Saturday , January 19 2019
Home / செய்திகள் / தமிழ்நாடு செய்திகள் (page 112)

தமிழ்நாடு செய்திகள்

Tamilnadu News

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் – உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்க ஓபிஎஸ் உறுதி

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என தமிழக பொறுப்பு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் இன்றைய (புதன்கிழமை) செய்தியாளர்கள் சந்திப்பின்போது அதிமுக எம்.பி., மைத்ரேயன் உடன் இருந்தார். கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ. வி.சி.ஆறுக்குட்டி, முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன், அவரது மகன் மனோஜ் பாண்டியன், கே.பி.முனுசாமி ஆகியோர் உடன் இருந்தனர். செய்தியாளர்கள் சந்திப்பின்போது, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் …

Read More »

ஓ.பன்னீர்செல்வத்தின் பேட்டியை தொடர்ந்து அதிமுக தலைமை அலுவலகத்தில் போலீசார் குவிப்பு

ஓ.பன்னீர்செல்வத்தின் பரபரப்பு பேட்டியை தொடர்ந்து அதிமுக தலைமை அலுவலகத்தில் பெருமளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். போலீஸ் குவிப்பு : அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு எதிராக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று பரபரப்பு பேட்டி அளித்தார். இந்நிலையில் இன்று அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடைபெற உள்ளது. கட்சிக்குள் ஓ.பி.எஸ்., அணி, சசிகலா அணி என உருவாகி இருப்பதால் இன்றைய எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில் தகராறு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. கட்சிக்குள் அடுத்து என்ன …

Read More »

ஓபிஎஸ் பேச்சு: தமிழ் திரையுலகம் என்ன சொல்கிறது?

கமல்ஹாசன்: பிப்ரவரி 7. அதே நாளில் சில வருடங்களுக்கு முன்னால் கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராக ஒரு கலைஞனுக்கு தமிழ்நாட்டு மக்கள் எப்படி ஆதரவளித்தார்கள் என்பதைக் கண்டுகொண்டேன். தமிழ்நாடு உறங்கச்செல்லட்டும். நமக்கு முன்னால் அவர்கள் விழித்துக்கொள்வார்கள். சித்தார்த்: மெரினாவில் ஓபிஎஸ். தமிழக அரசியல் உண்மையான ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ மற்றும் ‘ஹவுஸ் ஆஃப் கார்ட்ஸ்’ சீரியல்களைப் போலவே இருக்கிறது. ஆர்யா: சரியான நேரத்தில் துணிவான, சிறந்த பேச்சு ஓபிஎஸ் சார். பாராட்டுகள். …

Read More »

என்னைப் பார்த்து முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சிரித்ததுதான் காரணம் என்று கூறுவது விசித்திரமானது, வெட்கக் கேடானது – சசிகலாவை திமுக செயல் தலைவர் ஸ்டாலின் காட்டம்

“அதிமுகவுக்குள் நிலவும் காட்சிகளுக்கு, என்னைப் பார்த்து முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சிரித்ததுதான் காரணம் என்று கூறுவது விசித்திரமானது, வெட்கக் கேடானது” என்று அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவை திமுக செயல் தலைவர் ஸ்டாலின் காட்டமாக கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “எதிர்கட்சி தலைவரைப் பார்த்து முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார்” என்று அதிமுகவின் பொதுச் செயலாளர் சசிகலா நடராஜன் குற்றம் சாட்டியிருப்பது உதவாக்கரை வாதம் போன்று …

Read More »

அதிமுக கட்சியின் தலைமை அலுவலகத்தில் சட்டப்பேரவை உறுப்பினர்களின் அவசர ஆலோசனை கூட்டம் – ஓ.பி.எஸ் நீக்கமா?

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்களின் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் தடாலடி பேட்டியை தொடர்ந்து இன்று அதிமுக எம்.எல்.ஏக்களின் அவசர கூட்டத்திற்கு கட்சி பொதுச்செயலாளர் சசிகலா அழைப்புவிடுத்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்களின் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. அதிமுக சட்டசபை உறுப்பினர்கள் …

Read More »

ஓபிஎஸ் பின்னணியில் திமுக உள்ளது. அதிமுகவில் குழப்பம் இல்லை. அனைவரும் ஒரே குடும்பமாக இருக்கிறோம் – சசிகலா

ஓபிஎஸ் பின்னணியில் திமுக உள்ளது. அதிமுகவில் குழப்பம் இல்லை. அனைவரும் ஒரே குடும்பமாக இருக்கிறோம் என்று அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா கூறியுள்ளார். ஜெயலலிதா நினைவிடத்தில் திடீர் தியானப் புரட்சி செய்த ஓ.பன்னீர்செல்வம், ”என்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்தனர். மக்கள் விரும்பினால் ராஜினாமாவை திரும்பப் பெறுவேன். அதிமுகவுக்கு சிறப்பான தலைமை தேவை. தற்போது கட்சியில் நடைபெறும் நிகழ்வுகளால் தொண்டர்கள் அதிருப்தி அடைந்திருக்கின்றனர். மக்களுக்காக தன்னந்தனியாக போராடத் தயாராக இருக்கிறேன்” …

Read More »

ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைத்த முதல்வருக்கே இந்த கதி – மிரட்டியவர்கள் மீது உடனடி நடவடிக்கை தேவை: ஸ்டாலின்

திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தனியார் தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: முதல்வர் பன்னீர்செல்வத்தை, சசிகலா செயல்படவே விடவில்லை என்பது அவரது பேட்டி மூலம் தெரியவருகிறது. இதைத்தான் திமுக சார்பில் தொடர்ந்து கூறினோம். தமிழகத்திலுள்ள எல்லா தரப்பு மக்களுமே, அதிமுகவை சேர்ந்த தொண்டர்களும் இதைத்தான் சொன்னார்கள். இப்போது ஓ.பி.எஸ்பேட்டி நிரூபித்துள்ளது. அனைத்துமே இந்த ஆட்சியில் பெரிய மர்மமாக இருந்து கொண்டுள்ளது. முதல்வரையே மிரட்டி ராஜினாமா கடிதம் வாங்கியுள்ளனர். …

Read More »

முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ள சசிகலாவை கண்டு எனக்கு எந்த பயமும் இல்லை – ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா

முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ள சசிகலாவை கண்டு எனக்கு எந்த பயமும் இல்லை என்று தீபா தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா இன்று சென்னை தியாகராய நகரில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ள சசிகலாவை கண்டு எனக்கு எந்த பயமும் இல்லை. சசிகலா முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டதை ஏற்க முடியாது. சசிகலா முதலமைச்சராவதை மக்கள் விரும்பவில்லை. சசிகலா முதலமைச்சரானால் …

Read More »

மக்களின் நேரடியான ஆதரவை பெறுவதற்கு தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவேன் – தீபா பேட்டி

மக்களின் நேரடியான ஆதரவை பெறுவதற்கு தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவேன் என்று தீபா தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா இன்று சென்னை தியாகராய நகரில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- எதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்று விளக்க வேண்டும். ஜெயலலிதாவிற்கு என்னென்ன சிகிச்சை அளிக்கப்பட்டது என்பது குறித்து முழு விவரம் தேவை. நான் அரசியலுக்கு வந்ததே ஜெயலலிதா விட்டு சென்ற பணியை தொடரவே. …

Read More »

முதலமைச்சராக வேண்டும் என்ற எண்ணத்தில் கட்சியின் சில நிர்வாகிகள் செயல்படுகின்றனர் – அதிமுக மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன்

முதலமைச்சராக வேண்டும் என்ற எண்ணத்தில் கட்சியின் சில நிர்வாகிகள் செயல்படுகின்றனர் என்று அதிமுக மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியுள்ளார். அதிமுக பிரமுகரும் முன்னாள் சபாநாயகர் பி.எச். பாண்டியன் மற்றும் அவரது மகன் மனோஜ் பாண்டியன் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய பி.எச். பாண்டியன், ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் மரணமடைந்த தேதி வரை மருத்துவமனையில் நடந்த நிகழ்வுகளையும், அதன்பின் அதிமுக …

Read More »
error: Content is protected!