Monday , September 24 2018
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் (page 159)

இலங்கை செய்திகள்

Srilankan News

எங்கே எங்கள் உறவுகள்? – தமிழர் தாயகத்தில் தொடர்கின்றது அறவழிப் போராட்டம்

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் வெளிப்படுத்தலையும், விடுதலையையும் வலியுறுத்தி அவர்களின் உறவினர்களின் அறவழிப் போராட்டங்கள் தமிழர் தாயகத்தில் தொடர்கின்றன. வடக்கில் கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களிலும், கிழக்கில் திருகோணமலையிலும் போராட்டம் நடத்தப்படுகின்றது. கிளிநொச்சியில் 48 ஆவது நாளாகவும், வவுனியாவில் 44 ஆவது நாளாகவும், முல்லைத்தீவில் 32ஆவது நாளாகவும், யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு – மரு­தங்­கே­ணி­யில் 25 ஆவது நாளாகவும், திருகோணமலையில் 35 ஆவது நாளாகவும் இன்று சனிக்கிழமை போராட்டங்கள் தொடர்கின்றன. …

Read More »

தமிழ் மக்களிடமிருந்து கூட்டமைப்பை அந்நியப்படுத்துவதற்கு அரசு சதித்திட்டம்! – சபையில் சிவசக்தி எம்.பி. கடும் சீற்றம்

தமிழ் மக்களிடமிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அந்நியப்படுத்துவதற்குரிய நடவடிக்கையை அரசு முன்னெடுத்து வருகின்றது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சிவசக்தி ஆனந்தன் சபையில் குற்றஞ்சாட்டினார். ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இரண்டாண்டுகள் கடந்துள்ள,போதிலும் தமிழரின் முக்கிய பிரச்சினைகளுக்கு அரசு இன்னும் தீர்வை வழங்கவில்லை என்றும், மஹிந்தவைக் காரணம் காட்டியே தமிழரை இன்று நடுவீதிக்கு அரசு கொண்டுவந்துவிட்டது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு …

Read More »

காணிகளில் இராணுவம்! வீதிகளில் தமிழ் மக்கள்!! – ஐ.நாவின் அகதிகளுக்கான தூதரகப் பணிப்பாளரிடம் விக்கி சுட்டிக்காட்டு

“வடக்கில் தமிழ் மக்களின் காணிகள் பலவற்றில் இராணுவத்தினர் இன்னமும் உள்ளனர். அந்த மக்களோ வீதிகளில் அமர்ந்திருந்து தமது சொந்த மண்ணை மீட்பதற்காகத் தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்த அவல நிலைக்கு உடன் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.” – இவ்வாறு ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான தூதரகப் பணிப்பாளர் டெய்ஜி டெலிடம் தெரிவித்தார் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன். “தமிழ் மக்களுடைய காணிகளில் இராணுவம் இருப்பதால், வடக்கில் அகதி வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டுவர …

Read More »

பாபுல், பீடா, மாவா விற்றால் ஒருவருட சிறைத்தண்டனை! – அமைச்சர் ராஜித தெரிவிப்பு

பாபுல், பீடா, மாவா, ஹான்ஸ், புகையிலைத் தூள், இறக்குமதி செய்யப்படும் பாக்கு, இலத்திரனில் சிகரெட்  ஆகியவற்றை தடைசெய்வதற்கு நாடாளுமன்றம் அனுமதி வழங்கியது. இவற்றை விற்பனை செய்தால் அபராதம் அல்லது ஒருவருட சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை புகையிலை மற்றும் மதுசாரம் மீதான தேசிய அதிகார சபையின் ஒழுங்கு விதிகளை அங்கீகரிப்பதற்கான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் …

Read More »

ஐ.நா. தீர்மானத்தை இலங்கை அரசு நடைமுறைப்படுத்துவது எப்படி? – கால அட்டவணை தயாரிக்கவுள்ளது கூட்டமைப்பு

இலங்கை அரசுக்கு வழங்கப்பட்டுள்ள இரண்டு வருட கால அவகாசத்தில், ஐ.நா. தீர்மானத்தை எப்படி நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கால அட்டவணையைத் தயாரிப்பதற்கு எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. வடக்கில் நடைபெறும் தொடர் போராட்டங்கள் சம்பந்தமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரையும் அவசரமாகச் சந்திப்பதற்கும் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் …

Read More »

உணவு ஒவ்வாமை இறக்காமத்தில் மூவர் பலி

அம்பாறை – இறக்காமம் பகுதியில் உணவு ஒவ்வாமை காரணமாக மூவர் உயிரிழந்துள்ளதுடன் 600 ற்கும் மேற்பட்டவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இறக்காமம் பிரதேசத்திலுள்ள பள்ளிவாசல் ஒன்றில் கடந்த புதன்கிழமை நிகழ்வு ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது வழங்கப்பட்ட உணவை உட்கொண்டவர்களே ஒவ்வாமை காரணமாக பாதிக்கப்பட்ட நிலையில் இறக்காமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் மூவர் உயிரிழந்த நிலையில் ஏனையோர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இறக்காமம் பிரதேசத்தில் பாதிப்புக்குள்ளான மக்களுக்கு வைத்திய சிகிச்சைகளை உடனடியாக …

Read More »

நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலை அரசாங்கத்தின் வசம்

நெவில் பெர்ணான்டோ போதனா வைத்தியசாலையை சுகாதார அமைச்சின் கீழ் கொண்டு வந்து அதனை போதனா வைத்தியசாலையாக நடத்திச் செல்ல தேவையான நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாக, அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். மாலபே தனியார் மருத்துவக் கல்லூரி சர்ச்சை குறித்த தீர்வு திட்டம் இன்று அரசாங்கத்தால் வௌியிடப்படும் என முன்னதாக பாராளுமன்றத்தில் அவர் கூறியிருந்தார். இதற்கமைய சட்டமா அதிபரின் அனுமதியுடன் இலங்கை வைத்திய சபையால் முன்வைக்கப்பட்ட இலங்கை வைத்திய கல்வி குறித்த குறைந்த …

Read More »

முள்ளிக்குளத்தை யுத்தம் இடம்பெற்ற பிரதேசமாக மாற்றியது கடற்படை

யுத்தம் இடம்பெறாத மன்னார் – முள்ளிக்குளம் கிராமத்தில் இருந்து ஸ்ரீலங்கா கடற்படையினரால் தாம் கட்டாயமாக வெளியேற்றப்பட்டதாக அந்த கிராம மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். மூன்று நாட்களில் முள்ளிக்குளத்தில் இருந்து வெளியேறுவோம் என வாக்குறுதி வழங்கிய ஸ்ரீலங்கா கடற்படை இன்று பத்து வருடங்கள் கடந்துள்ள நிலையில், வாழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றவில்லை எனவும் மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். மன்னார் மறைமாவட்ட ஆயர் இல்லத்திற்கு சொந்தமான 53 ஏக்கர் காணியில் குடியிருந்த முள்ளிக்குளம் கிராம மக்கள் …

Read More »

தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு விசேட பஸ் சேவைகள்

தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சொந்த இடங்களுக்கு செல்லும் மக்களின் நலன்கருதி நேற்று முதல் மேலதிக பஸ் வண்டிகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இந்த மேலதிக பஸ்சேவை எதிர்வரும் 14ம் திகதி வரை இடம்பெறும் என்று இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் ரமால் சிறிவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பு – புறக்கோட்டை பிரதான பஸ் நிலையத்திலிருந்து மேலதிகமாக 3900 பஸ்பயணங்கள் இடம்பெறவிருக்கின்றன. சொந்த இடங்களிலிருந்து பிரதான நகரங்களுக்கு திரும்பும் மக்களின் நலன்கருதி எதிர்வரும் …

Read More »

நெடுந்தீவு சிறுமி கொலை சந்தேக நபருக்கு மரண தண்டனை

நெடுந்தீவு 10 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த ஜேசுதாஸ் லக்சாயினி என்ற சிறுமி பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய கந்தசாமி ஜெகதீஸ்வரன் என்ற சந்தேக நபருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மரண தண்டனை விதித்து இன்று தீர்ப்பளித்துள்ளார். கடந்த 2012ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3 ஆம் திகதி நெடுந்தீவு 10ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த ஜேசுதாஸ் லக்சாயினி எனும் 12 …

Read More »
error: Content is protected!