Sunday , April 22 2018
Home / செய்திகள் / தமிழ்நாடு செய்திகள் (page 3)

தமிழ்நாடு செய்திகள்

Tamilnadu News

எச்.ராஜாவுக்கு மனநல சிகிச்சை தேவைப்படுகிறது

எச்.ராஜா பரிதாப நிலையில் இருப்பதால் அவருக்கு மனநல சிகிச்சை தேவைப்படுகிறது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக கடந்த 10ஆம் தேதி சென்னையில் ஐபிஎல் போட்டிக்கு எதிராக அண்ணா சாலையில் போராட்டம் நடைபெற்றது. இதில் பாரதிராஜா, வைரமுத்து, சீமான், திரு.முருகன் காந்தி, அமீர் உள்ளிட்டோர் ஈடுபட்டனர். இதற்கு எச்.ராஜா போராட்டத்தில் ஈடுபட்ட பாரதிராஜா, வைரமுத்து, சீமான், …

Read More »

திருவிடந்தை சர்வதேச ராணுவ தளவாடக் கண்காட்சியைக் காணக் குவியும் பொதுமக்கள்

தமிழ்ப்புத்தாண்டு விடுமுறையை அடுத்து காஞ்சிபுரம் மாவட்டம் திருவிடந்தை சர்வதே ராணுவ தளவாடக் கண்காட்சியைக் காண அதிக அளவில் பொதுமக்கள் வருகின்றனர். கடந்த 11- ஆம் தேதி தொடங்கிய இந்தக் கண்காட்சி இன்றுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5மணி வரை பொதுமக்கள் அனுமதிக்கப்படுகின்றனர். ஆதார் கார்டு பான்கார்டு உள்ளிட்ட அடையாள அட்டைகளை காட்டியபிறகே பொதுமக்கள் அனுமதிக்கப்படுகின்றனர். சென்னை, காஞ்சிபுரம், உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் …

Read More »

எல்லாவற்றிற்கும் போராட வேண்டியுள்ளது

தமிழ் மக்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ள ரஜினிகாந்த் எல்லாவற்றிற்கும் போராட வேண்டியுள்ளதால், வாழ்க்கையே போராட்டமாகிவிட்டது என தெரிவித்துள்ளார். தமிழர்களின் புத்தாண்டான சித்திரை திருநாளையொட்டி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர். சீருடையில் உள்ள காவலரை தாக்குவது வன்முறையின் உச்சம் என சில நாட்கள் முன்பாக திடீரென சீறினார் ரஜினிகாந்த். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சீருடையில் இருந்த காவலர்கள் 8 …

Read More »

காவிரி விவகாரத்தில் மு.க. ஸ்டாலின் பயணம் மேற்கொள்வது மிகப்பெரிய மோசடி – H. ராஜா சாடல்

காவிரி விவகாரத்தில் மு.க. ஸ்டாலின் பயணம் மேற்கொள்வது மிகப்பெரிய மோசடி என்று பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா விமர்சனம் செய்துள்ளார். நாகப்பட்டினத்தில் செய்தியாளர்களுடன் பேசிய ஹெச்.ராஜா, ஸ்டாலினின் குடும்பமே தமிழக மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என்று வலியுறுத்தினார்.

Read More »

காவிரிக்காக தீக்குளித்த வைகோவின் உறவினர்

ம. தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ சமீபத்தில் நியூட்ரினோ திட்டத்திற்கு எதிராக மதுரையில் நடைபயணத்தைத் தொடங்கியபோது, அவருடன் நடைப்ப்பயணம் சென்று கொண்டிருந்த மதிமுக தொண்டர் ஒருவர் திடீரென தீக்குளித்து பலியானார். இந்த அதிர்ச்சி செய்தியே இன்னும் மதிமுகவினர் மனதில் வருத்தத்தை வரவழைத்து கொண்டிருக்கும் நிலையில் இன்று மேலும் ஒரு மதிமுக தொண்டர் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தீக்குளித்துள்ளார். வைகோவின் நெருங்கிய உறவினரான இவர் தற்போது உயிருக்கு ஊசலாடுவதாக …

Read More »

மன்னித்து விடு ஆஷிபா – கமல்ஹாசன் உருக்கம்

காஷ்மீரில் 8 வயது சிறுமி ஆஷிபா கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீ மாநிலத்தில் 8 வயது சிறுமி ஆஷிபா கடத்தப்பட்டு ஒரு கோவிலில் வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அந்த சிறுமிக்கு போதை மருந்து கொடுத்து சிலர் அவரை சீரழித்துள்ளனர். இந்த விவகாரம் நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த குற்றத்தில் ஈடுபட்டவர்களை தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. …

Read More »

உங்கள் கால்களைப் பற்றி மன்றாடுகிறேன்.. இளைஞர்களே தீக்குளிக்காதீர்கள்

காவிரி விவகாரம் தொடர்பாக யாரும் தீக்குளிக்க வேண்டாம் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார். மதிமுக. பொதுச் செயலாளர் வைகோ சமீபத்தில் நியூட்ரினோ திட்டத்திற்கு எதிராக மதுரையில் நடைபயணத்தை தொடங்கியபோது, அவருடன் நடைப்பயணம் சென்று கொண்டிருந்த மதிமுக தொண்டர் ஒருவர் திடீரென தீக்குளித்து பலியானார். அந்த அதிர்ச்சி செய்தியே இன்னும் மதிமுகவினர் மனதில் வருத்தத்தை வரவழைத்து கொண்டிருக்கும் நிலையில் மற்றொரு மதிமுக தொண்டர் இன்று தீக்குளித்துள்ளார். விருதுநகரை சேர்ந்த …

Read More »

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி விருதுநகரில் சரவணன் சுரேஷ் என்பவர் தீக்குளிப்பு

மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளது. மத்திய அரசுக்கு எதிராகவும், பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகவும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. நேற்று, தமிழகம் வந்த பிரதமர் மோடிக்கு எதிராக கருப்புக்கொடி காட்டி எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. இந்த நிலையில், விருதுநகரில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சரவணன் சுரேஷ்(வயது 50) என்ற நபர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். தீக்குளித்ததில் …

Read More »

சீமான் கைதா? சுற்றி வளைத்த அதிரடிப்படை

நேற்று முன் தினம் நடைபெற்ற ஐபிஎல் போட்டிக்கு எதிரான போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட பல்வேறு கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தின் இடையே திடீரென போலீசார் தடியடி நடத்தியதும், சீருடை அணிந்த போலீசார்களை நாம் தமிழர் கட்சியினர்கள் தாக்கிய சம்பவங்களும் நடைபெற்றது. இதனையடுத்து சீமான் மீது கொலை முயற்சி உள்பட 10 பிரிவுகளின்கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இதனால் எந்த நேரமும் …

Read More »

வைகோ உருவ பொம்மையை எரித்து பா.ஜனதா போராட்டம்

பா.ஜனதா இளைஞர் அணி மாநில தலைவர் வினோஜ் செல்வம் தலைமை தாங்கினார். மாநில இளைஞ ரணி பொதுச் செயலாளர் வசந்தராஜன், மாவட்ட தலைவர் சுதாகர் உள்பட பலர் கலந்து கொண்டு வைகோவை கண்டித்து கோ‌ஷங்கள் எழுப்பினர். உடனே அங்கு வந்த போலீசார் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய வசந்தராஜன் உள்பட 40 பேரை கைது செய்தனர். அவர்கள் மீது அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் செய்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆர்ப்பாட்டம் …

Read More »
error: Content is protected!