Tuesday , August 14 2018
Breaking News
Home / செய்திகள் / இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள்

Srilankan News

செஞ்சோலையில் படுகொலை செய்யப்பட்ட 61 மாணவிகளின் 12 ஆம் ஆண்டு நினைவுதினம்

முல்லைத்தீவு – செஞ்சோலை சிறுவர் இல்லத்தின் மீது இலங்கை வான்படையினர் நடத்திய குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட 61 மாணவிகளின் 12 ஆம் ஆண்டு நினைவுதினம் இன்றாகும். இவ்வாறு படுகொலை செய்யப்பட்ட மாணவிகளின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று காலை 9.00 மணிக்கு முல்லைத்தீவு வள்ளிபுரம் இடைக்காட்டு சந்தியில் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. 2006ஆம் ஆண்டு காலை 6 மணியளவில் இலங்கை வான்படையின் இரண்டு கிபிர் போர் விமானங்கள் செஞ்சோலை சிறுவர் …

Read More »

மஹிந்த அணிக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை

பிரதமர் பதவியை பெற்றுக்கொள்ள போவதாக கூறி வந்தவர்கள் தற்போது வெட்கமில்லாமல் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு அடிபிடிப்படும் நிலைமைக்கு சென்றுள்ளதாக அமைச்சர் மகிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார். ஹம்பாந்தோட்டையில் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். கூட்டு எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்காக தற்போது ஒருவரோடு ஒருவர் மோதிக்கொள்கின்றனர். அதேபோல், கூட்டு எதிர்க்கட்சி குற்றம் சுமத்தும் வகையில் தேசிய வளங்கள் எதனையும் தற்போதைய அரசாங்கம் விற்பனை செய்யவில்லை. எமது …

Read More »

விடுதலைப் புலிகளுடன் யுத்தம்! இராணுவ அதிகாரிகளை இரகசியமாக சந்தித்த மைத்திரி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஓய்வு பெற்ற படைதளபதிகளை இரகசியமாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளாதாக தகவல் வெளியாகியுள்ளது. விடுதலை புலிகளுக்கு எதிரான யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதை, முறையாக ஆவணப்படுத்த வேண்டுமென ஆர்வம்காட்டி வரும் ஜனாதிபதி, இந்த சந்திப்பை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றை மேற்கோள்காட்டி வெளியாகியுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த செய்தியில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “கடந்த ஆறாம் திகதி இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. நடைபெற்று முடிந்த …

Read More »

பதுளையில் பதற்றத்தை ஏற்படுத்திய சம்பவம்:ஒருவர் பலி

பதுளை கொகோவத்த பிரதேச வர்த்தக நிலையம் ஒன்றில் தீ பரவியதினால் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று அதிகாலை 1.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இரு மாடிகளை கொண்ட வர்த்தக நிலையம் ஒன்றில் இவ்வாறு தீபரவியுள்ளதுடன், பதுளை காவற்துறை மற்றும் தீயணைப்பு பிரிவு தீயணைப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. பதுளை பிரிதேசத்தினை சேர்ந்த 40 வயதுடைய நபர் தீ பரவிய போது வர்த்தக நிலையத்தில் இருந்துள்ள நிலையில், குறித்த நபர் …

Read More »

இனிமேல் யாழ்ப்பாணத்தில் அதிரடி வேட்டை! மக்களிற்கு முக்கிய அறிவித்தல்

யாழ்ப்பாணத்தில் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் நோக்கில் குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றவர்கள் தொடர்பில் தகவல் வழங்க தொலைபேசி இலக்கம் ஒன்று காவல்துறையினரால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய, 076 609 3030 என்ற இலக்கத்திற்கு குறித்த தகவல்களை வழங்குமாறு வட மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிக் காவல்துறை அதிகாரி இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து யாழ்ப்பாணம், கோப்பாய் மற்றும் சுன்னாகம் பகுதிகளில் துண்டுப் பிரசுரங்கள் ஊடாக பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், குற்றச் …

Read More »

யாழ்ப்பாணம் அரா­லிப் பகு­தி­யில் நேற்­றி­ரவு பதற்றத்தை ஏற்படுத்திய சம்பவம்

யாழ்ப்பாணம் அரா­லிப் பகு­தி­யில் கடந்த சில வாரங்­க­ளாக வீடு­கள் மீது கல்­வீச்சு தாக்­கு­தல் நடை­பெற்று வந்த நிலை­யில் தற்­போது நவா­லிப் பகு­திக்­கும் அது பர­வி­யுள்­ளது. நவாலி வடக்கு, சங்­க­ரத்தை பிர­தான வீதி­யில் கேணி­ய­டிப் பகு­தி­யி­லுள்ள வீட்­டின் மீது நேற்­றி­ரவு 7.30 மணி­ய­ள­வில் சர­மா­ரி­யாக கற்­கள் வீசப்­பட்­டுள்­ளது. வீட்­டின் சீற் உடைந் துள்­ளது. தெய்­வா­தீ­ன­மாக வீட்­டில் உள்­ள­வர்­க­ளுக்கு காயம் ஏற்­ப­ட­வில்லை. அந்­தப் பகு­தி­யைச் சேர்ந்த பிர­தேச சபை உறுப்­பி­னர் வன்­னி­ய­சே­க­ரம் இது …

Read More »

யாழ். மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை!

யாழ். குடா நாட்டில் சமூகவிரோத செயற்பாடுகள் தலைதூக்கியுள்ள நிலையில், குடா நாட்டு மக்களுக்கு பொலிஸார் முக்கிய கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். இதன்படி, பொது மக்களுக்கு இடையூரான சம்பவங்கள் இடம்பெற்றால், அது குறித்து 076-609-3030 என்ற இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி தெரிவிக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். இதேவேளை, யாழ். குடா நாட்டில் அண்மை காலமாக வாள்வெட்டு, கொள்ளை, உள்ளிட்ட பல்வேறு சமூகவிரோத செயற்பாடுகள் வெகுவாக அதிகரித்துள்ளன. இந்நிலையிலேயே, பொது மக்களின் நலன் கருதி …

Read More »

யாழ் மருத்துவமனையில் பொலிஸார் அட்டகாசம்

தெல்­லிப்­பழை மருத்­து­வ­ம­னை­யில் நேற்­று­முன்­தி­ன­மி­ரவு கட­மை­யில் இருந்த மருத்­து­வ­ரு­டன் மது­போ­தை­யில் சென்ற பொலி­ஸார் தகாத வார்த்­தை­க­ளால் கதைத்­துக் குழப்­பம் ஏற்­ப­டுத்­தி­யுள்­ள­னர் என்று குற்­றஞ்­சாட்­டப்­பட்­டுள்­ளது. காய­ம­டைந்த மூதாட்டி ஒரு­வரை 9 மணி­ய­ள­வில் முச்­சக்­கர வண்­டிச் சாரதி மருத்­து­வ­ம­னைக்கு அழைத்­துச் சென்­றுள்­ள­னர். மூதாட்­டி­யைப் பொறுப்­பேற்ற மருத்­து­வர் மூதாட்­டிக்கு என்ன நடந்­தது என்று வின­வி­யுள்­ளார். மூதாட்­டிக்கு இடம்­பெற்ற சம்­ப­வம் தொடர்­பில் தெரி­யாது, ஆனால் மூதாட்­டியை காங்­கே­சன்­து­றைப் பொலி­ஸாரே ஏற்­றி­ய­னுப்­பி­னர் என்று முச்­சக்­கர வண்­டிச் சாரதி தெரி­வித்­துள்­ளார். …

Read More »

கிளிநொச்சியில் இரவு வேளையில் ஏற்பட்ட பதற்றத்திற்கு காரணம் என்ன?

கிளிநொச்சி – பரந்தன் பகுதியில் டிப்பர் வாகனத்தைச் செலுத்திச் சென்ற சாரதி ஒருவரை விசேட அதிரடிப்படையினர் நேற்று இரவு கடுமையாக தாக்கிய சம்பவம் குறித்து சில தகவல்கள் தெரியவந்துள்ளன. இதில், குறித்த சாரதி பந்தன் – முல்லைத்தீவு ஏ-35 வீதியூடாக புவிச்சரிதவியல் அளவை சுரங்கங்களின் பணியகத்தினால் வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரத்துடன் மணல் ஏற்றிச் சென்றுள்ளார். குறித்த டிப்பர் வாகனத்தை பின் தொடர்ந்து சென்ற விசேட அதிரடிப் படையினர் பரந்தன் சந்திப் பகுதியல் …

Read More »

கருணாநிதியின் மறைவுக்கு வடமாகாண சபையில் அஞ்சலி

முத்தமிழ் பேரறிஞர் கலைஞர் மு.கருணாநிதியின் மறைவுக்கு வடமாகாண சபையில் 2 நிமிடங்கள் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. வடமாகாண சபையின் 129ஆவது அமர்வு இன்று காலை ஆரம்பமானது. இதில் முத்தமிழ் அறிஞர் மு.கருணாநிதியின் மறைவுக்கு வடமாகாணசபை இரங்கள் தெரிவித்து, 2 நிமிட மெளன அஞ்சலியினை செலுத்துமாறு அவைத் தலைவர் சீ.வி. கே.சிவஞானம் அறிவித்தார். இதனையடுத்து அனைவரும் எழுந்து நின்று 2 நிமிட மெளன அஞ்சலி செலுத்தியதுடன், முதலமைச்சர் சீ.வி. விக்னேஷ்வரன், எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா …

Read More »
error: Content is protected!