Saturday , January 19 2019
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் (page 215)

இலங்கை செய்திகள்

Srilankan News

உலகலாவிய கடல் பயங்கரவாதம் பொருளாதாரத்திற்கு அச்சுறுத்தல் : பிரதமர் தெரிவிப்பு

உலகலாவிய கடல் பயங்கரவாதம் பொருளாதார அனுகூலங்களுக்கு அச்சுறுத்தல் விடுத்து வருவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொள்கலன்களை ஏற்றிச் செல்லும் கப்பல்களில் பாதிக்கு மேற்பட்ட கடற்கலங்கள் இந்து சமுத்திரத்தின் ஊடாக பயணிக்கின்றன. இது ஆசிய, மத்திய கிழக்கு நாடுகளுக்கு பெரும் பொருளாதார அனுகூலத்தை ஏற்படுத்தும் விடயமாகும் என்றும் தெரிவித்துள்ளார். இந்திய தலைநகர் டெல்லியில் நேற்று ஆரம்பமான மாநாட்டில் ஸ்கைப் ஊடாக அவர் உரையாற்றிய போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் மேலும் …

Read More »

குறைப்பாடு நிலவு 50ஆயிரம் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை

நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் காணப்படும் 50 ஆயிரம் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்க அமைச்சரவை அங்கீகாரம் அளித்திருப்பதாக கல்வி அமைச்சர் அக்கில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.’ ஆசிரியர் சேவையில் நியமனங்கள், பதவி உயர்வுகள் ஆகியன ஒழுங்கு விதிகளுக்கு அமையவே மேற்கொள்ளப்படுகிறது. ஆசிரியர் பயிற்சிக்காக வரவு செலவுத் திட்டத்தில் இரண்டு பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விளையாட்டுத் துறை பயிற்றுவிப்பாளர்களாக 3 ஆயிரத்து 850 பேரை பயிற்றுவித்து சேவையில் …

Read More »

இலங்கையில் முதலீடு செய்ய தென்கொரிய விருப்பம்

யுன் பியுங் சே

ஆய்வு தொடர்பான அபிவிருத்தி, தகவல் தொழில்நுட்பம், சுகாதாரம், கல்வி உள்ளிட்ட துறைகளில் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள தென்கொரியா தயாராக உள்ளதாக அந்நாட்டு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் யுன் பியுங் சே தெரிவித்துள்ளார்.’ பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் அலரி மாளிகையில் நேற்று இடம்பெற்ற சந்திப்பின்போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் வலியுறுத்தியுள்ளதாவது, இலங்கை மெகா பொலிஸ் திட்டத்தில் முதலீடு மேற்கொள்வதற்கு தென்கொரியா தயாராக உள்ளது. இரு நாடுகளுக்கு இடையிலான …

Read More »

மட்டக்களப்பில் 4 வயது சிறுவன் அடித்துப் படுகொலை! – சந்தேகத்தில் வளர்ப்புத் தாய் கைது

மட்டக்களப்பு, காத்தான்குடிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குடாப் பிரதேசத்தில் நான்கு வயதுச் சிறுவன் ஒருவன் அடித்துக் கொலைசெய்யப்பட்டுள்ளார். காத்தான்குடி, நாவற்குடா மாதர் வீதியை அண்டி அமைந்துள்ள வீடொன்றிலேயே நேற்று செவ்வாய்க்கிழமை இரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் அச்சிறுவனின் வளர்ப்புத் தாய் இன்று புதன்கிழமை காலை கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் கூறினர். அச்சிறுவனை அடித்தார் எனக் கூறப்படும் அவனது வளர்ப்புத் தாயே (வயது – 50) அச்சிறுவனை …

Read More »

அடிப்படை வசதிகளை ஏற்படுத்தக் கோரி பன்னங்கண்டிக் கிராம மக்களின் போராட்டம் தொடர்கின்றது!

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பன்னங்கண்டி கிராம மக்கள் அடிப்படை வசதிகள் கோரி இன்று புதன்கிழமை 12 நாளாகவும் போராட்டம் நடத்தினர். “மத்திய வகுப்புத் திட்டத்தில் வழங்கப்பட்ட குறித்த காணியில் நீண்ட காலமாக வாழ்கின்றபோதும் காணி அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்படவில்லை. அதனால் வீட்டுத் திட்டமோ ஏனைய அரச உதவிகளையோ பெற முடியாதுள்ளது. எமது கிராமங்களில் அடிப்படை வசதிகள் ஏதும் இல்லை. எமது பிரச்சினைகளுக்குத் தீர்வு வேண்டும்” என்று வலியுறுத்தி …

Read More »

பஷிலுக்கு எதிராக குற்றப்பத்திரிகை

நிதி மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு, முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவிற்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் அரச சொத்துக்களை முறைகேடாக பயன்படுத்தியதாக பசில் ராஜபக்ஷ மீது குற்றம் சுமத்தப்பட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேற்படி குற்றச்சாட்டில் முதலாவது குற்றவாளியாக பெயரிடப்பட்டுள்ள பஷில், இன்று ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப் பிணை மற்றும் 5 லட்சம் ரூபாய் …

Read More »

நாடாளுமன்ற உறுப்பினர்களில் 94 பேர் கபொத சாதாரண தர பரீட்சையில் சித்தியடையாதவர்கள்

நாடாளுமன்றத்தில், அங்கம் வகிக்கும் 225 உறுப்பினர்களில் 94 பேர் கபொத சாதாரண தரப் பரீட்சையில் கூட சித்தியடையாதவர்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் எம்.ஒ.ஏ டி சொய்சா இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பு ஒன்றின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். 225 உறுப்பினர்களைக் கொண்ட சிறிலங்கா நாடாளுமன்றத்தில், 25 உறுப்பினர்கள் மாத்திரமே பட்டதாரிகள் என்றும், 94 பேர் கபொத …

Read More »

நிலைப்பாட்டைத் தெளிவாக உணராதவர்களே கூட்டமைப்பு மீது குற்றம்சுமத்துகின்றனர்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கால நீடிப்புக்கு உடன்பட்டுள்ளது என்ற விடயத்தில் உண்மை இல்லை என்று தெரிவித்துள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், மக்களுக்காக செயற்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உண்மையான நிலைப்பாட்டைத் தெளிவாக உணராதவர்களே கூட்டமைப்பு மீது குற்றம்சுமத்துகின்றனர் என்று சாடியுள்ளார். மட்டக்களப்பு – களுமுந்தன்வெளி வலம்புரி வாசகர் வட்டமும் மாதர் கிராம அபிவிருத்திச் சங்கமும் இணைந்து நடாத்திய மகளிர்தின விழா நேற்றையதினம் …

Read More »

மஹிந்தவின் நிலைப்பாட்டிலேயே மைத்திரி

யுத்தக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள ஸ்ரீலங்கா இராணுவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் நிலைப்பாட்டிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார். ஸ்ரீலங்காவின் மனித உரிமை மீறல் தொடர்பில் இராணுவத்தைக் காட்டிக்கொடுக்க மாட்டோம் என்று மஹிந்த ராஜபக்ச கூறியிருந்த நிலையில், தற்போது இராணுவத்தை விசாரணை செய்ய விடமாட்டோம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிடுவதாகவும் அவர் விமர்சனம் …

Read More »

15 நாட்களாகத் தொடர்கிறது கேப்பாப்பிலவு அறவழிப் போராட்டம்!

இராணுவம் கையகப்படுத்தியுள்ள தமது காணிகளை விடுவிக்க வேண்டும் என்று வற்புறுத்தி கேப்பாப்பிலவு மக்கள் முன்னெடுத்துவரும் தொடர் போராட்டம் இன்று புதன்கிழமை 15ஆவது நாளாகவும் தொடர்கின்றது. முல்லைத்தீவு மாவட்டத்தில் 6 ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட பொதுமக்களின் காணிகளில் இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளனர். தங்களது பூர்வீகக் காணிகளை விடுவிக்க வேண்டும் என்று கடந்த 7 வருடங்களாக மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். தொடர் அறவழிப் போராட்டங்களின் பயனாக பிலக்குடியிருப்பு மற்றும் புதுக்குடியிருப்பில் மக்களின் …

Read More »
error: Content is protected!