Monday , September 24 2018
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் (page 30)

இலங்கை செய்திகள்

Srilankan News

வடக்கு ,கிழக்கில்; சட்டவிரோத மருத்துவ செயற்பாடுகள் தொடர்பில் விசாரணை

இந்திய மருத்துவர்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சட்டவிரோத மருத்துவ செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளார்களா என்பது பற்றி விசாரணை நடத்தப்படவுள்ளது. இந்திய வைத்தியர்கள் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அனுமதியின்றி மருத்துவ சேவைகளில் ஈடுபடுகிறார்களா என்பது பற்றி விசாரணை நடத்த சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்திய வைத்தியர்கள் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மருத்துவ சேவைகளில் ஈடுபட்டுள்ளார்கள் என்று வெளியான செய்திகளை அடுத்து சுகாதார அமைச்சு இது பற்றி கவனம் செலுத்தியுள்ளது. வெளிநாடுகளைச் …

Read More »

அவசரகாலச் சட்டத்தை தொடரும் எண்ணத்தில் அரசாங்கம்

அவசரகாலச் சட்டத்தை தொடர்ந்தும் நீடிப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை உறுதிப்படுத்தும் வகையில் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார கருத்து வெளியிட்டிருந்தார். ஜப்பான் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பியதும் பாதுகாப்புச் சபைக் கூடி பாதுகாப்பு நிலைமை குறித்து ஆராய்ந்த பின்னர் அவசரகாலச் சட்டம் தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் எனவும் மத்துமபண்டார குறிப்பிட்டிருந்தார். அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்தி நாட்டை ஆட்சி செய்யும் …

Read More »

நியூயோர்க் ஐ.நா. தலைமையகம் முன்னால் இலங்கை முஸ்லிம்களுக்காகப் போராட்டம்

அமெரிக்க ஐக்கிய நாடுகள் சபைக்கு முன்னால் இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுவரும் வன்முறைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. நேற்றுமுன்தினம் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அமெரிக்கா வாழ் இலங்கை முஸ்லிம்களும், தமிழர்களும் கலந்துகொண்டனர்.

Read More »

வெறுப்புணர்வை தூண்டியோருக்கு எதிராக நடவடிக்கை அவசியம் : பிரிட்டன் வலியுறுத்து

இன, மதங்களுக்கு இடையே வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் செயற்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென இலங்கை அரசிடம் பிரிட்டன் வலியுறுத்தியுள்ளது. இலங்கைக்கான பிரிட்டன் உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டவுரிஸ் தமது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவுகளில் இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளார். அண்மையில் இடம்பெற்ற வன்முறை காரணமாக பெருமளவானோர் அச்சமடைந்துள்ளனர். இந் நிலையில், இன மற்றும் மத ரீதியான வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில், சமூக வலைத்தளங்கள் உள்ளடங்காளாக செயற்பட்ட அனைவருக்கும் எதிராக …

Read More »

ரஷ்யா சென்ற நாமல்

ரஷ்யாவில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலைக் கண்காணிக்க கூட்டு எதிரணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவில் எதிர்வரும் 18ஆம திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலை சுதந்திரமான கண்காணிப்பாளராக கண்காணிப்பதற்கு வருமாறு நாமல் ராஜபக்ஷவுக்கு ரஷ்யா அழைப்பு விடுத்துள்ளது. இந்த அழைப்பை ஏற்று நாமல் ராஜபக்ஷ ரஷ்யாவுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

Read More »

இலங்கையில் பேஸ்புக் மீதான தடை நீக்கப்பட்டது

இலங்கையில் பேஸ்புக்கிற்கு விதிக்கப்பட்டிருந்த தற்காலிக தடை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமது டுவிட்டர் தளத்தில் இதனைப் பதிவு செய்துள்ளார். பேஸ்புக் நிறுவனத்தின் பிரதிநிதிகளும்இ ஜனாதிபதி செயலாளருக்கும் இடையிலான பேச்சுவார்த்தை ஒன்று இன்று நடைபெற்றது. இதன்போது இனவிரோத பதவிகளை தடுப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்வதாக பேஸ்புக் பிரதிநிதிகள் உறுதியளித்தனர். இதன்படி இந்த தடையை நீக்குவதற்கு தாம் இலங்கை தொலைத்தொடர்புகள் ஆணைக்குழுவிற்கு அறிவுறுத்தி இருப்பதாகவும் …

Read More »

இலங்கை விவகாரங்களுக்கான அதிகாரிகளுடன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சந்திப்பு

இலங்கை விவகாரம் தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு நியாயாதிக்கத்தை அளிக்கும் தீர்மானத்தை அல்லது விசேட சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தை உருவாக்கும் தீர்மானத்தை மேற்கொள்ளுமாறு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அங்கம்வகிக்கும் உறுப்புநாடுகளிடம் வலியுறுத்த வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் உள்ளடங்கிய …

Read More »

சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்தக்கூடிய முறையான பொறிமுறையொன்று அவசியமாகும்

கண்டி மற்றும் அம்பாறை சம்பவங்களின் பின்னர் விதிக்கப்பட்ட பேஸ்புக் சமூக வலையமைப்பிற்கான தற்காலிகமான தடை எதிர்வரும் சில தினங்களுக்குள் நீக்கப்படும் எனவும், சமூக நலனுக்காக மேற்கொள்ளப்படும் எந்தவொரு விடயத்திற்கும் இடமளிக்கப்பட்டபோதிலும், சமூகத்தை சீர்குலைக்கும் விடயங்கள் காணப்படுமாயின் அவற்றை கட்டுப்படுத்தக்கூடிய முறையொன்று அவசியமாகும் எனவும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். ஜப்பானிற்கான அரசமுறை விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் ஜப்பானில் வசிக்கும் இலங்கையர்களுக்குமிடையிலான சந்திப்பு நேற்று(13) பிற்பகல் டோக்கியோ இம்பேரியல் …

Read More »

வன்முறைகளில் 24 பள்ளிவாசல்கள், 445 வீடுகள் மற்றும் வாணிபங்கள் சேதம்

சிறிலங்காவில் கடந்தவாரம் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளில்இ 24 பள்ளிவாசல்கள்இ 445 வீடுகள் மற்றும் வாணிபங்கள் தாக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது. கடந்த 4ஆம் நாள் கண்டி மாவட்டத்தில் உள்ள தெல்தெனிய மற்றும் திகண பகுதிகளில் தொடங்கிய வன்முறைகளில் முஸ்லிம்களின் பெருமளவு சொத்துக்கள் நாசமாக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக நேற்று தகவல் வெளியிட்ட சிறிலங்கா காவல்துறைப் பேச்சாளர் ருவான் குணசேகர, ”வன்முறைகளின் போதுஇ 445 வீடுகள், வாணிப நிலையங்கள் மீது …

Read More »

சீனா உடன்பாட்டை மீறுவதற்கு சிறிலங்கா அனுமதிக்காது – மைத்திரி

சீனாவின் ஒரு பாதை ஒரு அணை பொருளாதார முயற்சிஇ அனைத்துலக சமூகத்துக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்த இடமளிக்கக் கூடாது என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜப்பானிய ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். “ஒரு பாதை ஒரு அணை திட்டம் ஏனைய நாடுகளுக்கு எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்தாது என்பதில் சீனா தெளிவாக இருக்க வேண்டும். அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா தனது இராணுவத் தேவைகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளக் …

Read More »
error: Content is protected!