Thursday , January 17 2019
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் (page 2)

இலங்கை செய்திகள்

Srilankan News

மைத்திரி மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார் ?

மைத்திரிபால சிறிசேனவை அங்கொட மனநல மருத்துவ ஆய்வகத்தில், மனநல பரிசோதனைக்கு உட்படுத்த உத்தரவிடக் கோரி, தாக்கல் செய்யப்பட்ட மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்துள்ளது. மைத்திரிபால சிறிசேனவின், நடவடிக்கைகள், அவர் உறுதியான மனநிலையில் இருக்கிறாரா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், இதனால், அவரை அங்கொட மனநல மருத்துவமனையில் மேனநல சோதனைக்கு உட்படுத்த வேண்டும் எனக் கோரி, தக்சிலா லக்மாலி ஜெயவர்த்தன என்ற பெண், மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார். …

Read More »

நீண்ட நாட்களிற்குப் பின் நேருக்கு நேர் மைத்திரி – சந்திரிக்கா!!

சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரனதுங்க மற்றும் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோர் இன்று நேருக்கு நேர் சந்தித்துக்கொண்டபோதும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளவில்லை என தகவல் கிடைத்துள்ளது. சந்திரிகாவின் தந்தையாரும் இலங்கையின் முன்னாள் பிரதமருமான பண்டாரநாயக்கவின் 120 ஆவது பிறந்த தின நிகழ்வு கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்றது. சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஸ்தாபகரான இவரது இன்றைய பிறந்த தின நிகழ்வில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவும் …

Read More »

29 கட்சிகளுடன் பாரிய கூட்டணியில் களமிறங்கவுள்ள மகிந்த!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து பரந்துபட்ட கூட்டணியை அமைப்பதற்கு, 29 கட்சிகள் மற்றும் அமைப்புகள் இணக்கம் தெரிவித்துள்ளன என அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கம்பஹா மாவட்டம் மினுவங்கொடவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.அங்கு மேலும் தெரிவித்த அவர், “நாட்டில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மாத்திரமே செயற்பாட்டு ரீதியான கட்சியாக உள்ளது. நான் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் …

Read More »

இறுதிப்போரில் கொல்லப்பட்டவர்கள் தொடர்பில் நடவடிக்கை ஆரம்பம்

இலங்கையின் உள்நாட்டு மோதலின் இறுதி தருணங்களில் கொல்லப்பட்டவர்கள் குறித்த எண்ணிக்கையை உறுதிப்படுத்துவதற்கான முயற்சிகளை ஆரம்பித்துள்ள இரு சர்வதேச அரசசார்பற்ற அமைப்புகள் இந்த நடவடிக்கைகளிற்கு ஒத்துழைப்பை வழங்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளன. சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பும் மனித உரிமைகள் தரவுகள் ஆய்வுக்குழுவுமே இந்த முயற்சியை ஆரம்பித்துள்ளன. இலங்கையிலும் வெளிநாடுகளிலும் உள்ளவர்கள் தங்களிடமுள்ள விபரங்களை வழங்கவேண்டும் என இரு அமைப்புகளும் வேண்டுகோள் விடுத்துள்ளன. ஆகக்குறைந்த அளவில் இறந்தவர்களின் பெயர்களை சேகரிப்பதன் மூலமாவது …

Read More »

இன்று ஒரு விடயத்தில் தப்பினார் மைத்திரி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக மனநலக் கோளாறு என பெண் ஒருவரால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை மேல்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. அத்தோடு அரசுக்கு ஏற்பட்ட ஒரு இலட்சம் ரூபாய் சட்ட செலவினங்களைச் மனுதாரர் செலுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிவில் செயற்பாட்டாளரான தக்சிலா ஜயவர்தனவின் ஆலோசனையின் பேரில், சட்டத்தரணி சிசிர குமார சிறிவர்தனவால் இந்த நீதிப்பேராணை மனு கடந்த ஆண்டு டிசெம்பர் 10 ஆம் திகதி …

Read More »

தற்போது தீராத கலக்கத்தில் மஹிந்த

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினரா அல்லது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினரா என்பது தொடர்பில் அவரே தெளிவுபடுத்த வேண்டுமென, சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். குருநாகலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்ற அவரிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். மஹிந்த ராஜபக்ச தான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆயுட்கால உறுப்பினர் என கூறியுள்ளதாகவும், …

Read More »

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு ஆதரவு வழங்க கூடாது!

கிழக்கில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர் பல்லின சமூகத்துக்குரிய தலைமைத்துவம் இல்லாமல், ஓரின சமூகத்துக்குரியவராக செயற்படும் பட்சத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு மௌனம் காக்காது என அக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு கிரான் பிள்ளையார் ஆலய முன்றில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “ஜனாதிபதி தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அளுநர்களை நியமித்துள்ளார். …

Read More »

புதிய அரசமைப்பைக் கொண்டு வருவதற்கும் வாய்ப்பில்லை!

இனங்களுக்கிடையில் ​வெறுப்பைத் தூண்டும் வகையில் அரசமைப்பு ஒன்றை கொண்டு வருவதன் ஊடாக நாட்டின் பிரச்சினையைத் தீர்க்க முடியாதென எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ச தெரிவித்துள்ளார். அத்துடன் பலவந்தமாக புதிய அரசமைப்பைக் கொண்டு வருவதற்கும் வாய்ப்பில்லையென்றும் அவர் ​தெரிவித்துள்ளார். அம்பாறை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

Read More »

தமிழர்களின் ஒத்துழைப்பை எதிர்நோக்கி இருக்கும் பசில்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒத்துழைப்பு வழங்காவிட்டாலும், தமிழர்கள் தமக்கான ஒத்துழைப்புக்களை வழங்குவார்களென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ நம்பிக்கை வெளியிட்டுள்ளார். கொழும்பில் நேற்று ஊடகவியலாளர்களை சந்தித்தபோதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இங்கு மேலும் தெரிவித்த அவர், “கிளிநொச்சியில் ஏற்பட்ட மழை வெள்ளத்திற்கு நிவாரணங்கள் வழங்க பல்வேறு தரப்பினரும் முன்வந்துள்ளனர். நாமும் பொதுஜன பெரமுன சார்பில் உட்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள முன்வந்துள்ளோம். மக்களுக்கு பயனுள்ள ஏதேனும் செயற்பாட்டை …

Read More »

கதிர்காம பக்தர்களிற்கு மகிழ்ச்சியான செய்தி!

புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மாத்தறை – பெலியத்த ரெயில் பாதையின் வெள்ளோட்ட தொடருந்து சேவை இன்று இடம்பெறவுள்ளது. பரீட்சார்த்தமட்டத்தில் இந்த சேவை மேற்கொள்ளப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. போக்குவரத்து அமைச்சர் அர்ஜூன ரணதுங்கவின் மேற்பார்வையின் கீழ் இது தொடர்பான நிகழ்வு இடம்பெறவுள்ளது. மாத்தறையில் இருந்து கதிர்காமம் வரை அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள இந்த தொடருந்து பாதையின் நிர்மாணப்பணிகள் மூன்று கட்டங்களின் இடம்பெறவுள்ளது. இதன் முதற்கட்டத்தின் கீழ் இந்த பாதை நிர்மாணிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக …

Read More »
error: Content is protected!