகளாவிய பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளை அமெரிக்க அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது. இந்த நிலையில், மும்பையில் 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ந் தேதி நடந்த தாக்குதல்களில் மூளையாக செயல்பட்ட ஜமாத் உத் தாவா அமைப்பின் நிறுவனரான ஹபீஸ் சயீத்தின் நிறுவனம் மற்றும் பல தனிப்பட்ட நபர்கள் …

Read More »

பாராளுமன்றத்தில் குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டி வரலாற்றில் இடம்பிடித்த ஆஸ்திரேலிய எம்.பி.

ஆஸ்திரேலிய பாராளுமன்ற அவைக்குள் பெண் உறுப்பினர் ஒருவர் தனது குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டியதன் மூலம் பாராளுமன்ற வரலாற்றில் இடம்பிடித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் பசுமைக் கட்சி தலைவர்களில் ஒருவர் லாரிசா வாட்டர்ஸ். குயீன்ஸ்லேண்ட் செனட்டரான (பாராளுமன்ற மேல்சபை எம்.பி.) இவர், சமீபத்தில் இரண்டாவது பெண் குழந்தையை பெற்றெடுத்தார். இதற்காக மகப்பேறு விடுப்பில் சென்றிருந்த அவர், விடுப்பு முடிந்து, 2 மாத பெண் குழந்தையுடன் நேற்று பாராளுமன்றத்திற்கு வந்து, முக்கிய வாக்கெடுப்பில் பங்கேற்றார். வாக்கெடுப்பின்போது, …

Read More »
error: Content is protected!