Wednesday , November 21 2018
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் (page 3)

இலங்கை செய்திகள்

Srilankan News

மைத்திரிக்கு ரணில் விடுத்துள்ள அதிரடி சவால்

பாராளுமன்றத்தில் எந்தநேரத்திலும் பெரும்பான்மையை நிரூபிக்க தயாராக இருகின்றோம். ஆனால் மஹிந்த மைத்திரி அணியினர் நாட்டு மக்களை முட்டாளாக்க முயற்சிக்கின்றனர். எமது மக்கள் பலத்தை காட்ட பாராளுமன்ற தேர்தல் அல்ல ஜனாதிபதி தேர்தலையும் எதிர்கொள்ள தயாராகவே இருக்கின்றோம் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். வெற்றியை உறுதிப்படுத்வோம் என்ற தொனிப்பொருளில் ஐக்கிய தேசிய முன்னணி தற்போது கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் மக்கள் பேரணி ஒன்றை நடத்திவருகின்றது. இதில் …

Read More »

கன்னத்தில் கை வைத்து கலவரத்தை வேடிக்கை பார்த்த ரணில்

பாராளுமன்ற அமர்வில் இன்று ஏற்பட்ட கைகலப்பு களேபரங்களுக்கு மத்தியில் ரணில் விக்ரமசிங்க எதிர்க்கட்சி பக்கத்தின் நான்காம் வரிசை ஆசனத்தில் அமர்ந்திருந்து கன்னத்தில் கை வைதுகொண்டு சிரித்தவாறு சம்பவங்களை வேடிக்கை பார்த்துகொண்டு இருந்துள்ளார். அத்துடன் அவ்வப்போது ரவி, சஜித்,சாகல எம்.பிக்கள் அவரிடம் காதில் ஏதேதோ கூறிக்கொண்டு அங்கும் இங்குமாய் ஓடித் திருந்தனர். இந்நிலையில் சபாபீடதுக்கு முன்பாக கைகலப்பு தொடங்கியவுடன் எதிர்க்கட்சி பக்கத்தில் முன்வரிசை ஆசனங்களில் அமர்ந்திருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் பாதுகாப்பு …

Read More »

உயர்நீதிமன்ற வளாகத்தில் விசேட அதிரடிப்படையினர் குவிப்பு!

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பான இரண்டாம் நாள் விசாரணைகள் சற்றுமுன் ஆரம்பமாகியுள்ளன. பிரதம நீதியரசர் தலைமையிலான மூவரடங்கிய நீதியரசர் குழாமில் இந்த மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. அத்தோடு, இன்றைய தினம் சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய தமது விளக்கத்தை முன்வைக்கவுள்ளார். அதனைத் தொடர்ந்து இன்று உயர்நீதிமன்றம் தமது வியாக்கியானத்தை வெளியிடுமென எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் உயர்நீதிமன்ற வளாகத்தில் விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது …

Read More »

மாபெரும் கூட்டணியுடன் களமிறங்கும் – பிரதமர் மகிந்த

சிறிலங்கா பொதுஜன முன்னணி மற்றும் சிறிலங்கா சுதந்திர கட்சி என்பன ஒன்றிணைந்து செயற்படும் என்று பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அனைத்து இலங்கை ஜமியத்துல் உலமா சபையின் பிரதிநிதிகளுடன் நேற்று நடந்த சந்திப்பின் போது அவர் இதனைக் கூறியுள்ளார். தற்போது கூட்டணிக்கான இணக்கம் காணப்பட்டிருப்பதாகவும், அதில் எந்த சிக்கலும் இல்லை என்றும் பிரதமர் மகிந்த கூறியுள்ளார். இந்த சந்திப்பில் அமைச்சர் ஃபைசர் முஸ்தபா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர். இதேவேளை, சிறிலங்கா …

Read More »

எதிர்வரும் தேர்தலில் மஹிந்த மைத்திரி கூட்டணியா? அதிர்ச்சியில் மக்கள்

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி ஒன்றின் ஊடாக போட்டியிடுவதற்கு தீர்மானித்திருப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ கூறியுள்ளார். இதற்காக ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியும் பொதுஜன பெரமுனவும் உடன்பாட்டுக்கு வந்துள்ளதாக மஹிந்த ராஜபக்ஸ கூறியுள்ளார். அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபை பிரதிநிதிகளுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வௌியிடும் போது அவர் இதனைக் கூறியுள்ளார்.

Read More »

மெழுகுவர்த்தி போராட்டத்துக்கு தயாராகும் ஐ.தே.க

ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக, மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் ஒன்றை முன்னெடுக்க ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது. இன்று மாலை 6 மணிக்கு கங்காராம விகாரைக்கு அருகில் இந்த மெழுகுவர்த்திப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். இதேவேளை, ஜனாதிபதி நாடாளுமன்றத்தைக் கலைத்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் சிலர் நேற்றைய தினம் சிலாபம் முன்னேஷ்வரம் கோவிலில் ​தேங்காய் உடைத்து வழிபாட்டில் ஈடுபட்டதாகத் …

Read More »

நாட்டு மக்களுக்கு திடீர் இன்ப அதிர்ச்சி கொடுத்த மஹிந்த

இலங்கையில் மக்களின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றான தொலைபேசி அழைப்புக்கான கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. நாட்டின் பிரதான தொலைபேசி அழைப்பு சேவை நிறுவனத்தினால் நூற்றுக்கு 10 வீதம் தொலைபேசி அழைப்புக்கான வரிப்பணம் குறைக்கப்பட்டுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ச நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டதன் பின்னர் மக்களுக்கு வரி நிவாரணங்களை அறிமுகப்படுத்தி வைத்துள்ளார். அதன் ஒரு கட்டமாக தொலைபேசி அழைப்புக்கான வரிப்பணத்தை குறைப்பதற்கு, நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

Read More »

மகனை தொடர்ந்து திடீரென கட்சி தாவிய மகிந்த

பிரதமர் மகிந்த ராஜபக்ச சிறிலங்கா சுதந்திர கட்சியில் இருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மகிந்த ராஜபக்ச பொதுஜன பெரமுண கட்சியில் சற்றுமுன்னர் உறுப்பினராக இணைந்துகொண்டுள்ளார். அவருடன் மேலும் பல சிறிலங்கா சுதந்திர கட்சியில் இணைந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More »

ரணில் திடீர் பதவி விலகல் ?

நாட்டில் ஏற்பட்டிருக்கும் திடீர் அரசியல் மாற்றத்தை தொடர்ந்து பாராளுமன்றம் கலைக்கப்பட்டதை தொடர்ந்து ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை பதவியை ரணில் விக்கிரமசிங்க ராஜனாமா செய்ய உத்தேசித்துள்ளதாக கொழும்பு ஐ.தே.கட்சி உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. ரணிலின் பதவி விலகலை தொடர்ந்து கட்சியின் பிரதித்தலைவர் சஜித் பிரேமதாச தலைவர் பதவியை ஏற்று கட்சியை வழிப்படுத்தப் போவதாக தகவல்கள் வெளியாகின்றன. அம்பாந்தோட்டையை சொந்த இடமாக கொன்ட சஜித் பிரேமதாச முன்னாள் ஐ.தே.கட்சி பிரதமர் பிரேமதாசவின் …

Read More »

தொடர்ந்தும் ரணிலே!

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக சஜித் பிரேமதாசவை நியமிப்பது தொடர்பில் ரணில் விக்கிரம சிங்க தலைமையில் அலரி மாளிகையில் நடைபெற்ற அவசர கூட்டத்தில் எது வித புதிய தீர்மானங்களும் எட்டப்படவில்லை. அதன் படி ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக தொடர்ந்து ரணிலே செயற்படுவார்.

Read More »
error: Content is protected!