Wednesday , November 21 2018
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் (page 20)

இலங்கை செய்திகள்

Srilankan News

இலங்கைக்கு அருகில் பாரிய நிலநடுக்கம்!

காலியில் இருந்து 3,700 கி.மீ தொலைவில் கடல் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கைக்கு தெற்கே இந்து சமூத்திரத்தில் 5.5 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. எனினும் இதனால் இலங்கைக்கு எந்த பாதிப்பும் இல்லை என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Read More »

கிளிநொச்சியில் கொலை செய்யப்பட்ட பெண்ணுக்கு நீதி கோரி நடத்தப்பட்ட போராட்டங்கள்

முல்லைத்தீவு – திருமுறிகண்டியை பகுதியில் இளம் குடும்பப் பெண் கொலை செய்யப்பட்டதை கண்டித்தும் கொலையாளிகளை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தக் கோரியும் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டம் முல்லைத்தீவு – முறிகண்டி பகுதியில் இன்று காலை இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில் கறுப்பையா நித்தியகலா என்ற 32 வயதுடைய இளம் குடும்பப் பெண்ணே கொலை செய்யப்பட்டிருந்தார். கிளிநொச்சி – அறிவியல் நகர பகுதியில் ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் பாதுகாப்பு உத்தியோகத்தராக …

Read More »

பத்து ஆண்டுகளின் பின்னர் முகமாலையில் தோன்றிய மாதா!

கிளிநொச்சியில் பத்து வருடங்களின் பின்னர் புதைந்து போயிருந்த மாதா சிலை ஒன்று காட்டில் இருந்து கிடைத்துள்ளது. முகமாலையிலுள்ள மாதா தேவாலயத்தில் இருந்த உருவச் சிலையே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. போர் அனர்த்தம் காரணமாக முகமாலையில் உள்ள தேவாலயம் அழித்து போய்விட்டதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். அந்தப் பகுதி மக்கள் இன்னமும் தங்கள் இடங்களுக்கு சென்று குடியேறாத நிலையில் அவர்கள் இடைக்கிடையே, சென்று தமது காணிகளை பார்த்து வருகின்றனர். இந்த வாரம் தங்கள் …

Read More »

முல்லைத்தீவில் சிங்கள குடியேற்றத்திற்கு இவர் தான் காரணம்!

நல்­லாட்சி அரசு ஆட்­சிப் பீடம் ஏறிய பின்­னர் முல்­லைத்­தீவில் எந்­தச் சிங்­க­ளக் குடி­யேற்­றத்­தை­யும் மேற்­கொள்­ள­வில்லை. அங்கு நடை­பெற்ற சிங்­க­ளக் குடி­யேற்­றங்­கள் எல்­லாம் முன்­னாள் பாது­காப்பு அமைச்­சின் செய­லர் கோத்­த­பாய ராஜ­பக்­ச­வின் காலத்­தில் மேற்­கொள்­ளப்­பட்­ட­வையே. முல்­லைத்­தீ­வில் சிங்­க­ளக் குடி­யேற்­றங்­கள் முன்­னெ­டுக்­க ப்­பட்­ட­மைக்­கு­ரிய சாட்­சி­யங்­கள் இருந்­தால் முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் அர­சு­டன் பேச்சு நடத்­த­வேண்­டும். அதை விடுத்து இன­வா­தம் கக்­கிக் கொண்­டி­ருக்­கக் கூடாது. இவ்­வாறு அமைச்­ச­ரும், அமைச்­ச­ர­வைப் பேச்­சா­ள­ரு­மான ராஜித சேனா­ரட்ன தெரி­வித்­தார். அரச …

Read More »

வெள்ளை கொடியுடன் வந்தவர்கள் எங்கே? மன்னாரில் பேரணி

வெள்ளை வானில் கடத்தப்பட்டவர்களும், வெள்ளைக்கொடியுடன் வந்தவர்களும் எங்கே என வினவி, மன்னாரில் பாரிய கவனயீர்ப்பு பேரணியொன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டே இப்பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் அமைப்பின் ஏற்பாட்டில் சர்வதேச விசாரனையை வலியுறுத்தி மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் காலை 10 மணிக்கு கவனயீர்ப்பு பேரணி ஆரம்பமானது. குறித்த பேரணி மன்னார் பொது வைத்தியசாலை பிரதான வீதியூடாக …

Read More »

யாழ் வீதியில் பொலிஸாருக்கு ஏற்பட்ட பரிதாபம்

யாழ். மணியந்தோட்டம் பகுதியில் சற்று முன்னர் நடமாடும் பொலிஸ் அதிகாரிகள் மீது இனந்தெரியாதோரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. முச்சக்கரவண்டியில் பயணித்த சிலரே பொலிஸார் மீது தாக்குதல் நடத்திவிட்டுச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த முச்சக்கரவண்டியை இடைமறித்து விசாரித்தவேளையிலேயே பொலிஸார் மீது இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மேலும், இதன்போது படுகாயமடைந்த ஒரு பொலிஸ் அதிகாரி யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், மற்றொரு பொலிஸாரும் படுகாயமடைந்துள்ளதாகவும் அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

Read More »

வவுனியாவை வாட்டியெடுக்கும் வறட்சி! மக்கள் கடும் அவதி

வவுனியாவில் நிலவும் வறட்சி காரணமாக 2014 குடும்பங்களை சேர்ந்த 7389 பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. மாவட்டத்தின் நான்கு பிரதேச செயலக பிரிவுகளிலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக செட்டிகுளம் பிரதேச செயலக மக்களே அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். செட்டிக்குளம் பிரதேச செயலக பிரிவில் 1394 குடும்பங்களை சேர்ந்த 5160 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. த்துடன் வவுனியா தெற்கு பிரதேச செயலக …

Read More »

இரகசிய முகாம் இருந்தது கருணாவிற்கு தெரியும்! உண்மையை போட்டுடைத்த சட்டதாரணி

கம்­பகா – படு­வத்­த­வில் இரா­ணு­வத்­தின் இர­க­சிய முகாம் இருந்­தது தமக்­குத் தெரி­யும் என்று இரா­ணு­வப் புல­னாய்­வுப் பிரி­வின் முன்­னாள் பணிப்­பா­ள­ரான மேஜர் ஜென­ரல் அமல் கரு­ணா­சே­கர தெரி­வித்­துள்­ளார். 2008ஆம் ஆண்டு மே மாதம் ஊட­க­வி­ய­லா­ளர் கீத் நொயார் கடத்­தப்­பட்டு சித்­தி­ர­வதை செய்­யப்­பட்ட பின்­னர் விடு­விக்­கப்­பட்ட சம்­ப­வம் குறித்து நடத்­தப்­ப­டும் விசா­ர­ணை­க­ளின் ஒரு கட்­ட­மாக, மேஜர் ஜென­ரல் அமல் கரு­ணா­சே­கர கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­ய­லில் வைக்­கப்­பட்­டுள்­ளார். அவர் தக­வல்­களை வெளி­யிட மறுக்­கி­றார் …

Read More »

முன்னாள் போராளிகளுக்கு வேலைவாய்ப்பு கேட்டு போராடும் விஜயகலா

கல்விச் சான்றிதழ்கள் இன்மையால் பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்கிவரும் முன்னாள் போராளிகளுக்கு விசேட வர்த்தமானி ஊடாக வேலைவாய்ப்பை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் இரண்டாவது ஒன்றுகூடல், ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம்பெற்றது. இதன்போதே நாடாளுமன்ற உறுப்பினர் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், ”வடக்கு கிழக்கில் பொருளாதார அபிவிருத்தி மிகவும் முக்கியமானது. …

Read More »

நல்லூர் முருகப்பெருமான் மயில் வாகனத்தில் பவனி

வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 12ஆம் நாள் திருவிழா அடியார்கள் புடைசூழ சிறப்பாக இடம்பெற்றது. முருகப்பெருமான் மயில் வாகனத்திலும், வள்ளி – தெய்வானை கிளி வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்கடாட்சம் புரிந்தனர். இதன்போது பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொண்டு நேர்த்திக்கடன்களை செலுத்தி முருகப்பெருமானின் அருள் பெற்றுச் சென்றனர். நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம், கடந்த 16ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. திருவிழா நாட்களில் ஒவ்வொரு …

Read More »
error: Content is protected!