Tuesday , March 26 2024
Home / செய்திகள் / உலக செய்திகள் (page 20)

உலக செய்திகள்

தனது தனிப்பட்ட வழக்கறிஞர் அலுவலகத்தில் ரெய்டு – FBI மீது பாய்ந்த டிரம்ப்

அமெரிக்க அதிபர் டிரம்பை சுற்றி அடிக்கடி பல்வேறு சர்ச்சை கருத்துகள் எழும். அந்த வகையில் அவர் தன்னை காதலித்ததாக முன்னாள் ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. செய்தி நிறுவனத்திற்கு ஒன்று பேட்டி அளித்த அவர் கடந்த 2006 ம் ஆண்டு டிரம்ப்புடன் உடல் ரீதியான உறவு இருந்ததாக கூறினார். டிரம்ப் தன்னுடன் காதலில் இருந்ததாகவும் இருவரும் பலமுறை உறவு வைத்துள்ளதாகவும் அவர் கூறிய குற்றச்சாட்டுக்கு …

Read More »

ஜப்பானில் தொடர் நிலநடுக்கங்கள் ஏற்படலாம் – புவியியல் ஆய்வுமையம் எச்சரிக்கை

ஜப்பானின் மேற்கு பகுதியில் ஹோன்சு தீவில் உள்ள ஹிரோஷிமா நகரில் நேற்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.6 புள்ளிகளாக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வுமையம் தெரிவித்து உள்ளது. ஆனால் ஜப்பான் புவியியல் ஆய்வுமையம் 6.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவித்தது. நிலநடுக்கத்தின் போது, வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. உறக்கத்தில் இருந்த மக்கள் திடுக்கிட்டு எழுந்தனர். அவர்கள் அலறிஅடித்தபடி வீடுகளை விட்டு வெளியேறி …

Read More »

ஜப்பானில் 5.8 ரிக்டர் அளவுகோலில் திடீர் நிலநடுக்கம்

ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு அருகில் உள்ள ஹோஸ்னுவில் உள்ள ஷிமானே பகுதியில் இன்று அதிகாலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் சுமார் 5.8 ரிக்டர் அளவுகோலில் பதிவானது. சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் உடனடியாக வெளியாகவில்லை.

Read More »

லண்டனில் காவிரிக்காக போராடும் தமிழர்கள்!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து லண்டனில் வரும் 14-ம் தேதி போராட்டம் நடத்த போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தாததோடு, காவிரி மேலாண்மை வாரியத்திற்கு பதில் வேறு குழுவை அமைக்க மத்திய அரசு முடிவெடுத்தது. அதற்கும் 3 மாத கால அவகாசம் வேண்டும் எனக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுவும் தாக்கல் செய்துள்ளது. இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனால் தமிழகம் முழுவதும் …

Read More »

தொடரும் சிரியா தாக்குதல்

சிரிய ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் 5 குழந்தைகள் உட்பட 27 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டத்தில், சிரிய அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே சண்டை நடைபெற்று வருகிறது. இந்த போர் தற்போது உச்ச நிலையை அடைந்து இருக்கிறது. சர்வதேச நாடுகளின் எதிர்ப்பையும் மீறி, நிகழ்த்தப்பட்டு வரும் விமானம் மற்றும் ஏவுகணை தாக்குதலில் ஆயிரக்கணக்கானோர் இதுவரை பலியாகியுள்ளனர். …

Read More »

கொரிய அதிபருக்கு 24 ஆண்டுகள் சிறை

தென்கொரிய முன்னாள் அதிபர் பார்க் சுங் ஹீயின் மகள் பார்க் கியூன் ஹே அதிபராகி ஊழலில் ஈடுப்பட்டு பெரும் சர்ச்சையில் சிக்கினார். இவரது ஊழல் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில் இவருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. தென்கொரிய நாட்டின் முன்னாள் அதிபர் பார்க் சுங் ஹீ கடந்த 1963 முதல் 1979 வரை ஆட்சி செலுத்தினார். கடந்த 1978 ஆம் ஆண்டு இவர் படுகொலை செய்யப்பட்டார். அதன் பிறகு இவரது மகள் பார்க் …

Read More »

அமெரிக்காவில் அடுத்தடுத்து சுட்டுக் கொல்லப்படும் கருப்பு இனத்தவர்கள்

அமெரிக்காவில் இரும்பு குழாயை துப்பாக்கி என நினைத்து கருப்பு இனத்தவர் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதம் கலிபோர்னியா மாகாணத்தில் கருப்பு இனத்தவர் ஒருவர் தன் கையில் வைத்திருந்த ஐபோனை துப்பாக்கி என நினைத்த போலீசார் அவரை சரமாரியாக சுட்டனர். இதில் அவர் சம்பவ இடத்திலே பலியானார். பிறகு அவர் கையில் இருந்தது துப்பாக்கி இல்லை ஐபோன் என தெரிந்தது. இதனால் போலீஸாரைக் கண்டித்து கருப்பு …

Read More »

முடிவுக்கு வந்த சிரியா போர்: ரஷ்யா தகவல்…

சிரியாவில் கடந்த இரண்டு மாதங்களாக சிரியாவில் உள்நாட்டு போர் நடைபெற்று வந்தது. இந்த போர் தற்போது முடிவுக்கு வந்துள்ளது என ரஷ்யா தகவல் வெளியிட்டுள்ளது. சிரியாவில் கடந்த இரண்டு மாதங்களாக சிரிய அரசிற்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் போர் நடைபெற்று வந்தது. இவர்களுக்கு இடையே நடைபெற்ற சண்டையில் ஏராளமான அப்பாவி மக்கள், குழந்தைகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலின் போது கிழக்கு கவுட்டா பகுதி முழுவதும் கிளர்ச்சியாளர்களின் பிடியில் சிக்கியது. இதனால் அந்த பகுதியில் …

Read More »

10 பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை

பாகிஸ்தானில் ராணுவ நீதிமன்றம் 10 பயங்கரவாதிகளுக்கு விதித்த மரண தண்டனையை அந்நாட்டின் ராணுவ தளபதி ஜெனரல் கமர் ஜாவத் பஜ்வா உறுதி செய்துள்ளார். பல்வேறு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு உயிரிழப்புகளை ஏற்படுத்திய 10 பயங்கரவாதிகளுக்கு ராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. 5 ஸ்டார் ஹோட்டலில் தாக்குதல், பிரபல இசைக்கலைஞர் அம்ஜத் சப்ரியை கொலை செய்தது, ஆயுதப் படை மீது தாக்குதல் நடத்தி 17 அதிகாரிகளைக் கொன்றது என இதுவரை …

Read More »

ஆப்கானிஸ்தான் பள்ளி மீது குண்டுவீச்சு: 150 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் மீது நடத்திய தாக்குதலில் அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானில் உள்ள தஷ்ட்-இ-ஆர்சி என்ற மாவட்டத்தை தாலிபான் பயங்கரவாதிகளிடம் இருந்து கைப்பற்ற ரானுவம் தாக்குதல் நடத்த திட்டம் போட்டது. அதன்படி நேற்று தாலிபான் உறுப்பினர்கள் அனைவரும் மசூதியில் ஒன்றாக இருந்தனர், அதனால் ரானுவம் அவர்கள் மீது குண்டுவீசி வான்வழி தாக்குதல் நடத்தியது. அப்போது ரானுவத்தினர் குண்டுகளை குறி தவறி அங்கிருந்த பள்ளியின் மீது வீசினர். அப்போது …

Read More »