Tuesday , October 23 2018
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் (page 206)

இலங்கை செய்திகள்

Srilankan News

சுதந்திரதின நிகழ்வில் தமிழ் மொழியில் தேசிய கீதம்

ஸ்ரீலங்காவின் இந்த வருட சுதந்திரதின நிகழ்விலும் தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டுள்ளது. மிக நீண்ட தசாப்தங்களுக்குப் பின்னர் கடந்த வருடம் நடைபெற்ற சுதந்திரதின நிகழ்வில் தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டதை அடுத்து தென்னிலங்கை அரசியல் களத்தில் பெரும் குழப்பகரமான நிலை ஏற்பட்டது. ரணில் – மைத்திரி தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிராக பொதுபல சேனா, சிங்ஹலே போன்ற பேரினவாத அமைப்புக்களும், நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில போன்ற …

Read More »

மஹிந்த நடத்துவது அதிகாரப் போராட்டம்; தமிழர்கள் நடத்துவது உரிமைப் போராட்டம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சி நடத்தும் போராட்டத்திற்கும், வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் நடத்தும் போராட்டத்திற்கும் இடையில் வித்தியாசம் காணப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். ஏறாவூர் 4 – மாஞ்சோலையில் அமைக்கப்பட்டுள்ள மணிமண்டப திறப்பு விழாவில் பங்கேற்று உரையாற்றிய அவர், தெற்கிலே அதிகாரத்தை மீண்டும் கைப்பற்றுவதற்காகவே போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக வலியுறுத்தினார். இங்கு தொடர்ந்து உரையாற்றி அவர், காணாமல்போனவர்கள் …

Read More »

தேசிய சுதந்திர தினம் தமிழர் தாயத்தில் துக்கதினமாக அனுஷ்டிப்பு

தமிழர் தாயகமான வடக்கு மாகாணத்தில் ஸ்ரீலங்காவின் 69 ஆவது தேசிய சுதந்திர தினம் துக்க தினமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் மக்கள் கறுப்புக்கொடிகளை ஏந்தி போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். தேசிய சுதந்திர தினத்தை தமிழ்தமிழ்தேசிய இனத்தின் துக்க தினமாக அறிவிக்கும் படிகோரி யாழ்.மாவட்ட செயலகம் முன்பாக பலத்த பொலிஸ் பாதுகாப்புக்கும் மத்தியில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் தலைமையில் இந்த …

Read More »

அரிசி விலை 66 ரூபாவரை குறைக்கப்பட்டுள்ளது: நிதியமைச்சர்

மக்களின் நன்மை கருதி அரிசிக்கான வரிகள் குறைக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு கிலோகிராம் அரிசியினை 66 ரூபாவிற்கு விற்பனை செய்யலாம் என நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். நிதி அமைச்சில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அமைச்சர், ‘மக்களுக்கு சலுகைகளை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கான வரிகள் நீக்கப்பட்ட போதிலும், அதன் பிரதிபலன்கள் …

Read More »

சுமந்திரன் கொலை முயற்சியின் உண்மை என்ன? மைத்திரி – ரணில் சபையில் அறிவிக்க வேண்டும்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் கொலை முயற்சி தொடர்பில் யார் யார்? கைது செய்யப்பட்டார்கள், என்ன ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன என்பது குறித்து, வடக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார். சுமந்திரனின் கொலை முயற்சி குறித்த உண்மை நிலைமைகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவோ, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவோ அல்லது பொறுப்பு வாய்ந்த அமைச்சரோ, யாரரேனும் நாடாளுமன்றில் அறிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற …

Read More »

இனவாதத்தை தூண்டும் வகையில் மஹிந்த கருத்துக்களை பரப்புகின்றார்

நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லையென ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார். கூட்டு எதிர்க்கட்சியினர் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் காணப்படுவதாக தெரிவிக்கும் கருத்துக்கள் ஆதாரமற்றவை என அவர் நேற்றைய தினம் பியமகவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றுகையில் வலியுறுத்தியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நாட்டில் இனவாதத்தை தூண்டும் வகையில் கருத்துக்களை பரப்பி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் நிர்ந்தர சமாதானத்தை பாதுகாக்கும் …

Read More »

அமுலுக்கு வருகிறது தகவல் அறியும் உரிமைச் சட்டம்

தகவல் அறியும் உரிமைச் சட்டம் இன்றுமுதல் அமுலுக்கு வருகிறது. அரசாங்கத்தின் தேர்தல் உறுதிமொழியை நிறைவேற்றும் வகையில் இன்று முதல் அந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக நாடாளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார். இதன்மூலம் அரசாங்கம் நிதியை பயன்படுத்தும் விதம் பற்றியும், தீர்மானங்களை மேற்கொள்ளும் விதம் தொடர்பாகவும் மக்கள் தகவல்களை அறிந்து கொள்ள முடியும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார். அரசாங்கம் வெளிப்படைத் தன்மையுடன் ஆட்சி நடைமுறையை முன்னெடுத்து செல்வதாகவும், …

Read More »

தமிழர்கள் அனைவரும் ஒற்றுமையாக செயற்பட வேண்டும் : கோவிந்தம் கருணாகரம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இராஜதந்திர ரீதியான போராட்டத்திற்கு தமிழர்கள் அனைவரும் ஒற்றுமையாக செயற்பட வேண்டும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோவிந்தம் கருணாகரம் வலியுறுத்தியுள்ளார். தமிழர்கள் மீண்டும் ஒற்றுமையீனத்தைக் காட்டுவோமாக இருந்தால், அகிம்சை மற்றும் ஆயுத ரீதியான போராட்டங்களில் போராடி உயிர்நீத்த உயிர்களுக்கு துரோகம் செய்வதாக அர்த்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மட்டக்களப்பு – எருவில் இளைஞர் கழகம், கண்ணகி விளையாட்டுக்கழகம், உதயநிலா கலைக்கழகம் ஆகிய மூன்று கழகங்களும் …

Read More »

அமெரிக்காவிற்குள் நுழைய ஸ்ரீலங்கர்களுக்கு அனுமதி

அமெரிக்காவுக்குள் நுழைய ஸ்ரீலங்கா பிரஜைகளுக்கு தடை விதிக்கப்படவில்லை என கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது. ஸ்ரீலங்கர்கள் உள்ளிட்ட 20 நாடுகளைச் சேர்ந்த 71 பேர் நியூயோர்க் ஜோன் எவ் கெனடி விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டதாக செய்திகள் வெளியானதை தொடர்ந்தே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அமெரிக்காவினுள் நுழைவதற்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ள 7 நாடுகளில் சிறிலங்கா உள்ளடங்கவில்லை என கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் குறிப்பிட்டுள்ளது. அதேவேளை, அமெரிக்க …

Read More »

பெண்களின் அரசியல் பங்களிப்பு : யாழில் கையெழுத்து வேட்டை

அரசியலில் பெண்களின் பங்களிப்பினை வலுப்படுத்தும் நோக்கில் கையெழுத்து பெறும் நிகழ்வு நேற்று (புதன்கிழமை) யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டது. குறித்த நிகழ்வு தேசத்திற்கான பெண்களின் உரிமைக் குரல் எனும் தொனிப்பொருளில் இடம்பெற்றது. யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பெண்கள் பலரும் இந்த திட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தங்களை கையெழுத்தினை பதிவு செய்தனர். கடந்த காலங்களில் அரசியலில் பெண்களின் பங்களிப்பு குறைவாக காணப்பட்டமையினால் எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தலில் பெண்களின் …

Read More »
error: Content is protected!