Sunday , December 16 2018
Home / செய்திகள் / தமிழ்நாடு செய்திகள் (page 10)

தமிழ்நாடு செய்திகள்

Tamilnadu News

நள்ளிரவில் கருணாநிதி சமாதியை நோக்கி படையெடுக்கும் மக்கள்!! என்ன நடந்தது…

மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் உடல் மெரினாவில் அண்ணா சமாதி அருகே நேற்று மாலை அடக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில், நள்ளிரவிலும் கலைஞரின் சமாதியை காண ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மெரினா கடற்கரையில் அண்ணா சமாதியைச் சுற்றிலும் சூழ்ந்திருந்ததை காணக்கூடியதாக இருந்தது. இந்நிலையில், கலைஞர் சமாதியை காண நள்ளிரவு என்றும் பாராமல் அதிகளவில் தொண்டர்கள் வருகைத் தந்துள்ளார்கள். மேலும், எம்.ஜி.ஆர். சமாதியிலும், ஜெயலலிதா சமாதியிலும் மின்குமிழ்கள் எரிகின்றன, ஆனால், அண்ணா …

Read More »

உயர்நீதிமன்ற தீர்ப்பை கேட்டு கருணாநிதி காலடியில் கதறியழுத ஸ்டாலின்

நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை, ஸ்டாலின் நேரில் சந்தித்து மெரினாவில் உள்ள அண்ணா சமாதியில் கலைஞருக்கு இடம் ஒதுக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார். பதிலுக்கு சட்ட சிக்கல்கள் இருப்பதால் அண்ணா சமாதியில் இடம் ஒதுக்க முடியாது என்றும், அதற்கு பதிலாக காந்தி மண்டபம் அருகே 2 ஏக்கர் நிலம் ஒதுக்க தயார் என்றும் தமிழக அரசு அறிக்கை வெளியிட்டது. இதனைத்தொடர்ந்து திமுக தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதில் இரு …

Read More »

தி.மு.க தலைவர் கருணாநிதி காலமானார்!!

கருணாநிதி

வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக காவேரி மருத்துவமனையில் 11 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த தி.மு.க தலைவர் கருணாநிதி காலமானார். அவருக்கு வயது 94 வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை கோபாலபுரம் இல்லத்தில் தங்கி சிகிச்சை பெற்று வந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நிலை கடந்த 27-ந் தேதி நள்ளிரவில் திடீரென்று மோசமானது. இதைத்தொடர்ந்து நள்ளிரவு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரியில் …

Read More »

விடுதலைப் புலிகள் தொடர்பில் வைகோவுக்கு மத்திய அரசு பதில் மனு!

விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து வைகோ வழக்கு தொடர உரிமை இல்லை என்று சென்னை ஐகோர்ட்டில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1991-ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட பின்னர், விடுதலைப் புலிகள் இயக்கத்தை மத்திய அரசு தடை செய்தது. இந்த தடையை 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நீட்டிக்க, ஐகோர்ட்டு நீதிபதி தலைமையில் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச்சட்டத்தின் …

Read More »

கருணாநிதி தொடர்ந்தும் கவலைக்கிடம்! காப்பாற்ற போராடும் டாக்டர்கள்

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதால், அவரது உயிரைக் காப்பாற்ற டாக்டர்கள் போராடி வருகின்றனர். திடீர் சுகயீனம் காரணமாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மு.கருணாநிதிக்கு இன்று 11ஆவது நாளாக சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் நான்கு நாட்களுக்கு முன்பு கடும் நோய் தொற்றால் கருணாநிதியின் கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாக அவருக்கு மஞ்சள் காமாலை தாக்கியது. இதற்கிடையே பிளட்டேட்ஸ் எனப்படும் ரத்த தட்டணுக்களும் குறைந்தது. நோய் …

Read More »

யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுப்பேன் – எச்சரித்த மு.க.ஸ்டாலின்

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஆர்.ஆர்.அன்பு பிரியாணி உணவகத்தில் பிரியாணிக்காக திமுக நிர்வாகி யுவராஜ் நடத்திய குத்து சண்டைதான் தற்போது சமூக வலைத்தளங்களில் முக்கிய செய்தியாக இருக்கிறது. யுவராஜின் செயலை கிண்டலடித்து ஏராளமான மீம்ஸ்கள் வலம் வந்து கொண்டிருக்கிறது.அதோடு, ‘ஓசிபிரியாணிதிமுக’ என்கிற ஹேஷ்டேக் நேற்று டிவிட்டரில் ட்ரெண்டிங் ஆனது.. யுவராஜ் விருகம்பாக்கம் திமுக தொண்டரணி பகுதி நிர்வாகியாக இருக்கிறர். இந்த விவகாரம் பூதாகரம் ஆனதால், அவர் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக திமுக தரப்பு …

Read More »

கருணாநிதியின் சொத்துக்கள் எவ்வளவு தெரியுமா? வெளிவரும் சர்ச்சையான கருத்துக்கள்

தி.மு.க தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர் தொடர்பிலான பல கருத்துக்கள் ஊடகங்கள் வாயிலாகவும், சமூக வலைத்தளங்களின் ஊடாகவும் பகிரப்பட்டு வருகின்றன. இந்நிலையில், முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மார்கண்டேய கட்ஜு டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மருத்துவர்களின் தொடர் சிகிச்சைக்கு பிறகு கருணாநிதியின் உடல்நிலை நன்றாக தேறி வருகிறது என்று மருத்துவர்கள் கூறியுள்ள நிலையில் நீதிபதி …

Read More »

எடப்பாடியை மிரட்டும் மத்திய அரசு : பின்னணி என்ன?

முதல்நிலை ஒப்பந்ததாரர் செய்யாதுரை வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் இதுவரை ரூ.163 கோடி பணமும், 100 கிலோ தங்கமும் கைப்பற்றப்பட்டுள்ளது. இதுபோக பல ஆவணங்களையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். மேலும், செய்யாதுரையின் எஸ்.பி.கே. நிறுவனத்தில் பங்குதாரராக உள்ளவரும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் சம்பந்தியுமான சுப்பிரமணியை வருமான வரித்துறையினர் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவந்துள்ளனர். 4வது நாளாக இன்னும் சோதனை தொடர்ந்து கொண்டிருக்கிறது. இது எடப்பாடி பழனிச்சாமிக்கு கடும் …

Read More »

பாஜகவின் கருத்தை பிரதிபலிக்கும் ரஜினி – அரசியலில் சறுக்குவாரா?

அரசியலுக்கு வருவேன் என 20 வருடங்களுக்கும் மேலாக திரைப்படங்களில் பஞ்ச் வசனங்கள் பேசிக்கொண்டிருந்தார் நடிகர் ரஜினிகாந்த். பிரதமர் மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை ‘புதிய இந்தியா பிறந்தது’ என வரவேற்றார். மத்திய அரசுக்கு எதிராக அவர் எந்த கருத்தையும் தெரிவிக்காமல் இருந்தார். கடந்த டிசம்பர் 31ம் தேதி அரசியலுக்கு வருவதாய் அறிவித்தார். குறிப்பாக ஆன்மிக அரசியலை முன்னெடுப்பதாகவும் கூறினார். நாங்கள் ஏற்கனவே ஆன்மிக அரசியலைத்தான் செய்து கொண்டிருக்கிறோம் என தமிழிசை சவுந்தரராஜன் …

Read More »

8 வழிச்சாலை தேவை தான்… ஆனால்? : ரஜினிகாந்த்

சென்னை – சேலம் இடையே மத்திய அரசு ரூ.10 ஆயிரம் கோடி செலவில் 8 வழி பசுமை சாலைத் திட்டத்தை அமைக்க முடிவு செய்துள்ளது. காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் ஆகிய 6 மாவட்டங்களில் அமைய உள்ள இந்த திட்டத்தால் ஏராளமான விளை நிலங்கள் பாதிக்கப்படும் என தெரிகிறது. இயற்கை வளங்களை அழித்து அமைக்க போகும் இந்த சாலைக்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தாலும் தமிழக அரசோ …

Read More »
error: Content is protected!