Monday , September 24 2018
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் (page 2)

இலங்கை செய்திகள்

Srilankan News

யாழில் தொடரும் குழப்பம்!! விசேட அதிரடிப்படையினர் களமிறங்கும் சாத்தியம்

வடமராட்சி பருத்தித்துறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தென்னிலங்கை மீனவர்களை தம்மிடம் ஒப்படைக்க வேண்டுமென காவல்துறையினர் கோரிக்கை விடுத்துள்ள போதிலும் மீனவர்களை ஒப்படைக்க முடியாதென்றும் தமது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென்றும் மக்கள் தெரிவித்திருந்தனர் இந் நிலையில் அங்கு வந்த காங்கேசன்துறை துறை காவல்துறை அத்தியட்சகர் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்காவிட்டால் விசேட அதிரடிப்படையின் களமிறக்கப் போவதாக எச்சரிக்கை விடுத்திருந்தார். இதனால் அங்கு பெரும் குழப்பம் ஏற்பட்டிருந்த நிலையில் திடீரென தடுத்து வைக்கப்பட்டிருந்த மீனவர்களை …

Read More »

மோடியைக் கண்ட பின் மகிந்தவுக்கு ஏற்பட்ட மாற்றம்

தவ­றான புரி­தலை மீள் திருத்­தும் வகை­ யில் டில்­லிச் சந்­திப்­பு­கள் அமை ந்­தன. அது மாத்­தி­ரம் அல்­லாதுஇலங்கை – இந்­திய உறவை மேலும் பலப்­ப­டுத்­து­வ­தற்­கான சந்­தர்ப்­ப­மாக இந்­தி­யப் பய­ணம் அமைந்­தது என்று முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச தெரி­வித்­தார். கடந்த 10ஆம் திகதி திங்­கட்­கி­ழமை பார­திய ஜன­தாக் கட்­சி­யின் மூத்த உறுப்­பி­ன­ரான சுப்­ர­மணி சுவா­மி­யின் அழைப்­புக்கு அமை­வாக மூன்று நாள் பய­ணத்தை மேற்­கொண்டு முன்­னாள் அரச தலை­வர் மகிந்த …

Read More »

மைத்திரியின் மிகப் பெரும் பெய்

மகாவலி அபிவிருத்தி என்ற போர்வையிலேயோ அல்லது வேறு வகையிலேயோ முல்லைத்தீவில் சிங்களக் குடியேற்றம் இடம்பெற வில்லை என்று அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன நேற்று மீண்டும் தெரிவித்துள்ளார். பத்திரிகை ஆசிரியர்கள் மற்றும் ஊடகப் பிரதானிகளுடன் அரச தலைவர் மாளிகையில் நேற்று நடைபெற்ற சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் தெரிவித்ததாவது, தமது பகுதியில் சிங்கள மக்கள் குடியேற்றப்படுகின்றனர் என்று தெரிவித்து – அதற்கு எதிராக முல்லைத்தீவில் அண்மையில் ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டது. …

Read More »

யாழ் பல்கலையில் பதற்றம் விசேட அதிரடிப்படையினர் விரைவு!

யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் கைக்குண்டொன்று இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தின் பரமேஷ்வரர் ஆலய வளாகத்திற்குள்ளிருந்தே இக் கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டது இதனால் யாழ் பல்கலை வளாகத்தில் பதற்ற நிலை நிலவி வருகின்றது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, ஆலயத்தின் சுற்று மதில் அமைப்பதற்கு நிலத்தை தோண்டிய போதே கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கோப்பாய் பொலிஸாரும் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். அத்துடன் விசேட …

Read More »

நல்லூர் ­தி­ரு­வி­ழா­விற்கு சென்று திரும்பிய பக்தர்களிற்கு முக்கிய செய்தி

நல்­லூர் கந்­த­சு­வாமி ஆல­யப் பெருந்­தி­ரு­வி­ழா­வின்­போது பக்­தர்­க­ளால் தவ­ற­வி­டப்­பட்ட பொருள்­கள்­களை ஆதா­ரம் காட்டி மாந­கர சபை­யில் அலு­வ­லக நேரத்­தில் பெற்­றுக் கொள்ள முடி­யும் என்று, யாழ்ப்­பா­ண மாந­கர சபை ஆணை­யா­ளர் த.ஜெய­சீ­லன் தெரி­வித்­தார். இது தொடர்­பில் அவர் அனுப்பி வைத்­துள்ள செய்­திக் குறிப்­பில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள ­தா­வது, தவ­ற­வி­டப்­பட்ட தேசிய அடை­யாள அட்டை, திறப்­புக்­கள், கைய­டக்­கத் தொலை­பே­சி­கள், பணப்­பை­கள் மற்­றும் பெறு­ம­தி­யான பொருள்­கள் என்­பன யாழ்ப்­பாண மாந­கர சபை­யின் உற்­சவ காலப் பணி­ம­னை­யில் …

Read More »

ஆட்சிக்கு வருவது உறுதி!- இந்தியாவில் மஹிந்த உறுதி

எதிர்வரும் 2019ஆம் ஆண்டுடன் தாம் மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவது உறுதி என, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டு முன்னாள் ஜனாதிபதி, அங்கு ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், இந்திய அரசாங்கத்துடன் பல காலமாக நீடித்திருந்த இறுக்கமான உறவை சுமூகமாக்குவதற்கதான நேரம் வந்துள்ளதாகவும், அதற்கான ஆரம்பமாக தனது இவ்விஜயம் அமைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார். தொடர்ந்து இலங்கையின் …

Read More »

கோத்தபாய குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில்…

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகி உள்ளார். ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் அங்கு முன்னிலையாகியுள்ளார்.

Read More »

மைத்திரியுடன் இணையமாட்டேன்! மஹிந்த திட்டவட்டம்

தனது அனுபவத்தில் இருந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாடம் படித்துள்ளார் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது “தேர்தல் நடத்தப்பட வேண்டிய நாளுக்கு ஒரு நாள் முன்னதாக கூட, ஜனாதிபதித் தேர்தலை நடத்தமாட்டேன்” என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியிருக்கிறார். இரண்டு ஆண்டுகள் முன்கூட்டியே ஜனாதிபதித் தேர்தலை நடத்திய ஒருவர் விளைவுகளைச் சந்தித்தது பற்றி அவர் கூறியிருக்கின்றார். அவரது அந்தக் கருத்துடன் மட்டும் நான் …

Read More »

இனி இந்து ஆலயங்களில் இப்படி ஒரு தடை

இந்து ஆலயங்களில் மிருக பலி பூஜையை தடை செய்யக்கோரும் அமைச்சரவைப் பத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனினால் இது குறித்த அமைச்சரவைப் பத்திரம் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், இன்றைய தினம் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் குறித்த அமைச்சரவைப் பத்திரத்திற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Read More »

கொழும்பு கடற்கரையில் கடற்படையினர் குவிப்பு

கொழும்பு, வத்தளை கடற்கரை பகுதியில் எண்ணெய் படிமங்கள் பாரியளவில் மிதந்து கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. முத்துராஜவெல முனையத்திற்கு கப்பலில் இருந்து எரிபொருளை எடுத்துச் செல்லும் குழாய் ஒன்றில் கசிவு ஏற்பட்டமையினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக பாரியளவில் கடற்கரை அசுத்தமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த எண்ணெய் படிமங்ளை அகற்றும் பணியில் கடற்படை அதிகாரிகள் மற்றும் கடல் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் 300க்கும் அதிகமானோர் ஈடுபட்டுள்ளனர். எப்படியிருப்பினும் இதனை அகற்றவதற்கு கிட்டத்தட்ட 3 நாட்கள் …

Read More »
error: Content is protected!