Tuesday , August 21 2018
Breaking News
Home / செய்திகள் / தமிழ்நாடு செய்திகள் (page 106)

தமிழ்நாடு செய்திகள்

Tamilnadu News

சென்னை கடலோரப் பகுதியிலிருந்து 65 டன் எண்ணெய் கசிவு அகற்றம் – மத்திய அரசு

சென்னை கடலோரப் பகுதியிலிருந்து இதுவரை 65 டன் எண்ணெய் கசிவு அகற்றப்பட்டு இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த 28-ம் தேதி சென்னை காமராஜர் துறைமுகத்தில் 2 கப்பல்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் கடலில் கச்சா எண்ணெய் கசிந்தது. இந்நிலையில், சென்னை கடலோரப் பகுதியிலிருந்து இதுவரை 65 டன் அதாவது 90% எண்ணெய் கசிவு அகற்றப்பட்டு இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், இன்னும் ஓரிரு நாட்களில் …

Read More »

சிவகங்கை மாவட்டம் கீழடியில் 2-ம் கட்ட தொல்பொருள் ஆய்வுக்கு அனுமதி அளிக்க மத்திய அமைச்சருக்கு கனிமொழி கடிதம்

சிவகங்கை மாவட்டம் கீழடி பகுதியில் தொல்பொருள் ஆய்வுகளை தொடர அனுமதி அளிக்க வேண்டும் என்று திமுக. மாநிலங்களவை குழுத் தலைவர் கனிமொழி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினரான டி.கே.ரங்கராஜனும் இணைந்து மத்திய சுற்றுலா மற்றும் கலாசாரத் துறை அமைச்சர் (தனிப்பொறுப்பு) மகேஷ் சர்மாவுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். வெள்ளிக்கிழமை அனுப்பப்பட்டுள்ள அந்தக் கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது: அண்மையில் தமிழ்நாட்டிலுள்ள சிவகங்கை மாவட்டம் கீழடி கிராமத்தில் நடத்தப்பட்ட தொல்பொருள்துறை ஆய்வு பற்றி தங்கள் கவனத்துக்குக் …

Read More »

முதலமைச்சராக இருக்கும் ஓ.பன்னீர்செல்வம் தன் பதவி பற்றி கவலைப்படாமல் மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்த ஸ்டாலின் வலியுறுத்தல்

தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தன் பதவி பற்றி கவலைப்படாமல் மாநிலத்தில் நிலவும் மக்கள் பிரச்சினைகள், அண்டை மாநிலங்களால் தமிழகத்திற்கு ஏற்படும் பிரச்சினைகள், மாநிலத்திற்கு கிடைக்க வேண்டிய மத்திய அரசு திட்டங்கள், உதவிகள் போன்றவற்றில் தன் முழுக்கவனத்தை செலுத்த வேண்டும் என தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் சனிக்கிழமை விடுத்துள்ள அறிக்கையில், “பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகளை கட்டியும், ஏற்கனவே இருக்கின்ற தடுப்பணைகளின் …

Read More »

கப்பல் விபத்தால் ஏற்பட்ட எண்ணெய் கசிவு நிலைமை சீராகும் வரை மீனவர்களுக்கு நிவாரணம் தேவை – தொல். திருமாவளவன்

கப்பல் விபத்தால் ஏற்பட்ட எண்ணெய் கசிவினால் சென்னையில் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எண்ணூர் ராமகிருஷ்ணா நகர் கடற்பகுதியில் எண்ணெய் கழிவு பாதிப்பை விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல். திருமாவளவன் ஆய்வு மேற்கொண்டார். கடலில் கலந்த எண்ணெய் படலத்தை அகற்றும் பணியை பார்வையிட்ட திருமாவளவன், வாளியில் எண்ணெய் கழிவுகளை அகற்றுவது அதிர்ச்சியளிப்பதாக கூறினார். செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், கப்பல்கள் மோதி விபத்து ஏற்பட்டு 8 நாட்கள் ஆகிவிட்டன. கடற்கரை ஓரங்களில் …

Read More »

அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை நடப்பதாக தகவல் – அதிமுக கட்சி வட்டாரம்

அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சசிகலா முதல்வராகப் பொறுப்பேற்க ஒப்புதல் கடிதம் பெறுவதற்காகவே கூட்டம் கூட்டப்பட்டிருப்பதாக கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா கடந்த டிசம்பர் 31-ம் தேதி பொறுப்பேற்றார். அப்போதே கட்சியும், ஆட்சியும் ஒருவரிடம் இருக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி, சசிகலாவை முதல்வராக்கும் முயற்சி நடந்தது. அமைச்சர்கள் சிலரே அதற்கு அடித்தளம் இட்டனர். ஆனால், என்ன காரணத்தாலோ அதற்கான வேலைகள் …

Read More »

இலங்கை சிறைகளில் உள்ள தமிழக மீனவர்கள் 25 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் கடிதம்

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 25 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்கும்போது, எல்லை தாண்டி வந்ததாக கூறி அவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வதும், அவர்களின் படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர்ந்து நடைபெறுகிறது. விசாரணைக் காவல் முடிந்ததும் மீனவர்களை விடுதலை செய்கின்றனர். ஆனால், படகுகள் விடுவிக்கப்படுவதில்லை. இதனால், மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக …

Read More »

மத்திய பட்ஜெட்டில், தமிழக ரயில் திட்டங்களுக்கு ரூ.2,287 கோடி ஒதுக்கீடு

மத்திய பட்ஜெட்டில், தமிழக ரயில் திட்டங்களுக்கு ரூ.2,287 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த 2009 முதல் 14ம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட தொகையை விட 160 சதவீதம் அதிகமாகும். மாநில வாரியாக… இது தொடர்பாக ரயில்வே அமைச்சகம் டுவிட்டரில் வெளியிட்ட செய்தி: * மேற்கு வங்க மாநில ரயில்வே திட்டங்களுக்காக ரூ.6336 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த 2009-14ம் ஆண்டுகளில் ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகையை விட 295 சதவீதம் …

Read More »

முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் மேயர் உள்பட அ.தி.மு.க. பிரமுகர்கள் 23 பேருக்கு புதிய பதவி: சசிகலா அறிவிப்பு

முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், கோகுலஇந்திரா, வரகூர் அருணாசலம் மற்றும் சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி உள்பட 23 பேருக்கு புதிய பொறுப்புகளை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா வழங்கியுள்ளார். முதல்-அமைச்சராகவும் அ.தி.மு.க. பொதுச்செயலாளராகவும் இருந்த ஜெயலலிதா கடந்த டிசம்பர் மாதம் 5-ந்தேதி மரணம் அடைந்தார். இதையடுத்து அ.தி.மு.க.வை வழி நடத்திச் செல்லப்போவது யார் என்ற மிகப்பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் முதல்-அமைச்சர் பொறுப்பை ஓ.பன்னீர்செல்வம் ஏற்றார். டிசம்பர் 31-ந்தேதி …

Read More »

எண்ணூர் கச்சா எண்ணெய் கசிவை உடனடிநடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் – பாமக இளைஞரணிச் செயலாளர் அன்புமணி

கச்சா எண்ணெய் கசிவை உடனடியாக அகற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். தேசிய எண்ணெய் கசிவு பேரிடர் திட்டத்தை முறைப்படி செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பாமக இளைஞரணிச் செயலாளர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை எண்ணூர் துறைமுகம் அருகில் இரு கப்பல்கள் மோதிக் கொண்டதால் வங்கக் கடலில் ஏற்பட்ட கச்சா எண்ணெய்க் கசிவு எட்டு …

Read More »

முதல்வர் பதவியில் நீடிக்க ஓ.பன்னீர்செல்வத்துக்கு நெருக்கடி சூழ்நிலை வந்தால் உதவுவது குறித்து திமுக முடிவெடுக்கும் – துரைமுருகன் தகவல்

Read More »
error: Content is protected!