Wednesday , November 21 2018
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் (page 10)

இலங்கை செய்திகள்

Srilankan News

கிளிநொச்சி வைத்தியசாலையில் 12 வயது சிறுமிக்கு பிரசவம்! திகைத்துபோன மருத்துவர்கள்

மல்லாவியில் இருந்து கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அம்புலன்ஸில் அழைத்துவரப்பட்ட 12 வயது சிறுமி போகும் வழியிலே பிரசவ வலி ஏற்பட்டு குழந்தையும் பிறந்தது. பின் கிளிநொச்சி வைத்தியசாலையில் தாயும் சேயும் அனுமதிக்கபட்டனர்.இந்த 12 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்த செய்தி மருத்துவர்களிடையே சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Read More »

இலங்கை அதிபராகும் கோத்தாவின் கனவு…!

டி.ஏ.ராஜபக்ச நினைவிடம் அமைப்பதில் 80 மில்லியன் ரூபா மோசடி செய்யப்பட்டது தொடர்பான குற்றச்சாட்டை எதிர்கொள்வதற்காக, அடுத்த அதிபர் வேட்பாளராகப் போட்டியிடுவார் என நம்பப்படும் கோத்தாபய ராஜபக்ச கடந்த செவ்வாய்க்கிழமை புதிதாக உருவாக்கப்பட்ட மேல்நீதிமன்றுக்குச் சென்றிருந்தார். அங்கு, கோத்தாபய ராஜபக்சவிடம் ‘மகிந்த தங்களை அடுத்த அதிபர் வேட்பாளராகக் களமிறக்காது, தங்களின் சகோதரரான பசில் ராஜபக்சவை அடுத்த அதிபர் வேட்பாளராக களமிறக்கவுள்ளதாக கூறப்படுகிறது’ என ஊடகங்கள் கேள்வியெழுப்பின. ‘எமது குடும்பத்திற்குள் பிரிவை ஏற்படுத்துவதை …

Read More »

அரசாங்கத்துடன் அமைச்சர் சம்பிக்க கருத்து மோதல்

இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு முன்னிலையில் கொண்டுவரப்பட்டுள்ள பிரேரணைகளை நீக்கிக் கொள்வதற்கு இராஜதந்திர ரீதியிலான முன்னெடுப்புக்கள் அமுல்படுத்தப்பட வேண்டும் என மாநகர மற்றம் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். நேற்று (23) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தக் கருத்தை அமைச்சர் முன்வைத்துள்ளார். இதுவல்லாமல், காணாமல் போனோர் ஆணைக்குழு, காணாமல் போனோர் செயலகங்கள், இழப்புக்களுக்கான நஷ்டஈடு வழங்குதல் ஆகிய நடவடிக்கைகள் மூலமாக …

Read More »

ஆறு இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட ஆறு இந்திய மீனவர்களை கடற்படையினர் நேற்று திங்கட்கிழமை கைது செய்துள்ளனர். தமிழகம் நாகை மாவட்டத்தை சேர்ந்த ஆறு மீனவர்கள் இழுவை மடி படகில் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்டு இருந்த வேளை கடற்படையினர் அவர்களை கைது செய்ததுடன் , அவர்கள் பயணித்த படகையும் கைபற்றினார்கள். குறித்த மீனவர்களை இன்றைய தினம் காங்கேசன்துறை கடற்படை தளத்திற்கு கொண்டு …

Read More »

மலையக மக்களுக்கு நிரந்தர காணி உறுதி

மலையக மக்களுக்கு நிரந்தர காணி உறுதி – டிசம்பர் 31ம் திகதிக்கு முன் வடக்கு கிழக்கு காணிகள் விடுவிப்பு -ஜனாதிபதி மலையக மக்களுக்கு முதற்தடவையாக நிரந்தர காணி உறுதிப்பத்திரங்களை வழங்குவதற்காக ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார். நேற்று நடைபெற்ற கலந்துரையாடலின்போது, மலையக மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, வடக்கு, கிழக்கு பகுதிகளில் பாதுகாப்புத் தரப்பினரின் காணிகளை எதிர்வரும் டிசம்பர் 31ஆம் …

Read More »

ரோ அமைப்பை பற்றிய உண்மை வெளியிட வேண்டும்! நாமல் வேண்டுகோள்

இந்திய புலனாய்வு அமைப்பான ரோவிடம் பணம் பெறும் இரு அமைச்சர்களின் விபரங்களை ஜனாதிபதியும் பிரதமரும் வெளியிடவேண்டும் என நாமல் ராஜபக்ச வேண்டுகோள் விடுத்துள்ளார். சில அமைச்சர்கள் ரோவிடமிருந்து பணம் பெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள அவர் இது உண்மையானால் இதுவொரு தேசிய பிரச்சினை என தெரிவித்துள்ளார். அதேவேளை இது சர்வதேசரீதியில் பாதிப்பை ஏற்படுத்தும் விடயம் எனவும் குறிப்பிட்டுள்ள நாமல்ராஜபக்ச இந்த அமைச்சர்களை அம்பலப்படுத்தவேண்டிய பொறுப்பு ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் உள்ளது எனவும் …

Read More »

டிசம்பர் 31க்கு முன் மைத்திரியின் முக்கிய அறிவிப்பு

வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் பாதுகாப்பு படையினரின் வசமுள்ள காணிகளை அதன் உரிமையாளர்களிடம் கையளிக்கும் நடவடிக்கையினை இவ்வருடம் டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் நிறைவு செய்ய தேவையான பங்களிப்பினை வழங்குமாறு ஜனாதிபதி மாகாண ஆளுநர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். 2018ஆம் ஆண்டிற்கான மாகாண சபை செயற்பாடுகள் மற்றும் அவற்றின் முன்னேற்றம் குறித்த கலந்துரையாடல் இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றபோதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இந்த பணிப்புரையினை விடுத்துள்ளார். சகல மாகாணங்களினதும் ஆளுநர்கள், …

Read More »

ரணிலை அவசரமாக சந்தித்தார் சிறிசேன!

இந்திய விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பியுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளார். அவசர அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின்போது தனது இந்திய விஜயம் குறித்து பிரதமர் ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்தியுள்ளார். இந்தியாவின் நிதியுதவியுடன் இலங்கையில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள் குறித்தே பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கையில் முன்னெடுக்கப்படும் இந்தியாவின் அபிவிருத்தி திட்டங்கள் குறித்து இந்திய பிரதமர் வெளியிட்டுள்ள …

Read More »

இணுவிலை துண்டாடுவதற்கு எதிராக மௌனப் போராட்டம்

யாழ்ப்பாணம் – இணுவில் பிரதேசத்தின் இரு பகுதிகளை கோண்டாவிலுடன் இணைப்பதற்கு மேற்கொள்ளப்பட்டுவரும் முயற்சிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மௌனப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இணுவில் கந்தசுவாமி கோவில் முன்றலில் இருந்து இன்று (திங்கட்கிழமை) காலை ஆரம்பிக்கப்பட்ட மௌன ஊர்வலம், உடுவில் பிரதேச செயலக அலுவலகத்தை சென்றடைந்து, உடுவில் பிரதேச செயலாளரிடம் மனு ஒன்றினை கையளித்தலுடன் நிறைவு பெற்றது. இதன்போது அரசியல் சுயநலன்களுக்காக எல்லை மீள் நிர்ணயத்தின்போது, இணுவில் கிராமத்தின் இரு பகுதிகளை கோண்டாவிலுடன் …

Read More »

பொலிஸ் பாதுகாப்பை கோரும் முதலமைச்சர்

பதவிக்காலம் நிறைவடைந்த பின்னரும் தமக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமென வட.மாகாண முதலமைச்சர், எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட மூவர் விண்ணப்பித்துள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. வடக்கு மாகாண சபையின் ஆயுட்காலம் நாளை மறுதினம் புதன்கிழமை நள்ளிரவுடன் முடிவுக்கு வருகின்றது. இந்நிலையில் பொலிஸ் பாதுகாப்பினை பெற்றுக்கொண்டுள்ள வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், எதிர்க்கட்சி உறுப்பினர் சி.தவராசா உட்பட மூவர், தமக்கு பதவி காலம் முடிவடைந்த பின்னரும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமென விண்ணப்பித்து …

Read More »
error: Content is protected!