Thursday , January 17 2019
Home / செய்திகள் / தமிழ்நாடு செய்திகள் (page 20)

தமிழ்நாடு செய்திகள்

Tamilnadu News

சென்னை புழல் சிறையில் இருந்த நடிகர் மன்சூர் அலிகானுக்கு ஜாமீன்

காவிரி விவகாரத்தில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நடிகர் மன்சூர் அலிகானிற்கு செங்கல்பட்டு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, சென்னையில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கு எதிராக பாரதிராஜா, சீமான் உள்ளிட்ட பலர் சென்னை அண்ணாசாலையில் போராட்டம் நடத்தினர். அப்போது, அவர்களை தடுக்க வந்த போலீசாருக்கும், நாம் தமிழர் கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது சிலர் …

Read More »

அ.தி.மு.க.வும் பா.ஜனதாவும் இரட்டை குழல் துப்பாக்கி அல்ல- தம்பித்துரை

பாராளுமன்ற துணை சபாநாயகரும், அ.தி.மு.க. எம்.பி.யுமான தம்பிதுரை சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:- பா.ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும். இது தொடர்பாக அ.தி.மு.க. தலைமைக் கழகம் தான் முடிவு எடுக்கும். நான் அது பற்றி சொல்வதற்கு ஒன்றும் இல்லை. அம்மா எப்படி கட்சியை நடத்தினார்கள், எப்படி தனித்துவத்தை காண்பித்தார்கள் என்பது உங்கள் எல்லோருக்கும் தெரியும். எங்களைப் பொறுத்தவரை நாங்கள் தனிக்கட்சியாகத்தான் பாராளுமன்றத்தில் …

Read More »

‘தமிழகம் ஆபத்தான நிலையில் இருக்கிறது’

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் ‘யூ-டியூப்’ மூலம் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் இணையதளம் மூலம் அனுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்தார். அதன் விவரம் வருமாறு:- கேள்வி: நமது அரசியல் ஆக்கபூர்வமான செயலை நோக்கியா? அல்லது அதிகாரத்தை மட்டும் நோக்கியா? பதில்: அதிகாரத்தை மட்டும் நோக்கி செல்வது ஒரு அரசன் செய்யும் வேலை. அதிகாரத்தை மட்டும் நோக்கி சென்று என்ன செய்வது? அது மக்களுக்காக செய்யும் விஷயம் கிடையாது. நல்ல …

Read More »

ஸ்டெர்லைட் எதிர்ப்பா? மோடி எதிர்ப்பா? வைகோவுக்கு தமிழிசை கேள்வி

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 25 ஆண்டுகளாக சட்ட போராட்டமும் சமூக போராட்டமும் செய்து வருபவர் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. தற்போது ஸ்டெர்லைட் விவகாரம் வீரியமாகி அனைத்து கட்சிகளும், தூத்துக்குடி பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் நிலையில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக வைகோ தற்போது வாகன பிரச்சாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் வைகோவின் இந்த வாகன பிரச்சாரம் தடை செய்யப்பட வேண்டும் என்றும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு பிரச்சாரம் என்ற பெயரில் …

Read More »

பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த சென்னை கோவில் பூசாரி

சென்னையில் 3வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த கோவில் பூசாரி ஒருவரை பொதுமக்கள் அடித்து உதைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை சூளைமேடு பகுதியில் ஸ்ரீகன்னிகா பரமேஸ்வரி கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவிலில் பூசாரியாக பணிபுரிந்து வரும் உதயகுமார் என்பவர், அந்த கோவில் அருகே விளையாடி கொண்டிருந்த பெண் குழந்தையை கோவிலுக்குள் அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதனால் பயந்து போன அந்த குழந்தை …

Read More »

பெண்களை இழிவாக பேசிய எஸ்.வி. சேகர் தலைமறைவு?

பெண்களை இழிவாக பேசிய நடிகர் எஸ்.வி. சேகர் மீது காவல் துறையினர் 4 பிரிவுகளின் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் அவர் தலைமறைவாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை தனது முகநூலில் பதிவு செய்திருந்த எஸ்.வி.சேகருக்கு ஆளும் கட்சி அமைச்சர்கள் உள்பட பலர் கண்டனம் தெரிவித்தனர்.எஸ்.வி.சேகர் வீடு முன்பும், பாஜக அலுவலகமான கமலாலயம் முன்பும் பத்திரிகையாளர்கள் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து நடிகர் எஸ்.வி.சேகர் …

Read More »

எஸ்.வி சேகர் பத்திரிக்கையாளர்கள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும் – இயக்குநர் பாரதிராஜா அதிரடி

பெண் பத்திரிக்கையாளர்களை அவதூறாக பேசிய எஸ்.வி சேகர் பத்திரிக்கையாளர்களின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார். பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை தனது முகநூலில் பதிவு செய்திருந்த எஸ்.வி.சேகருக்கு ஆளும் கட்சி அமைச்சர்கள் உள்பட பலர் கண்டனம் தெரிவித்தனர்.எஸ்.வி.சேகர் வீடு முன்பும், பாஜக அலுவலகமான கமலாலயம் முன்பும் முன்பும் பத்திரிகையாளர்கள் போராட்டம் நடத்தினர். எஸ்.வி.சேகர் ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில், யாரையும் …

Read More »

மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் : எஸ்.வி.சேகர் வெளியிட்ட வீடியோ

சமீபத்தில் எஸ்.வி.சேகர் தனது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவை இட்டிருந்தார். அந்த பதிவில் பெண் பத்திரிக்கையாளர்களை இழிவு படுத்தும் வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. பத்திரிக்கையாளர் சங்கங்கள் அவருக்கு கண்டனம் தெரிவித்தன. மேலும், அவரது வீட்டின் மீது கற்களை வீசியும் பத்திரிக்கையாளர்கள் போராட்டம் நடத்தினர். இந்நிலையில், நடிகர் எஸ்.வி.சேகர் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், யாரையும் காயப்படுத்தும் எண்ணம் தனக்கில்லை என அவர் பேசியுள்ளார்.

Read More »

ஹெச்.ராஜாவும், எஸ்.வி.சேகரும் சைபர் சைகோக்கள் – ஜெயக்குமார் பேட்டி

பாஜக தேசிய செயலாளர் மற்றும் எஸ்.வி.சேகர் பற்றி அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆளுநர் நடத்திய செய்தியாளர் சந்திப்பில், அவரிடம் பல கேள்விகள் எழுப்பப்பட்டது. மேலும், பெண் செய்தியார் கன்னத்தில் ஆளுநர் தட்டிய விவகாரம் பூதாகரமாகியது. அந்த செய்தியாளர் அதை தன் டிவிட்டர் பக்கத்தில் இதுபற்றி குறிப்பிட, ஆளுநர் இறங்கி வந்து மன்னிப்பு கேட்கும் நிலை ஏற்பட்டது. அந்த நிலையில், ஹெச்.ராஜா தனது டிவிட்டர் பக்கத்தில், திமுக …

Read More »

எஸ்.வி.சேகரின் சர்ச்சை கருத்து – தமிழிசை விளக்கம்

பெண் பத்திரிக்கையாளர்களை பாஜக மிகவும் மதிப்பதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை விளக்கம் அளித்துள்ளார். பெண் செய்தியார் கன்னத்தில் ஆளுநர் தட்டிய விவகாரம் பூதாகரமாகியது. அந்த செய்தியாளர் அதை தன் டிவிட்டர் பக்கத்தில் இதுபற்றி குறிப்பிட, ஆளுநர் இறங்கி வந்து மன்னிப்பு கேட்கும் நிலை ஏற்பட்டது. அந்நிலையில், வேறொருவர் இட்ட பதிவை தனது முகநூல் பக்கத்தில் எஸ்.வி.சேகர் பகிர்ந்திருந்தார். அதில், பெண் பத்திரிக்கையாளர்களை மிகவும் கொச்சைப்படுத்தும் வாசகங்கள் இடம் பெற்றிருந்தது. …

Read More »
error: Content is protected!