Sunday , March 25 2018
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் (page 10)

இலங்கை செய்திகள்

Srilankan News

சிங்களமயமாகும் கிளிநொச்சி வைத்தியசாலை : தமிழர்கள் அதிர்ச்சி

கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் உயிர்காக்கும் மருத்துவ சேவைகளைப் பெற்றுக்கொள்வதில் தமிழ் மக்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கிவருவதாக மக்கள் தமது ஆதங்கத்தை தெரிவித்தனர். கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு நாளாந்தம் ஆயிரக்கணக்கான பொது மக்கள் மருத்துவச் சேவையை நாடிவருகின்றனர். ஆனால், இந்த வைத்தியசாலையின் அண்மைக்கால போக்குகள் மக்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் முல்லைத்தீவுக்கு அடுத்தபடியாக கிளிநொச்சி மாவட்டமே காணப்படுகிறது. யுத்தம் நிறைவுக்குக் கொண்டுவரப்பட்டு 9 ஆண்டுகள் கடந்துவிட்டன. …

Read More »

தனிமையில் இருந்த இளைஞன் சடலமாக மீட்பு: மனநலம் பாதிக்கப்பட்டவரா?

வவுனியா – குருமன்காடு, காளி கோவில் வீதி முதலாம் ஒழுங்கையில் இன்று பிற்பகல் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கலைச்செல்வன் எனும் 28 வயது இளைஞரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. தாயார் இன்று காலை வேலைக்கு சென்ற சமயத்தில் குறித்த இளைஞர் தனிமையில் வீட்டில் இருந்துள்ளார். இதனையடுத்து மீண்டும் தாயார் வீடு திரும்பிய போது மகன் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதை அவதானித்துள்ளார். அத்துடன், இளைஞரின் …

Read More »

பிரதமர் ரணிலுக்கு எச்சரிக்கை!

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வரப்போவதாக, ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த இராஜாங்க அமைச்சர் பாலித ரங்க பண்டார எச்சரிக்கை விடுத்துள்ளார். புத்தளத்தில் நேற்று நடந்த கூட்டம் ஒன்றில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், நாட்டு மக்கள் ஐதேகவின் தலைமைத்துவத்தில் மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர். கட்சியின் தலைமைத்துவத்தை மாற்றியமைக்காமல், வெறுமனே அமைச்சரவையை மாற்றியமைப்பதில் அர்த்தமில்லை. கட்சித் தலைமைத்துவத்தில் மாற்றம் செய்யப்படாவிடின், பிரதமர் …

Read More »

அமைச்சரின் வீட்டில் இரகசியமாக கூடிய ஐ.தே.கட்சியினர்

ஐக்கிய தேசியக்கட்சியின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் இரகசியமான பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டாரவின் வீட்டில் நேற்றிரவு இந்த இரகசிய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இதில் விஜேதாச ராஜபக்ச, வசந்த சேனாநாயக்க உள்ளிட்ட அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துக்கொண்டுள்ளனர். பேச்சுவார்த்தையில் ஐக்கிய தேசியக்கட்சியின் இரண்டாம் நிலை முக்கியஸ்தர்கள் தொலைபேசி வாயிலாக இணைந்துக்கொண்டதாக கூறப்படுகிறது. அதேவேளை, ஐக்கிய தேசியக்கட்சியில் மேற்கொள்ள வேண்டிய மாற்றத்தை நல்ல முறையிலோ அல்லது …

Read More »

ரணிலின் பதவி தற்காலிகமானது! விரைவில் பதவி கைமாற்றப்படும்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தற்காலிகமாகவே சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராக பதவியேற்றுள்ளார் என அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இந்நிலையில், விரைவில் இப்பதவி வேறு ஒருவருக்கு மாற்றப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி காரியாலயத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். நல்லாட்சி அரசாங்கத்தின் இரண்டாவது அமைச்சரவை மாற்றம் நேற்று மேற்கொள்ளப்பட்ட நிலையில் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராக பிரதமர் ரணில் நியமிக்கப்பட்டார். …

Read More »

திருடர்களை பிடிக்கும் பதவியை ரணிலிடம் மைத்திரி வழங்கியது ஏன்?

கடந்த உள்ளூராட்சி தேர்தல் மேடைகளில் ரணில் திருடன் என்ற வார்த்தையை பயன்படுத்திய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தற்போது திருடர்களை பிடிக்கும் கடமையை பிரதமர் ரணிலிடம் ஒப்படைத்துள்ளார். உள்ளூராட்சி தேர்தல் ஊடாக பிரதமரை நீக்குவதற்கு ஜனாதிபதி தீவிர முயற்சி மேற்கொண்ட போதிலும், அவரது பதவியில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. எனினும் தற்போது பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பலத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு பதவி பிரதமருக்கு வழக்கப்பட்டுள்ளது. …

Read More »

மனிய உரிமை மீறல் குற்றங்களுக்காக கொழும்பு மீது பன்னாட்டு விசாரணை!!

இலங்­கை­யில் இடம்­பெற்ற மனித உரிமை மீறல்­கள் மற்­றும் மனித குலத்­துக்கு எதி­ரான குற்­றங்­க­ளுக்­குப் பொறுப்­புக்­ கூ­று­வதை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்­காக அதன் மீது உலக சட்­டத்­தின் ஆட்­சியை நிலை­நி­றுத்­தும் வகை­யி­லான (அதா­வது பன்­னாட்டு நீதி விசா­ரணை போன்ற ஒன்று) தெரி­வு­கள் உட்­பட மாற்று வழி­களை உலக நாடு­கள் ஆரா­ய ­வேண்­டும் என்று வலி­யு­றுத்­தி­யுள்­ளார் ஐக்­கிய நாடு­கள் மனித உரி­மை­கள் ஆணை­யா­ளர் சயிட் அல் ஹூசைன். இலங்­கை­யில் பொறுப்­புக்­கூ­ற­லை­யும் நல்­லி­ணக்­கத்­தை­யும் ஊக்­கு­விக்­கும் வகை­யில் கொழும்பு …

Read More »

ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் வகுப்புகள் நடத்த தடை

கிழக்கு மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் வகுப்புகளை பகல் ஒரு மணிவரை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண கல்வி கலாச்சார அமைச்சு சுற்றறிக்கை மூலம் அறிவித்துள்ளது. கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திசாநாயக்காவினால் மாகாண கல்விப் பணிப்பாளர் மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருக்கிறது. ஆளுநரின் பணிப்புரைக்கமைவாக ஞாயிறு தினங்களில் சமூக ஆன்மீக வளர்ச்சிக்கு நடாத்தப்படும் சமய வகுப்புகள் மாணவர்களுக்கு நன்மை பயக்கக்கூடியது. எனவே அன்று பகல் …

Read More »

சரத் பொன்சேகாவுக்கு புதிய அமைச்சு பதவி! அச்சத்தில் மகிந்த தரப்பு!

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு பொலிஸ் துறைக்கு பொறுப்பான சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு வழங்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியதை அடுத்து ஒரு தரப்பு கலவரமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் ஒரு தரப்பு மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட தரப்பு என தெரியவருகிறது. கடந்த அரசாங்கத்தின் காலத்தில் நடந்த, காணாமல் போன சம்பவங்கள், ஆட்கடத்தல்,கொலைகள் மற்றும் அச்சுறுத்தல் உட்பட பல குற்றச் செயல்களுடன் முப்படை உறுப்பினர்கள் சம்பந்தப்பட்டுள்ளதாக …

Read More »

ஈ.பி.டி.பி. மற்றும் த.ம.வி.பு. கட்சியுடன் பேச்சு நடத்தக் கூடாது!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு வழங்க முன்வரும் தமிழ்க் கட்சிகளுடன் பேச்சு நடத்துவது என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் நேற்று முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேவேளை, ஈ.பி.டி.பி. மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியுடன் பேச்சு நடத்தக் கூடாது என்று, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்சித் தலைவர்கள் கூட்டம், கொழும்பில் நேற்று மாலை 5.30 மணி தொடக்கம் …

Read More »
error: Content is protected!