Thursday , January 17 2019
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் (page 30)

இலங்கை செய்திகள்

Srilankan News

நள்ளிரவில் ரணிலுக்கு இப்படியொரு பேரிடி!

இலங்கை அரசியலில் எதிர்பாரத விதமாக பல மாற்றங்கள் இடம்பெற்றுவரும் நிலையில், பிரதமரை அலரிமாளிகையிலிருந்து வெளியேற்ற பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார் மைத்திரி. இந்நிலையில் சற்றுமுன் அவர் ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன, அந்த வகையில் ரணிலின் காவலர் எண்ணிக்கையை 10 ஆக குறைக்க பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர, பிரதமர் பாதுகாப்பு பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்கிரமசிங்கவை பணித்துள்ளார், அலரிமாளிகையில் நீர், …

Read More »

ரணிலை கைது செய்ய முயற்சி இராணுவம் சுற்றிவளைப்பு?

இலங்கை ஜனநாயக சட்டவாக்க ஆட்சியில் இருந்து இராணுவ ஆட்சியை நோக்கி நகர்கிறதா என்ற சந்தேகம் வலுத்துள்ளது. தற்போது வரை பெரும்பான்மை ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கே உண்டு. ஆனால் பெரும்பான்மையை நிரூபிக்க மகிந்த ராஜபக்ச அவர்களினால் முடியாத நிலையில் மகிந்த ராஜபக்ச அவர்கள் தனது சகோதரர் கோதபாய ராஜபக்சே ஊடாக முப்படைகளை கொண்டு நாட்டை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர கூடும். அதற்கான ஏற்பாடுகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. செயலாளர்கள் மாற்றம், பொலீஸ் மா அதிபர் …

Read More »

நாட்டில் தற்போது நிலவுவது இராணுவ ஆட்சியாகும்

பாராளுமன்றத்தை கூட்டி பெரும்பான்மையை நிரூபித்ததன் பின்னர் நாம் அரசாங்கத்தை விட்டு வெளியேறுவோம் என ஐக்கிய தேசியக் கட்சியின் இராஜாங்க அமைச்சர்களான நளின் பண்டார மற்றும் சுஜவ சேனசிங்க ஆகியோர் தெரிவித்துள்ளனர். அலரி மாளிகையில் இன்று காலை 11 மணியளவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர்கள் இதனை தெரிவித்துள்ளனர். மேலும் இதுகுறித்து கருத்து தெரிவிக்கையில், அலரி மாளிகையை விட்டு நாம் வெளியேற மாட்டோம், சட்டரீதியாக …

Read More »

ரணில்தான் இலங்கையின் பிரதமர்! அதிரடி அறிவிப்பு!!

ரணில் விக்ரமசிங்கே இலங்கையின் பிரதமராக நீடிப்பார் என்று அந்நாட்டு நாடாளுமன்ற சபாநாயர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இலங்கையின் அதிபர் மைத்ரிபால சிறிசேனா, மகிந்த ராஜபக்சேவை பிரதமராக அறிவித்துள்ளார். ரணில் விக்ரம சிங்கே அங்கு பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் அங்கு யார் பிரதமர் என்ற குழப்பம் உருவாகி உள்ளது. நீடிக்க உள்ளார் இலங்கை பிரதமராக ரணில் விக்ரமசிங்கே நீடிப்பார் என்று அந்நாட்டின் …

Read More »

கூட்டமைப்பின் ஆதரவு மஹிந்தவுக்கு

இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முழுமையாக அமுல்படுத்த உத்தரவாதம் வழங்கினால் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவு வழங்குவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் இதனைத் தெரிவித்தார். அத்தோடு, புதிய அரசியலமைப்பு தொடர்பாக இலங்கை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட பிரேரணையையும் செயற்படுத்த வேண்டுமென்ற நிபந்தனையையும் கூட்டமைப்பு முன்வைப்பதாக சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார். நல்லாட்சி அரசாங்கத்தில் ஏற்பட்ட பிளவைத் …

Read More »

மீண்டும் பரபரப்பில் இலங்கை அரசியல்

ஆறு எம்.பி.க்களை வைத்துள்ள தமிழ் முற்போக்கு கூட்டணி ரணில் விக்கிரம சிங்கவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக அதன் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். தற்போது கொழும்பில் நடந்துவரும் செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறினார். அதைப் போலவே இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூஃப் ஹக்கீமும் ரணில் விக்கிரம சிங்கே கரத்தை பலப்படுத்துவதாக அறிவித்தார். நாடாளுமன்றம் நவம்பர் 16-வரை ஒத்திவைத்துள்ளனர். இதனிடையே நாடாளுமன்றத்தை நவம்பர் 16 வரை ஒத்திவைத்து வர்த்தமாணி அறிவிப்பு …

Read More »

மைத்திரியின் மதிய முடிவால் பேரதிர்ச்சியில் ரணில்

பிரதமரின் செயலாளர் சமன் எக்கநாயக்கவின் பதவி உடன் நடைமுறைக்கு வரும்வகையில் நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். ரணில் விக்கிரமசிங்கவின் செயலாளரான சமன் ஏக்கநாயக்கவின் பதவியே உடனடியாக நடைமுறைக்கு வரும்வகையில் நீக்கப்பட்டுள்ளது. இதன்படி தற்போதைய பிரதமர் மகிந்த ராஜபக்சவின் பரிந்துரைக்கு அமைய புதிய செயலாளரை ஜனாதிபதி நியமிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புரைக்கமைய பாராளுமன்றின் இரண்டாவது கூட்டத்தொடர் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதன் படி பாராளுமன்றின் …

Read More »

மஹிந்த தலைமையில் புதிய அமைச்சரவை

புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான விசேட கூட்டம் ஒன்று தற்போது கொழும்பில் இடம்பெறுவதாக கொழுப்புத்தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் நாளைய தினம் புதிய அமைச்சரவை நியமிக்கப்பட உள்ளதாகவும் குறித்த தகவல்கள் தெரிவிக்கின்றன. நாளை மறுதினம் திங்கட்கிழமை அமைச்சுக்களின் புதிய செயலாளர்கள் மற்றும் பிரதமரின் செயலாளர் நியமிக்கப்பட உள்ளதாகவும் அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிப்பதாக குறித்த செய்தி தெரிவிக்கின்றது.

Read More »

மகிந்தவின் புதிய அரசில் அமைச்சராக பதவியேற்கவுள்ள கருணா?

கருணா அம்மான் அமைச்சராக பதவியேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்றத்திற்குள் நுளையும் கருணாா முக்கிய அமைச்சு பதவி வழங்கப் படலாம்…

Read More »

பல்கலைக்கழக மாணவர்கள் 15 பேர் அதிரடியாக கைது!

அம்பாறை ஒலுவில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 15 மாணவர்கள் பொலிஸாரினால் இன்று காலை அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். பல்கலைக்கழகக் கட்டிடத்தில் தங்களது பெற்றோருடன் தங்கியிருந்த நிலையில் அக்கரைப்பற்றுப் பொலிஸாரினால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நிர்வாகக் கட்டடத்தை, தொழில்நுட்ப துறையை சேர்ந்த சில சிங்கள மாணவர்கள், கடந்த இரண்டு வார காலமாக ஆக்கிரமித்து போராடி வந்தனர். இதனையடுத்தே பல்கலைக்கழகத்தை மறு அறிவிப்பு செய்யும் வரையில், மூடும் தீர்மானம் நிர்வாகத்தினால் …

Read More »
error: Content is protected!