Tuesday , October 23 2018
Home / செய்திகள் / தமிழ்நாடு செய்திகள் (page 30)

தமிழ்நாடு செய்திகள்

Tamilnadu News

மோடி பேச்சை கேட்டால் பூஜய்ம் தான் பரிசாக கிடைக்கும்

பிரதமர் மோடி கூறியதால்தான் மீண்டும் அதிமுகவில் இணணந்தேன் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவில் பிரதமர் மோடி கட்டப்பஞ்சாயத்து செய்தது உண்மை என்று ஓபிஎஸ் மூலம் தெரிய வந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்த நிலையில் இதுகுறித்து தினகரன் ஆதரவாளர் தங்கத்தமிழ்ச்செல்வன் செய்தியாளர்களிடம் இன்று கூறியதாவது: மோடியின் பேச்சை கேட்க வேண்டாம், அதிமுக பிரச்சனைகளை நாமே பேசி தீர்த்து கொள்ளலாம் என்று …

Read More »

புத்தி சுவாதீனம் இல்லாதவர்கள்

அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறிய கருத்தை ஏற்காதவர்கள் புத்தி சுவாதினம் இல்லாதவர்கள் என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் “தமிழகம் தற்போது அமைதியாக இருப்பதாக பலர் கூறி வருகிறார்கள். ஆனால் அப்படி இல்லை. பயங்கரவாதிகளின் கூடாரமாக தமிழகம் மாறி உள்ளது” என்று கூறினார். இதுகுறித்து ஒ.பன்னிர்செல்வத்திடம் செய்தியாளர்கள் கேட்டபோது “மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சொல்லி இருப்பது உண்மைக்கு மாறானது. …

Read More »

நான் சசிகலாவை சமாளித்தேன்

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு விசுவாசமாக இருந்ததால், சசிகலா குடும்பத்தினர் தனக்கு துரோகி பட்டத்தை கொடுத்தனர் என துணை முதல்வர் ஓ.பி.எஸ் கூறியுள்ளார். ஜெயலலிதாவின் 70வது பிறந்த நாள் விழா குறித்த ஆலோசனைக் கூட்டம் தேனியில் நடைபெற்றது. அதில், கலந்து கொண்டு ஓ.பி.எஸ் பேசியதாவது: நான் ஜெ.விற்கு விசுவாசமாக இருந்தேன். அதனால்தான் அவர் என்னை இரண்டு முறை முதல்வர் பதவியில் அமர வைத்தார். எனக்கு அது போதும். பிரதமர் மோடி கூறியதால்தான் …

Read More »

இப்போ குக்கர் சின்னமும்?

ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ. டி.டி.வி தினகரனுக்கு குக்கர் சின்னத்தை தர முடியாது என தேர்தல் ஆணையம் கைவிரித்து விட்டது. ஜெ.வின் மறைவிற்கு பின், அதிமுகவின் கட்சி பெயர் மற்றும் சின்னத்திற்கு தினகரன் மற்றும் ஓபிஎஸ்-எடப்பாடி அணி இரண்டும் போட்டி போட்டது. எதிர்பார்த்தது போல், ஈ.பி.எஸ் – ஓ.பி.எஸ் அணிக்கே அதை தேர்தல் ஆணையம் வழங்கியது. இதை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் தினகரன். இது ஒருபுறம் இருக்க, …

Read More »

போயஸ் கார்டனை சிபிஐ கைப்பற்ற வேண்டும்

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அவ்வப்போது அரசியல் பரபரப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில் நேற்று சேலம் பகுதியில் நடைபெற்ற எம்.ஜி.ஆர்.அம்மா தீபா பேரவை கூட்டத்தில் கலந்து கொண்டு ஆவேசமாக பேசினார். இந்த கூட்டத்தில் தீபா பேசியதாவது: அண்ணா, எம்.ஜி.ஆரை கண்டெடுத்தார். எம்.ஜி.ஆர், அம்மாவைக் கண்டெடுத்தார். நீங்கள் என்னைக் கண்டெடுத்திருக்கிறீர்கள். நானாக அரசியலுக்கு வரவில்லை. நீங்கள் அழைத்ததால் வந்தேன். அம்மாவுக்கென்று பதவி ஆசை இல்லை, தனி வாழ்க்கை இல்லை. அவரின் புகழுக்குக் …

Read More »

மோடி கூறித்தான் எல்லாம் செய்தேன்

பிரதமர் மோடி சொல்லித்தான் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணியுடன் இணைந்தேன் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளிப்படையாக பேசியுள்ளார். முதல்வர் பதவி பறிக்கப்பட்டதும், ஜெ.வின் சமாதியில் அமர்ந்து தியானம் செய்து தர்ம யுத்தத்தை தொடங்கினார். அவர் பக்கம் 11 எம்.எல்.ஏக்கள் மட்டுமே சென்றனர். எனவே, அவரால் மீண்டும் முதல்வர் பதவியில் அமர முடியவில்லை. எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் பதவியில் சசிகலா தரப்பு அமர வைத்தது. அதன் பின் சில மாதங்கள் …

Read More »

காவிரி நதி நீர் விவகாரத்தில் ரஜினியின் அதிரடி கருத்து !

அனைவரும் எதிர்பார்த்து வந்த காவிரி நதி நீர் விவகாரத்தில் இன்று உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியானது. நீண்ட நாளாக தமிழ்நாட்டிற்கும், கர்நாடகாவிற்கும் இருந்து வந்த இந்த விசயத்தில் இன்று ஒரு சுமூக தீர்வு எட்டியுள்ளது. இந்நிலையில் ரஜினி என்ன சொல்வார் என எதிர்பார்த்து வந்தனர். சிலர் கருத்துக்கள் கூறியும் வந்தனர். இந்நிலையில் ரஜினி தற்போது ட்விட்டரில் இதுகுறித்து கூறியுள்ளார். இதில் அவர் காவிரி நீர் பங்கீட்டில் உச்சநீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு தமிழக …

Read More »

தீவிர அரசியலில் நுழைய ரஜினிகாந்த் முடிவு

தீவிர அரசியலில் நுழைய ரஜினிகாந்த் முடிவெடுத்துள்ள நிலையில், ஏப்ரல் மாதத்திலிருந்து தமிழகத்தில் அவர் அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொள்ள போவதாக கூறப்படுகிறது. ரஜினிகாந்த் டிசம்பர் 31ம் தேதி தனி கட்சி தொடங்கி அரசியலில் களமிறங்க போவதாக தனது ரசிகர் மன்ற நிகழ்ச்சியில் அறிவித்திருந்தார். இதன்படி தமிழகத்திலுள்ள அவரது அனைத்து ரசிகர் மன்றத்தையும் ரஜினி மக்கள் இயக்கமாக மாற்றினார். இந்நிலையில் ரஜினிகாந்த் வரும் ஏப்ரல் மாதம் தமிழகம் முழுவதும் அரசியல் சுற்றுப்பயணம் ம்செல்ல …

Read More »

சசிகலா தலைமையில் அதிமுக ஒன்றுசேர வேண்டும்

ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் இருந்தே சசிகலா தலைமையிலான அணிக்கே ஆதரவு கொடுத்து வரும் பாஜக பிரமுகர் சுப்பிரமணியம் சுவாமி, தற்போது சசிகலா தலைமையில் அதிமுக ஒன்றுசேர வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த சுவாமி, ‘திமுக ஒரு தேச விரோத, இந்து விரோத கட்சி என்றும், நாட்டை பிரிப்பதற்காக முயற்சி எடுத்த கட்சி என்றும் கூறியுள்ளார். அதிமுக பிளவுபட்டிருந்தால் திமுக ஆட்சிக்கு வந்துவிடும். எனவே அதிமுக ஒன்றிணைந்து …

Read More »

கட்சி பெயரை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யும் கமல்ஹாசன்….

நடிகர் கமல்ஹாசன் தனது அரசியல் கட்சியின் பெயரை பதிவு செய்ய தேர்தல் ஆணையத்திடம் நேரம் கேட்டுள்ளார். நடிகர் கமல்ஹாசன் வருகிற 21ம் தேதி மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் வீட்டிலிருந்து தனது அரசியல் பயணத்தை துவங்குவதாக ஏற்கனவே அறிவித்துள்ளார். அதைத் தொடர்ந்து அன்று மதுரையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தனது அரசியல் கட்சியின் பெயர், சின்னம், கொடி ஆகியவற்றை அவர் அறிமுகம் செய்ய உள்ளார். இந்நிலையில், தனது அரசியல் கட்சியின் …

Read More »
error: Content is protected!