Monday , November 19 2018
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் (page 215)

இலங்கை செய்திகள்

Srilankan News

அமுலுக்கு வருகிறது தகவல் அறியும் உரிமைச் சட்டம்

தகவல் அறியும் உரிமைச் சட்டம் இன்றுமுதல் அமுலுக்கு வருகிறது. அரசாங்கத்தின் தேர்தல் உறுதிமொழியை நிறைவேற்றும் வகையில் இன்று முதல் அந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக நாடாளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார். இதன்மூலம் அரசாங்கம் நிதியை பயன்படுத்தும் விதம் பற்றியும், தீர்மானங்களை மேற்கொள்ளும் விதம் தொடர்பாகவும் மக்கள் தகவல்களை அறிந்து கொள்ள முடியும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார். அரசாங்கம் வெளிப்படைத் தன்மையுடன் ஆட்சி நடைமுறையை முன்னெடுத்து செல்வதாகவும், …

Read More »

தமிழர்கள் அனைவரும் ஒற்றுமையாக செயற்பட வேண்டும் : கோவிந்தம் கருணாகரம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இராஜதந்திர ரீதியான போராட்டத்திற்கு தமிழர்கள் அனைவரும் ஒற்றுமையாக செயற்பட வேண்டும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோவிந்தம் கருணாகரம் வலியுறுத்தியுள்ளார். தமிழர்கள் மீண்டும் ஒற்றுமையீனத்தைக் காட்டுவோமாக இருந்தால், அகிம்சை மற்றும் ஆயுத ரீதியான போராட்டங்களில் போராடி உயிர்நீத்த உயிர்களுக்கு துரோகம் செய்வதாக அர்த்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மட்டக்களப்பு – எருவில் இளைஞர் கழகம், கண்ணகி விளையாட்டுக்கழகம், உதயநிலா கலைக்கழகம் ஆகிய மூன்று கழகங்களும் …

Read More »

அமெரிக்காவிற்குள் நுழைய ஸ்ரீலங்கர்களுக்கு அனுமதி

அமெரிக்காவுக்குள் நுழைய ஸ்ரீலங்கா பிரஜைகளுக்கு தடை விதிக்கப்படவில்லை என கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது. ஸ்ரீலங்கர்கள் உள்ளிட்ட 20 நாடுகளைச் சேர்ந்த 71 பேர் நியூயோர்க் ஜோன் எவ் கெனடி விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டதாக செய்திகள் வெளியானதை தொடர்ந்தே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அமெரிக்காவினுள் நுழைவதற்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ள 7 நாடுகளில் சிறிலங்கா உள்ளடங்கவில்லை என கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் குறிப்பிட்டுள்ளது. அதேவேளை, அமெரிக்க …

Read More »

பெண்களின் அரசியல் பங்களிப்பு : யாழில் கையெழுத்து வேட்டை

அரசியலில் பெண்களின் பங்களிப்பினை வலுப்படுத்தும் நோக்கில் கையெழுத்து பெறும் நிகழ்வு நேற்று (புதன்கிழமை) யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டது. குறித்த நிகழ்வு தேசத்திற்கான பெண்களின் உரிமைக் குரல் எனும் தொனிப்பொருளில் இடம்பெற்றது. யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பெண்கள் பலரும் இந்த திட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தங்களை கையெழுத்தினை பதிவு செய்தனர். கடந்த காலங்களில் அரசியலில் பெண்களின் பங்களிப்பு குறைவாக காணப்பட்டமையினால் எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தலில் பெண்களின் …

Read More »

வித்தியா படுகொலை; பத்தாவது சந்தேக நபர் தொடர்ந்தும் விசாரணை

யாழ்ப்பாணம் – புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் படுகொலை தொடர்பான வழக்கில் பத்தாவது சந்தேக நபரை தொடர்ந்தும் விசாரணை செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. ஒரு வருட காலத்திற்கு பத்தாவது சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு யாழ். மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை தொடர்பான வழக்கு இன்று யாழ். மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, அரச சட்டத்தரணியான நாகரட்ணம் நிஷாந்த, குறித்த பத்தாவது சந்தேக நபரை தொடர்ந்தும் …

Read More »

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படவில்லை ; பெப்ரவரி 4 இல் ஆர்ப்பாட்டம்

ஸ்ரீலங்காவில் நல்லாட்சி ஏற்பட்டு இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், தமிழ் மக்களுக்கான பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படவில்லை என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் குறிப்பிட்டுள்ளார். தமிழ் மக்கள் மீதான மோசமான திணிப்புக்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக பெப்ரவரி 4 ஆம் திகதி யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்னால், அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்காவின் தேசியக் கொடியை யாழ். மாவட்ட செயலகத்தில் ஏற்றுகின்ற வேளை, மாவட்ட …

Read More »

அரசியல் தீர்வு மக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக அமைய வேண்டும் : சம்பந்தன்

அரசியல் தீர்வானது நாட்டின் அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் அமைய வேண்டுமென்பதோடு, அந்த தீர்வானது நாட்டில் இதுவரை காலம் நடைபெற்ற அநீதிகள் மற்றும் அநியாயங்கள் மீண்டும் நடைபெறுவதை தடுக்கும் வகையில் அமைய வேண்டுமெனவும் எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் பேண்தகு யுகத்தின் மூன்றாண்டு உதயம் தேசிய திட்டத்தின் கிழக்கு மாகாண மக்கள் சந்திப்பின் ஒரு பகுதியாக, ஏறாவூரில் நடைபெற்ற விசேட நிகழ்வில் …

Read More »

கேப்பாபுலவு மக்கள் 4 ஆவது நாளாகவும் போராட்டம்

விமானப் படையினரால் விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட தமது காணிகளை மீள வழங்க வேண்டும் என வலியுறுத்தி இன்று மூன்றாவது நாளாகவும் கேப்பாபுலவு, பிலவுக்குடியிருப்பு மக்கள் போராட்டத்தை முன்னெடுத்துவருகின்றனர். நேற்றைய தினம் சம்பவ இடத்திற்கு வருகைதந்த முல்லைத்தீவு மாவட்ட அரசாங்கம் அதிபர் ரூபாவதி கேதீஸ்வரன், இந்த பிரச்சினையைத் தீர்ப்பதற்கு கால அவகாசத்தை கோரிய போதிலும் அதனை ஏற்பதற்கு அக்கிராம மக்கள் மறுத்திருந்த நிலையில் அவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறைப்பற்று …

Read More »

யாழில் அமைக்கப்பட்டுள்ள கொன்சியூலர் அலுவலகம் நாட்டிற்கு பேராபத்து

வெளிவிவகார அமைச்சின் கொன்சியூலர் அலுவலகமொன்று யாழ்ப்பாணத்தில் திறக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மஹிந்த அணி, இது நாட்டிற்கு அச்சுறுத்தலான விடயமென குறிப்பிட்டுள்ளது. கொழும்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன இவ்வாறு தெரிவித்துள்ளார். வெளிநாடுகளில் இலங்கை அரசை பிரதிநிதித்துப்படுத்தியே கொன்சியூலர் அலுவலகம் அமைக்கப்படுகிறது. அவ்வாறான நிலையில், நாட்டிற்குள் கொன்சியூலர் அலுவலகத்தை அமைத்தமை விதிமுறைகளை மீறும் செயலென தினேஸ் குணவர்தன மேலும் குறிப்பிட்டுள்ளார். இச் செயற்பாட்டின் மூலம் …

Read More »

திருகோணமலை வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியில் இறால்குளி பாலத்துக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். டிப்பர் ரக வாகனத்துடன் முச்சக்கரவண்டி மோதி இன்று (செவ்வாய்க்கிழமை) குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கிண்ணியாவிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த டிப்பர் வாகனத்துடன் மூதூரிலிருந்து கிண்ணியா நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று மோதியுள்ளது. இதன் போது, முச்சக்கரவண்டியின் பின் ஆசனத்தில் பயணித்த மூதூர் …

Read More »
error: Content is protected!