Thursday , April 25 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் (page 315)

இலங்கை செய்திகள்

புலிகளின் செயற்பாடுகள் பயங்கரவாத நடவடிக்கையாக ஏற்க முடியாது : ஐரோப்பிய நீதிமன்றம்

புலிகளின் செயற்பாடுகள் பயங்கரவாத நடவடிக்கை

புலிகளின் செயற்பாடுகள் பயங்கரவாத நடவடிக்கையாக ஏற்க முடியாது : ஐரோப்பிய நீதிமன்றம் புலிகள் அமைப்பினை பயங்கரவாத அமைப்புக்கள் பட்டியலிலிருந்து நீக்க மறுக்கும் வகையிலான தீர்ப்பொன்றினை ஐரோப்பிய நீதிமன்றம் வழங்கியுள்ளது. சர்வதேச மனிதநேயச் சட்டத்தின் கீழ், போரில் ஈடுபடும் ஆயுதப் படைகளின் செயற்பாடுகள் பயங்கரவாத நடவடிக்கைகள் என்ற வகைக்குள் அடக்கப்படலாம் என்றும் ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் 2006ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் அமைப்பினை தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புக்களுக்கான …

Read More »

காணாமல்போனோரின் விடயத்தைக் காணாமல் ஆக்க முயல்கின்றது அரசு! – உறவினர்கள் கடும் விசனம்

காணாமல்போனோரின் விடயத்தை

காணாமல்போனோரின் விடயத்தைக் காணாமல் ஆக்க முயல்கின்றது அரசு! – உறவினர்கள் கடும் விசனம் “காலத்தை இழுத்தடித்து – எங்களை அலைக்கழித்து, காணாமல்போனோர் பிரச்சினை காணாமல்போகச் செய்வதற்குக் நல்லாட்சி அரசு முயற்சிக்கின்றதா ? இவ்வளவு நாட்களாகப் போராடி வருகின்ற எங்களை ஏன் கண்டுகொள்ளாமல் இருக்கின்றது இந்த அரசு.” – இவ்வாறு போராட்டங்களில் ஈடுபட்டுள்ள காணாமல்போனோரின் உறவினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் 24 ஆவது நாளாக …

Read More »

மஹிந்த நாளை ஊழல், மோசடி ஆணைக்குழுவுக்கு அழைப்பு!

மஹிந்த நாளை ஊழல், மோசடி ஆணைக்குழு

மஹிந்த நாளை ஊழல், மோசடி ஆணைக்குழுவுக்கு அழைப்பு! முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நாளை வியாழக்கிழமை ஊழல், மோசடி விசாரணை ஆணைக்குழுவின் முன் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டிருக்கின்றது என ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின்போது தனது பிரசார வேலைகளுக்காக தேசிய ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தைப் பயன்படுத்திய வகையில் அந்நிறுவனத்துக்குச் செலுத்தவேண்டிய 16 கோடி ரூபாவைச் செலுத்தத் தவறியுள்ளார் என்ற குற்றச்சாட்டின்கீழ் மஹிந்தவுக்கு எதிராக ஆணைக்குழுவில் செய்யப்பட்ட முறைப்பாடு …

Read More »

பன்னங்கண்டி மக்களுக்கு பொது அமைப்புக்கள் ஆதரவு

பன்னங்கண்டி மக்களுக்கு

பன்னங்கண்டி மக்களுக்கு பொது அமைப்புக்கள் ஆதரவு நிரந்தர காணி உரிமையுடன் கூடிய நிரந்தர வீட்டுத்திட்டத்தை வழங்குமாறு வலியுறுத்தி, பன்னங்கண்டி மக்கள் முன்னெடுத்துவரும் போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் வகையில் பொது அமைப்புக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கிளிநொச்சி – பன்னங்கண்டி பகுதியில் ஏ9 வீதியின் அருகில் முன்னெடுக்கப்பட்டுள்ள கவனயீர்ப்பு போராட்டம், தீர்வை எட்டும் நோக்குடன் இன்று 10 ஆவது நாளாக இடம்பெற்றுவருகின்றது. நிரந்தர காணி உரிமையை வலியுறுத்தி மக்கள் முன்னெடுத்துள்ள போராட்டத்துக்கு ஆதரவு …

Read More »

யாழில் பெண்ணொருவர் மீது கோடரி தாக்குதல்

யாழில் பெண்ணொருவர்

யாழில் பெண்ணொருவர் மீது கோடரி தாக்குதல் யாழ்.திருநெல்வேலி – ஆடியபாதம் பகுதியில் பெண்ணொருவர் கோடரி தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். ஆடியபாதம் பகுதியில் ஒப்பனை அலங்கார நிலையமொன்றை நடத்திவந்த குறித்த பெண்மீது சற்றுமுன் இத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அலங்கார நிலையத்திற்குள் புகுந்து இத் தாக்குதலை நடத்திய சந்தேகநபரை கைதுசெய்துள்ள யாழ். பொலிஸார், சம்பவத்தில் படுகாயமடைந்த பெண்ணை யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். தனிப்பட்ட விரோதமே இத் தாக்குதல் சம்பவத்திற்கு காரணமென ஆரம்பகட்ட விசாரணைகள் …

Read More »

36 கிராம் கஞ்சாவுடன் இளைஞர் ஒருவர் கைது

36 கிராம் கஞ்சாவுடன் இளைஞர் ஒருவர் கைது

36 கிராம் கஞ்சாவுடன் இளைஞர் ஒருவர் கைது. பருத்தித்துறை கற்கோவளம் பகுதியில் 35கிராம் கஞ்சாவினை உடமையில் வைத்திருந்த இளைஞர் ஒருவரை இரவு கைது செய்துள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர். கைதானவர் அதே பகுதியினை சேர்ந்த 36வயதுடைய நபர் என பொலிஸார் கூறினர். கிடைக்கபெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதுடன் உடமையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சா சரை ஒன்றும் கைபெற்றப்பட்டிருந்தது.           …

Read More »

மன்னார் பிரதான வீதியில் விபத்து: ஒருவர் படுகாயம்

மன்னார் பிரதான வீதியில் விபத்து

மன்னார் பிரதான வீதியில் விபத்து: ஒருவர் படுகாயம் மன்னார் – தாழ்வுபாடு பிரதான வீதி எழுத்தூர் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்து மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று (திங்கட்கிழமை) மன்னாரில் இருந்து எழுத்தூரை நோக்கி பயணித்த லொறியும், தாழ்வுபாடு பிரதான வீதியூடாக மன்னார் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் மோதியே குறித்த விபத்து நேர்ந்துள்ளது. மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞனே சம்பவத்தில் படுகாயமடைந்துள்ளார். விபத்து தொடர்பான …

Read More »

இலங்கை கொடியுடன் சென்ற கப்பல் சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தல்

இலங்கை கொடியுடன் சென்ற கப்பல்

இலங்கை கொடியுடன் சென்ற கப்பல் சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தல் இலங்கை தேசியக் கொடியுடன் சென்ற எரிபொருள் நிரப்பிய கப்பல் ஒன்றை சோமாலிய கடற்கொள்ளையர்கள் கடத்திச் சென்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. டுபாய்க்கு சொந்தமான Aris – 13 என்ற இக் கப்பல் எட்டு கப்பல் பணியாளர்களுடன் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த கப்பலில் இருந்து அபாய சமிக்ஞை பிறப்பிக்கப்பட்டதாகவும், பின்னர் கப்பலில் இருந்த கடல் கண்காணிப்பு கட்டமைப்பு செயலிழந்ததாகவும் கடற்கொள்ளை …

Read More »

கால அவகாசம் கொடுப்பதற்கு கூட்டமைப்பு யார் ?

கால அவகாசம் - சி.க செந்திவேல்

கால அவகாசம் கொடுப்பதற்கு கூட்டமைப்பு யார் ? இணக்க அரசியல் என கூறிக்கொண்டு, சம்பந்தமற்ற கருத்துக்களை தமிழ் அரசியல்வாதிகள் வெளியிடுவதாக சம உரிமைக்கான மக்கள் இயக்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. யாழ் ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் பங்கேற்று கருத்து வெளியிட்ட, புதிய மாக்ஸ்சிச லெனின் கட்சியின் பொதுச் செயலாளர் சி.க செந்திவேல், இரண்டு வருட காலஅவகாசம் வழங்குவதை அமெரிக்காவும் மேற்குலகமுமே தீர்மானிக்கின்றது என குறிப்பிட்டார். வவுனியாவில் நேற்றுமுன்தினம் ஒன்று …

Read More »

தமிழர்களின் எதிர்ப்பை சுமந்திரன் சம்பாதிக்கிறார்

தமிழர்களின் எதிர்ப்பை சுமந்திரன் - மு.தம்பிராசா

தமிழர்களின் எதிர்ப்பை சுமந்திரன் சம்பாதிக்கிறார் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் விரும்பியோ விரும்பாமலோ தமிழ் மக்களின் எதிர்ப்பை சம்பாதித்துக் கொண்டுள்ளதாக அடக்கு முறைக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் மு.தம்பிராசா தெரிவித்தார். தனது அரசியல் வாழ்க்கையில் மக்களின் எதிர்ப்பினை சம்பாதித்தமை அவர் செய்த தவறு எனவும் அவர் குறிப்பிட்டார். யாழ்ப்பாண ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அத்துடன் நாடாளுமன்ற …

Read More »