Thursday , January 18 2018
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் (page 4)

இலங்கை செய்திகள்

Srilankan News

ஜனாதிபதியின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி !

கடந்த காலத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் ஒவ்வொரு கணமும் எம்மை அறிவாலும் அனுபவத்தாலும் பரிபூரணப்படுத்தும் அதேவேளை, மலரும் ஒவ்வொரு நிமிடமும் எமது ஆற்றல்களை பரீட்சித்துப் பார்த்தவண்ணமே இருக்கிறது. இதன்போது நாம் வெளிப்படுத்தும் உன்னத அர்ப்பணிப்பும் உறுதிப்பாடுமே எம்மை வெற்றியை நோக்கி இட்டுச் செல்கின்றன. நிறைவேறும் வருடத்திற்கு விடைகொடுப்பதும் மலரும் புத்தாண்டை எதிர்பார்ப்புக்களுடன் வரவேற்பதும் இந்த அடிப்படையிலேயே நிகழ்கின்றது. அதற்கமைய, கடந்த வருடத்தை ஒரு நாடு என்றவகையில், எமக்கு எண்ணற்ற சாதகமான …

Read More »

கஞ்சா கடத்திய இந்தியர் உட்பட நால்வர் கைது!!!

காக்கைத்தீவு வடக்கில் சட்டவிரோதமாக கேரள கஞ்சாவினை கடத்திய இந்தியர் உட்பட நால்வரை நேற்று இரவு கடற்படையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 39 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. இவ் ஆண்டில் மட்டும் கடற்படையினரால் 949 கிலோ கஞ்சா கைப்பற்றப்ட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்தார்.

Read More »

தமிழக மீனவர்கள் நாடு திரும்புகின்றனர்

ஊர்காவல்துறை, பருத்தித்துறை மற்றும் தலைமன்னார் நீதிமன்றங்களால் விடுதலை செய்யப்பட்ட அறுபத்தொன்பது மீனவர்கள் இன்று (31) நாடு திரும்புகின்றனர். விடுதலை செய்யப்பட்ட இவர்கள் அனைவரும் மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். அதன்பின், காங்கேசன்துறை துறைமுகத்தில் இருந்து கடற்படையின் கண்காணிப்புக் கப்பலில் இலங்கையை விட்டுப் புறப்பட்டனர். இவர்கள் அனைவரும் காலை 11.30 மணியளவில் சர்வதேச கடல் எல்லையில் வைத்து இந்திய கடலோர காவல் படையிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர். அங்கிருந்து அவர்கள் இந்திய கடற்படைக்குச் சொந்தமான ‘அமாயா’ …

Read More »

மத்திய வங்கி வெளியிட்டுள்ள முக்கிய அறிவித்தல்

சிதைக்கப்பட்ட, பழுதாக்கப்பட்ட நாணயத் தாள்களை மாற்றுவதற்கான கால எல்லையை மத்திய வங்கி நீட்டித்துள்ளது. பழுதடைந்த அல்லது பழுதாக்கப்பட்ட நாணயத் தாள்களை மாற்றுவதற்காக இன்று வரை, அதாவது டிசம்பர் 31ஆம் திகதி வரை மத்திய வங்கி கால அவகாசம் வழங்கியிருந்தது. எனினும் அந்தக் கால எல்லையை எதிர்வரும் மார்ச் 31ஆம் திகதி வரை நீட்டித்திருப்பதாக மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது. இனியும் அந்தக் கால எல்லை நீட்டிக்கப்பட மாட்டாது என்று தெரியவரும் …

Read More »

இணைய ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து கலந்துரை

மிகவும் பொறுப்புவாய்ந்த, வினைத்திறனான இணைய ஊடகத்துறைக்காக உருவாக்கப்பட்ட ஒழுக்கக்கோவையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று கொழும்பில் இடம்பெற்றது இணைய ஊடகவியலாளர் சங்கத்தினால் இந் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி, “இணைய ஊடகத்துறைக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த ஒழுக்க நெறிக்கோவை தயாரிப்பு பணியானது மிகவும் முக்கியமானதாகும் என்று தெரிவித்தார். அத்துடன் இது ஊடகத்துறைக்கு மட்டுமன்றி அரசியல் துறை மற்றும் முழு மனித சமூகத்திற்கும் காலத்திற்குத் தேவையானதொரு பணியாகும்.” …

Read More »

ஒன்றிணைத்த நாட்டை பிரித்து வேட்டையாட பலரும் முயற்சி

பல இன்னல்களுக்கு மத்தியில் ஒன்றிணைத்த நாட்டை பிரித்து வேட்டையாட பலரும் முயற்சிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். எதிரணி தலைவர்கள் பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் அரசாங்கத்தில் இணைகின்றனர். எதிர்பார்ப்புகள் நிறைவேறா விட்டால் எங்கு செல்வார்கள். அவ்வாறு செல்பவர்களும் அரசாங்கத்திற்கு எதிராண நிலைப்பாட்டிலேயே உள்ளனர். ஆனால் அவ்வாறான ஒரு குறுகிய நோக்கம் மக்களிடம் இல்லை. எனவே அரசாங்கத்திற்கு எதிரானதும் ஆதராவனதுமான தெளிவான ஒரு பிளவு தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ளது. இந்த பிளவு …

Read More »

ஜெனி­வாவில் இலங்கை தொடர்பான விவாதம் மார்ச் 21 ஆரம்பம்

ஐக்­கி­ய­ நா­டுகள் மனித உரிமை பேர­வையின் 37 ஆவது கூட்டத் தொடர் எதிர்­வரும் பெப்­ர­வரி மாதம் 26 ஆம் திகதி ஆரம்­ப­மா­க­வுள்ள நிலையில், மார்ச் மாதம் 21 ஆம்­ தி­கதி இலங்கை தொடர்­பான விவாதம்  ஆரம்பமாகவுள்ளது. இலங்கை தொடர்­பான பிர­தான விவாதம் 27ஆம் திகதி இடம்­பெ­றும். ஐக்­கி­ய­நா­டுகள் மனித உரிமை ஆணை­யாளர் செயிட் அல் ஹூசைன் இலங்கை தொடர்­பான தனது அறிக்­கையை முன்­வைப்பார். அதன்­பின்னர் இலங்கை தனது தரப்பு நியாயம் …

Read More »

பொம்மை வெளி­ குடி தண்­ணீர் பிரச்­சி­னை­க்குத் தீர்வு

பொம்மை வெளிப் பகு­தி­யில் யாழ்ப்­பாண மாந­கர சபை­யால் ஆழ்­து­ளைக் கிணறு ஒன்று அமைக்­கப்­ப­ட­வுள்­ளது. அந்­தக் கிணறு அமைக்­கப்­பட்­டால் பொம்மை வெளி­யில் உள்ள மக்­க­ளின் குடி­ தண்­ணீர்த் தேவை பூர்த்­தி­ செய்­யப்­ப­டும் என யாழ்ப்­பாண மா நகர சபை ஆணை­யா­ளர் ரி. ஜெய­சீ­லன் தெரி­வித்­தார். யாழ்ப்­பா­ணம், பொம்மை வெளிப்­ப­கு­தி­யில் குடி­யி­ ருக்­கும் மக்­கள் அந்­தப் பகு­தி­யில் யாழ்ப்­பாண மாந­கர சபை­யால் அமைக்­கப்­பட்ட நீர்க் குழா­யில் இருந்து வரும் தண்­ணீ­ரையே தமது தேவை­க­ளுக்­கா­கப் …

Read More »

தேவை­யா­ன­ளவு மழை கிடைத்­தும் எவ­ருமே அதைச் சேமிக்­க­வில்லை

தேவை­யான மழை­வீழ்ச்சி கிடைத்­தும் எவ­ருமே மழை­நீ­ரைச் சேமிக்­க­வில்லை. இயன்­ற­ளவு மழை­நீரை கட­லுக்கு அல்­லது தமது பிர­தே­சங்­க­ளி­லி­ருந்து அப்­பு­றப்­ப­டுத்தி விடு­வ­தி­லேயே சக­ல­ரும் குறி­யாக இருக்­கின்­ற­னர். இந்த நிலை மாற­வேண்­டும். இவ்­வாறு யாழ்ப்­பா­ணம் திருநெல்­வேலி யிலுள்ள வளி­மண்­ட­ல­வி­யல் திணைக்­க­ளப் பொறுப்­ப­தி­காரி ரி.பிர­தீ­பன் தெரி­வித்­தார்.இது குறித்து அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது: கடந்த வரு­டங்­க­ளை­விட இந்த வரு­டம் தேவை­யான அளவு மழை­வீழ்ச்சி கிடைத்­துள்­ளது. ஆனால் அதைச் சேக­ரிப்­ப­தற்­கான திட்­டம் இல்லை. மழை நீரைச் சேக­ரிக்­கா­வி­டின் அது …

Read More »

அரியாலை இளைஞர் கொலை – சந்தேகநபர்களின் மறியல் நீடிப்பு!!

அரியாலை மணியந்தோட்டம் பகுதியில் இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கின் சந்தேக நபர்களான சிறப்பு அதிரடிப்படையின் புலனாய்வு உத்தியோகத்தர்கள் இருவரின் விளக்கமறியல் எதிவரும் ஜனவரி 9ஆம் திகதிவரை இன்று நீடிக்கப்பட்டது. கடந்த ஒக்ரோபர் மாதம் 22ஆம் திகதி அரியாலை கிழக்கு மணியம்தோட்டம் வசந்தபுரம் முதலாம் குறுக்கு வீதிப் பகுதியில் 24 வயதுடைய டொன் பொஸ்கோ டினேசன் என்பவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தார். இளைஞர் மீது மேற்கொள்ளப்பட்ட …

Read More »
error: Content is protected!