Friday , June 22 2018
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் (page 3)

இலங்கை செய்திகள்

Srilankan News

வடக்கு முதலமைச்சரின் யுக்தி!

கடந்த வாரம் நடந்த தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்தில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் உலகப் புகழ் பெற்ற குத்துச்சண்டை வீரர் மொஹமட் அலியின் வெற்றிக்கான யுக்தியைப் பற்றி விளக்கியிருந்தார். மொஹமட் அலியிடமிருந்து தமிழ் மக்கள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதே அவரது அந்த விளக்கத்துக்கான காரணம். அதனை அவர் வெளிப்படையாகவும் கூறியிருந்தார். தன்முகத்தில் அடிபடாமல் வைத்துக்கொண்டு எதிரியைக் களைப்படைய வைத்து தோற்கடிப்பது தான் மொஹமட் அலியின் யுக்தி என்று முதலமைச்சர் குறிப்பிட்டிருந்தார். …

Read More »

மைத்திரி இருந்திருந்தால் பிரபாகரன் இலகுவாக வென்றிருப்பார்: மஹிந்த

இலங்கையில் யுத்தம் நடைபெற்ற காலத்தில் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக இருந்திருந்தால், ஒரே ஒரு தொலைபேசி அழைப்பில் பிரபாகரன் யுத்தத்தில் வெற்றி பெற்றிருப்பார் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றை மேற்கோள் காட்டி வெளியிடப்பட்டுள்ள செய்தியில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. தொடர்ந்து அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கையின் வரலாற்றில் இதுவரையில் இல்லாத ஆட்சியே தற்போது நடைபெறுகின்றது. மைத்திரி ஜனாதிபதியாக வந்தவுடன் ரணிலை பிரதமராக்கினார். இப்போது பிரதமரை …

Read More »

ராஜபக்‌ஷே மீது குற்றம்சாட்டிய மைத்திரி! வெடித்தது சர்ச்சை!

ஜனாதிபதியின் கூற்று தொடர்பில் ஆராய்வதற்கு கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களின் கூட்டம் கடந்த வியாழக்கிழமை முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் நடைபெற்றது. அதன்போது அக்கூற்று குறித்து உண்மைத் தன்மையை வெளிப்படுத்துவதற்கு கூட்டு எதிர்கட்சியின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான டலஸ் அளகப் பெரும தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. எனவே அக்குழு அது சம்பந்தமாக ஆராய்ந்து குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. மஹிந்த ராஜபக்ஷ தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால …

Read More »

இலங்கை ரூபாய் வரலாறு காணாத பாரிய வீழ்ச்சி!

இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக, மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதற்கமைய, டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி, 159.61 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. ரூபாவின் விற்பனை பெறுமதி இவ்வாறு பாரிய வீழ்ச்சியை எதிர்நோக்கியுள்ளமை இதுவே முதல் தடவையாகும். கடந்த மே 17 ஆம் திகதி ரூபாவின் பெறுமதி 159.55 என்ற வீழ்ச்சியை பதிவு செய்திருந்தது. அதேவேளை நேற்றைய தினம் ரூபாவின் பெறுமதி, 159.61 ஆக வீழ்ச்சியடைந்துள்ளதென, இலங்கை மத்திய வங்கி …

Read More »

மனம் வருந்தி மன்னிப்பு கேட்ட ரஜினிகாந்த்

பத்திரிகையாளர் சந்திப்பின் போது ஒருமையில் பேசியதற்காக நடிகர் ரஜினிகாந்துக்கு பத்திரிகையாளர்கள் சங்கம் தரப்பில் இருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும், சென்னை பத்திரிகையாளர்கள் சங்கம், ரஜினிகாந்த் மன்னிப்பு கோர வேண்டும் என கூறியுது. இந்தநிலையில் இந்த விவகாரம் தொடர்பாக ரஜினிகாந்த் வருத்தம் தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவருடைய ட்விட்டர் பதிவில், ‘விமானநிலையத்தில் நேற்று அளித்த பேட்டியின் போது நான் மிரட்டல் தொனியில், ஒருமையில் பேசியதாகச் சென்னைப் பத்திரிகையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. யாரையும் புண்படுத்தும் …

Read More »

திருகோணமலையில் இளஞ்செழியன் விடுத்த முதல் அதிரடி தீர்ப்பு!

திருகோணமலை மேல் நீதிமன்றத்தின் குற்றவாளிக் கூண்டில் ஏறிய இரண்டு பௌத்த பிக்குகளை மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் குற்றவாளிக் கூண்டில் இருந்து இறங்குமாறு பணிப்புரை விடுத்துள்ளார். இரண்டு பௌத்த பிக்குகளுக்கும் எதிராக சட்டமா அதிபர் திணைக்களத்தினால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, வழக்கிற்காக நீதிமன்றுக்கு இன்று அழைக்கப்பட்டிருந்தனர். பௌத்த பிக்குகள் அவர்களின் வழக்கு விசாரணைக்கு வரும் தருணத்தில் குற்றவாளிக் கூண்டியில் ஏறியுள்ளனர். எனினும் அவ்விருவரையும் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் …

Read More »

மஹிந்த முக்கிய அறிவிப்பு!

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை நீக்குவதற்கான 20ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் நாளை மறுதினம் தீர்மானிக்கப்படுமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அன்றைய தினம் எதிரணி தலைவர்களுடன் சந்திப்பை நடத்தவுள்ளதாகவும் அவர் கூறினார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் இவர் இவ்விடயத்தைக் கூறியுள்ளார். 20ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பான பிரேரணை கடந்த வெள்ளிக்கிழமை சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளிக்கப்பட்டது. மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார …

Read More »

யாழ், குடாநாட்டை அச்சுறுத்தும் ஆபத்து! மக்களுக்கு விசேட எச்சரிக்கை

யாழ். குடாநாட்டில் இன்புளுவன்ஸா வைரஸ் தொற்று பரவி வருவதாக யாழ்ப்பாணப் பிராந்திய தொற்று நோய் தடுப்புப் பிரிவு அதிகாரி வைத்தியர் ஜி.ரஜீவ் தெரிவித்தார். கடந்த சில நாட்களில் யாழ்ப்பாணத்தில் வைரஸ் தொற்றுக்குள்ளான 12 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். அவர்களின் நோய் குறித்து மேலதிக பரிசோதனைகள் நடைபெற்று வருவதாக வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார். பன்றிக் காய்ச்சல் எனப்படும் ‘இன்புளுவன்ஸா வைரஸ்’ தொற்றுக்கான அறிகுறிகளோடு கடந்த சில வாரங்களில் 12 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். …

Read More »

சற்று முன் பலத்த பாதுகாப்புடன் யாழ். சென்றார் பிரதமர்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க சற்று முன் பலத்த பாதுகாப்புடன் யாழ்ப்பாணத்திற்கு சென்றுள்ளார். வடக்கின் அபிவிருத்தி குறித்து ஆராய்வதற்காக அவர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தகவல் வெளியிட்டிருந்தது. அத்துடன், வடக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தி பணிகளின் முன்னேற்றம் தொடர்பில் பிரதமர் நேரில் சென்று காண்காணிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், இது தொடர்பாக உரிய அதிகாரிகளுடன் பிரதமர் கலந்துரையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More »

பிரதமர் ரணில் யாழ்ப்பாணம் செல்கிறார்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் திங்கட்கிழமை யாழ்ப்பாணத்திற்கு செல்ல உள்ளார். வடக்கின் அபிவிருத்தித் திட்ட முன்னெடுப்புக்கள் குறித்து கண்காணிக்கும் நோக்கில் பிரதமர் இந்த விஜயத்தை மேற்கொள்கின்றார். யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய பகுதிகளுக்கு பிரதமர் இவ்வாறு நாளை மறுதினம் விஜயம் செய்ய உள்ளார். கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாண மாவட்டச் செயலகங்களில் அபிவிருத்தி திட்ட செயற்குழுக் கூட்டங்கள் நடைபெறவுள்ளன. இந்தக் கூட்டங்களிலும் பிரதமர் பங்கேற்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Read More »
error: Content is protected!